நடிகர்களுக்காக குரல் கொடுக்க கோடானுகோடி ரசிகர்கள் இருக் காங்க... ஆனா தமிழ் சினிமாவில் ஹீரோயினைப் படுத்துற பாடு இருக்கே, அதை நாமதானே பாஸ் பேசணும்!
முழு நிர்வாணமா நடுராத்திரியில ஊரைச் சுத்தி வரணும்கிறதுல தொடங்கி, பூக்குழி இறங்குற வரைக்கும் நடிகைகளை மட்டும்தான் சோதனை எலியாக்குறீங்களே... ஏன் பாஸ் இப்படி?
ஹீரோ ஒரே நேரத்துல ரெண்டு ஹீரோயினுக்கு நூல் விட்டுக்கிட்டே இருக்கார்னா, கடைசியில் யாராவது ஒரு ஹீரோயின், ஹீரோவை அண்ணான்னு கூப்பிட்டாகணும்கிறதுதான் சினிமா விதி!
போலீஸ்காரருக்கோ, ராணுவ வீரருக்கு மனைவி யாகவோ ஒரு பெண், மஞ்சள் குங்குமத்தோட ரொம்ப பக்திமார்க்கமா காட்டப்பட்டால், அடுத்த சீன்லயே அவரோட கண வரைப் போட்டுத் தள்ளிட்டு குங்குமத்தை அழிச்சுட்டு அலையவிடப் போறாங்கனு அர்த்தம். ஏன் இந்தக் கொல வெறி?
அதென்ன பாஸ், ஹீரோயின் மட்டும்தான் எப்போ பார்த்தாலும் தற்கொலை முயற்சி பண்ற மாதிரியே காட்டுறீங்க? அது மட்டுமா, ஊர்ல இருக் கிற அம்புட்டு பயலும் அவனவன் வேலையைப் பார்க்கிறப்போ ஹீரோதான் கரெக்டா கிணத்துல குதிச்சு ஹீரோயினைக் காப்பாத் துறார். சுத்திமுத்தி யாருமே இல்லைனா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுற மாதிரி உதட்டோட உதடா தண்ணியை உறிஞ்சுறதுல தீவிரமா இறங் கிடுறார். ஹீரோயின் வாய் என்ன பம்ப்புசெட்டா சார்?
அதென்னங்க ஓடிப் போய் கல்யாணம் பண்றதுனா ஹீரோயின் மட்டும்தான் சூட்கேஸைத் தூக்கிட்டு வர்றாங்க... ஹீரோ ஹாயா வந்து பிக்அப் பண்ணிட்டுப் போறார்!
ஹீரோயின் ராங்கி பண்றதும் ஹீரோ அவளை அடக்குறதும் அப்புறமா காதல் முளைக்கிறதும்... ஹீரோயினை நக்கலடித்து சீண்டி, தீண்டி, விரட்டி, உருட்டி நக்கல் பண்ற மாதிரி ஒரு பாட்டு வைக்கலைனா சாமி குத்தம் ஆயிடும் போல!
மாஸ் ஹீரோ படம்னா, ஹீரோயின் நிலைமை அந்தோ பரிதாபம்தான். தொடக்கக் காட்சிகளில் ஹீரோயினை வம்பி ழுத்து அக்மார்க் பொறுக்கித்தனம் பண்ற ஹீரோவைத்தான் இவர் கட்டாயம் லவ் பண்ணியாகணும். வேற சாய்ஸே இல்ல!
டூயட் பாட்டிலும்கூட ஓரவஞ்சனை. பனிப்பிரதேசத்துல மைனஸ் டிகிரியில் எடுக்குற டூயட் காட்சியில ஹீரோ மட்டும் ஸ்வெட்டர் கிளவுஸ்னு எக்கச்சக்கமா டிரெஸ் பண்ணியிருப்பார். ஹீரோயின் மட்டும் டூ பீஸ்ல பரதநாட்டியம் ஆடணும். அந்தக் குளிர்ல ஸ்வெட்டர் இல்லைனா பரதநாட்டியம் என்ன, குச்சிப்புடி, கதக்களி, தக்காளினு அம்புட்டு டான்சும் தன்னால வருமே டவுசருங்களா!
அந்த வயது முதிர்ந்த ஹீரோவுக்காக டூயட்டையே சிங்கிள்யட்டாக(!) மாற்றி யிருப்பார்கள். அந்த ஹீரோ சும்மா சும்மா நடந்துகிட்டும் க்ளோசப்ல உதட்டை சுழிச்சுக்கிட்டு மட்டும் இருப்பார். அந்த ஹீரோயின் அவரை சுற்றிச்சுற்றி அலுக்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். என்ன கொடுமை சார்!
நல்லவேளை, முனியாண்டி விலாஸ் முட்டைபரோட்டா போடுற தோசைக்கல் மாதிரி, தொப்புள்ல பம்பரம் விடுறது, ஆம்லேட் போடுறதுனு பயன்படுத்திக்கிட்டிருந்த ஹீரோயின் தொப்புளை இப்போதான் கொஞ்சகாலம் நிம்மதியா விட்டிருக்காங்க!