Tuesday, 26 August 2014

உடலுக்கு உரமளிக்கும் நீராகாரம்

By: ram On: 22:04
  • Share The Gag
  • அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்… வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!” – வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல… 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘பழைய சாதம்’.

    ‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்’ என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.

    ‘சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

    சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.

    மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும்.

    பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்’ 

    மீண்டும் செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் தொடங்கியது! இயக்குனர் மாற்றம்?

    By: ram On: 21:39
  • Share The Gag

  • செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் பூஜை போட்ட படம் மாலை நேரத்து மயக்கம். இப்படத்தின் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது.

    தற்போது மீண்டும் அந்த படம் தொடங்குகிறது, ஆனால் இயக்குனர் செல்வராகவன் இல்லை. அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தான் இயக்குகிறார்.

    இதை செல்வா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    விக்ரம் பிரபுவை கண்டித்த ரஜினி!

    By: ram On: 20:28
  • Share The Gag

  • விக்ரம் பிரபு மிகவும் கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் விட்டதை அரிமாநம்பி படத்தில் பிடித்துவிட்டார்.

    தற்போது இவர் நடிப்பில் சிகரம் தொடு விரைவில் வெளிவரயிருக்கிறது. இப்படத்தில் டூப் இல்லாமல் பல சண்டைக்காட்சிகளை விக்ரம் பிரபுவே செய்துள்ளராம்.

    இதை அறிந்த ரஜினி, இனி இது போன்ற ரிஸ்கான சண்டைக்காட்சிகளில் எல்லாம் கவனமாக நடி என்று உரிமையுடன் கண்டித்தாராம்.

    ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன தெரியுமா?

    By: ram On: 20:10
  • Share The Gag

  • இருமனங்கள் இணைவது தான் காதல். அப்படி காதல் செய்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை ஒருசிலவற்றை வைத்து தான் தேர்ந்தேடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் போது பார்ப்பது இரண்டு தான். அவை தான் அகஅழகு மற்றும் புறஅழகு. இதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களிடம் புறஅழகைப் பார்ப்பதைவிட, அவர்கள் எதிர்ப்பார்ப்பது மற்ற மூன்று விஷயங்களை மட்டும் தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அந்த மூன்று விஷயங்கள் சரியாக இருந்தால் தான் வாழ்க்கையானது சந்தோஷமாக, நீண்ட நாட்கள் நிலைக்கும் என்றும் கூறுகின்றனர். அதை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

    ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…

    1. ஆண்கள் குழந்தை போன்றவர்கள். அவர்கள் எதையும் சரியாக யோசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நிறைய பாசத்தை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் காதலிப்பவர்கள், தனது மனதை சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, தன்னை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய, எந்த வகையிலும் தன்னை ஆதரவாக இருப்பவளான ஒரு பெண்ணையே எதிர் பார்ப்பார்கள். உதாரணமாக, காதலனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் விளையாடுவார்கள் என்றால், அப்போது காதலியும் அவனுடன் சென்று அவன் விளையாடும் போது, அவனை ஊக்கப்படுத்தினால், அது அவர்களுக்கு மிகுந்த பாசத்தை உண்டாக்கும். இது போல அவர்களது சிறு சிறு செயல்களில் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனதிற்கு ஆதரவாக இருந்தால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய குணத்தையே பெரிதும் பார்ப்பார்கள்.

    2. ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்தினால், அப்போது அவர்கள் அழ நேரிடும். பிறகு அது ஆண்களுக்கே பெரும் மைனஸ் ஆக மாறிவிடும். ஆகவே அவர்கள் தங்கள் உணர்ச்சியான பாசத்தை வெளிப்படுத்தும் போது காதலியானவள் புரிந்து கொண்டு, அவர்களது உணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் வெளிப்படுத்தும் போது அது சற்று கோபம் போன்று இருக்கும். ஆகவே அதைப் புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் இருவருக்கும் இருக்கும் பாசமானது ஆழமாக நீண்ட நாட்கள் இருக்கும்.

    3. ஆண்களுக்கு தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவரையே பிடிக்கும். உதாரணமாக, காதலன் ஆசையாக சமைத்துக் கொடுக்கும் போது, காதலியானவள் சமைத்த உணவின் சுவையை மட்டும் பாராட்டி பேசக் கூடாது. மாறாக, அவன் உங்கள் மீது உள்ள பாசத்தால், யாருக்காகவும் செய்தாததை உங்களுக்காக செய்கிறான் என்பதை உணர்ந்து, அவன் பாசத்தை பற்றியே அவனிடம் பேச வேண்டும். இவ்வாறு உணர்ந்து பேசும் பெண்களையே அவர்களுக்குப் பிடிக்கும்.

    ஆகவே ஆண்கள் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்கின்றார்கள் என்றால், அப்போது பெண்ணிடம் இருக்கும் புற அழகைப் பார்ப்பதை விட அக அழகான மேற்கூறிய மூன்று விஷயங்களையே ஒவ்வொரு ஆண்களும் தாம் காதலிக்கும் பெண்ணிடம் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

    ஐ இசை வெளியீட்டு விழா! அர்னால்ட் வருவது உறுதி! மற்றொரு உலக பிரபலமும் வருகிறார்?

    By: ram On: 19:52
  • Share The Gag

  • ஐ படத்தை பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியாவே பிரம்மிக்கும் அளவிற்கு தயாரிப்பாளர் நடத்தவுள்ளார்.

    இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவருகிறது, இதில் தமிழில் பாடல்களை வெளியிட அர்னால்ட் வருகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தெலுங்கில் பாடல்களை வெளியிட மீண்டும் நம் எல்லோருக்கும் பிடித்த ஜாக்கிஜானே வரயிருக்கிறார். இதற்கு முன்பு கமல் நடித்த தசவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் படத்தின் நாயகி இவர் தான்!

    By: ram On: 19:35
  • Share The Gag

  • தமிழ் சினிமாவின் என்றும் ஹீரோயின்களுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. ஆந்திரா, கேரளா, மும்பை என அனைத்து மாநிலங்களின் கதாநாயகிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் கோலிவுட்.

    தற்போது அந்த வரிசையில் இணைந்திருப்பவர் காவ்யா ஷெட்டி. இவர் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர். தமிழில் ஏ.எல்.விஜய், விக்ரம் பிரபுவை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.

    இதுகுறித்து இவர் ‘ஹீரோ விக்ரம் பிரபுவின் பிளாஷ் பேக்கில் அவரது காதலியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறேன். இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. தற்போது கொச்சியில் நடக்கும் படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?

    By: ram On: 17:02
  • Share The Gag
  • கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?


    தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.


    பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.


    மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.


    எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.


    ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


    ‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

    தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

    By: ram On: 17:00
  • Share The Gag
  • என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


    வைரம்

    வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.

    அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

    ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.

    வௌவால்

    வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.

    ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

    சுத்தமான தண்ணீர்


    சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.

    பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.

    ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

    மருக்கள்

    மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.

    இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

    தீக்கோழி

    தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.

    ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

    மனித இரத்தம்

    மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.

    ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

    கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடைய..

    By: ram On: 16:57
  • Share The Gag
  • கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.

    ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

    ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சில காரணங்களுக்காக நாம் சோகமோ வருத்தமோ அடைவதுண்டு. இந்த சுறுசுறுப்பான வாழ்க்கையில் நாம் நமது குடும்பத்தோடு செலவிட நேரம் இல்லை. இதனால், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறையை தொடங்கி விட்டது.

    வேலை சம்பந்தமான மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகமாக பார்க்கக்கூடிய பிரச்சனையாகும். உங்கள் கணவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது ஒரு கப் காபி கொடுக்கலாம். எனினும், அவர் வருத்தமாகவோ கவலையாகவோ இருந்தால் கவனமாக கையாள வேண்டும்.

    அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். கடினமான சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதை தான் அவரும் எதிர்பார்ப்பார். சில நேரங்களில் இந்த உணர்ச்சிமிக்க உறவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

    அவரது மனநிலையையும் தன்மானத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆதரவை தர வேண்டும். உங்கள் கணவர் வருத்தத்துடன் இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை செய்தால், பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் கணவர் வருத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அவரோடு பேசுவதுதான்.

    அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்க வேண்டும்.உங்கள் கணவருக்கு சில சொந்த எதிர்ப்பார்ப்புகள் இருக்கக் கூடும். சில குறிப்பிட்ட வழியில் அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை கேட்டறியவேண்டும்.

    சில நேரங்களில் நீங்கள் அவருக்கு உதவ நினைப்பார்கள். எனினும், அவருக்கு உங்களிடம் உதவி கேட்க தயக்கம் இருக்கும். அதனால் நீங்களாகவே அவரிடம் கேட்டறியலாம். உணர்ச்சிபூர்வமான கணவர்களை உங்கள் அன்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். பேசிதான் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

    அவரை கட்டிகொண்டோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தி அவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். இது அவருக்கு தேவைப்பட்டால் இந்த வழியில் ஆதரவு அளிக்கலாம். கட்டுதல் மூலமாக நீங்கள் எப்பொழுதுமே அவரோ இருப்பதை தெரிவிக்கும்.அதனால் இதனை முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உணர்ச்சிபூர்வமான கணவர்களை சிறந்த முறையில் கையாளலாம்.

    செல்போன் போதை.....??

    By: ram On: 16:54
  • Share The Gag
  • எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.


    வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.


    அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

     நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.

    செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.


    கோபுரங்களால் கோடி தொல்லை


    செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

     
    செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

    செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.


    கழிவறைகளில்...


    யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள்  என்றில்லை, பேருந்து நிலையம்,
    மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.


    காவல்துறை சொல்வதென்ன?


    செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அந்த சுகம் வேண்டுமா..இந்த சுகம் வேண்டுமா?.. தொடர்பு கொள்ளவும்... என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் நிலத்தை விற்பதற்கில்லை,என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.


    வெறும் 2 நிமிடங்கள்தான்



    சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.


    எச்சரிக்கை அவசியம்

    மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.


    செல்போன் போதை


    வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

    திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

    By: ram On: 16:53
  • Share The Gag
  • திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
    ஒருவர் இன்னொருவரிடம்
    பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
    தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
    அரிசி, நெல் முதலானவற்றை
    கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.


    பணமாயிருந்தால் தட்டு.
    இது எதனாலென்றால்,
    கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
    மேல்கீழாய் இருந்தாலும்
    அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.


    வெறுமனே கையால் கொடுத்தால்,
    கொடுப்பவர்கை மேலும்
    வாங்குபவர்கை கீழுமிருக்கும்.


    இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
    நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
    எப்பொருளை கொடுத்தாலும்
    தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர்
    நம் முன்னோர்கள்.


    இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.
    # அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது
    கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

    சந்தானத்தை கழட்டி விட்ட அபிமான ஹீரோக்கள்!

    By: ram On: 08:18
  • Share The Gag

  • வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். அவர் காமெடியனானபோது காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், சந்தானத்திற்கு மவுசு கூடியது. முக்கியமான முன்னணி ஹீரோக்களே அவரது கால்சீட்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    குறிப்பாக, ஜெயம்ரவி, ஆர்யா, விஷால், ஜீவா உள்பட பல ஹீரோக்கள் தங்கள் படங்களில் சந்தானத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அதனால் சந்தானத்தின் சம்பளம் அவர்களை விட அதிகமானது. ஆனால், இப்படி படங்களின் வியாபாரங்களை தீர்மானிக்கிற இடத்தில் இருந்து வந்த சந்தானத்துக்கு ஹீரோ ஆசை தலைதூககியதன் விளைவு இப்போது அவரது மார்க்கெட் அவுட்டாகிக் கிடக்கிறது.

    கைநிறைய படங்கள் வைத்திருந்த சந்தானம், இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய மூன்று படங்களைத்தான் வைத்திருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப்பிறகு அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொன்னவர்கள் இப்போது ஓடிவிட்டார்கள். அதனால் ஹீரோ ரூட்டையும் தொடர முடியாத சிக்கில் சிக்கியிருக்கிறார் சந்தானம்.

    இந்த நிலையில், தனது அபிமான ஹீரோக்களான நட்பு வட்டாரங்களை மீண்டும் சந்தானம் அணுகியபோது, அவர்களும், உன் இடத்துக்கு வேறு காமெடியன்களை வைத்து பில்லப் பண்ணி விட்டோம் என்று கைவிரித்து விட்டார்களாம். அதனால் பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருந்ததை விட்டு விட்டேனே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

    உறவு முடிந்ததும் 'கொட்டாவியா'? தவிருங்கள்!

    By: ram On: 07:51
  • Share The Gag

  • அந்தப் பழக்கம் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உண்டு. அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணைக் கட்டும். ஒரு 'தேங்க்ஸ்டா' கூட சொல்லத் தோணாமல் நிறையப் பேர் கையைக் காலை நீட்டி தூங்கப் போய் விடுவார்கள். சரி, ஏன் உறவை முடித்த பின்னர் ஆழ்ந்த தூக்கம் வருகிறது தெரியுமா?

    இந்த உறவுக்குப் பிந்தைய தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் உண்மையில் மிகவும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். உண்மையில், அருமையான உறவுக்குப் பின்னர் நல்ல தூக்கம் வரும், அது உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்ய மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு உறவுக்குப் பின்னர் உடல் இயற்கையாகவே சோர்வடைகிறது.இதனால்தான் அந்தத் தூக்கம் வருகிறது.

    அதேசமயம், தூக்கம் வருகிறதே என்பதற்காக உடனடியாக தூங்கப் போய் விடாமல், நமது பார்ட்னருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருத்தல், ஆதரவாக தழுவிக் கொள்ளுதல், அந்த உறவின் அற்புத தருணங்களை பகிர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் என்பதும் டாக்டர்கள் தரும் யோசனை.

    உறவுக்குப் பின்னர் வரும் தூக்கத்திற்கு சில காரணங்கள் உள்ளன. அதைப் பார்ப்போம்.

    இரவு நேரத்தில்தான் நமது உடல் மிகவும் சோர்வடையும். அந்த சமயத்தில் நாம் உறவையும் மேற்கொள்ளும் போது கூடுதல் சோர்வை நாம் சந்திக்க நேரிடுகிறது. நமது உடலை தூக்கம் வேகமாக தழுவ ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்.

    உறவின்போது உச்ச நிலையை அடையும் ஆண் விந்தனுவை வெளிப்படுத்திய அடுத்த நொடியே அவனது உடலை சோர்வு முழுமையாக ஆக்கிரமிக்கிறது. ஆணின் உடல் வெளிப்படுத்தும் ஹார்மோன் உடலை வேகமாக சோர்வடைய வைக்கிறது. தூக்க உணர்வு வேகமாக வந்து தழுவுகிறது. உடல் இயக்கத்தின் அதி வேக செயல்பாடுகளும் இந்த தூக்கத்திற்கு இன்னொரு காரணம்.

    செக்ஸ் உறவின்போது இதயத் துடிப்பு அதி வேகமாக இருக்கும். அதேசமயம், உடல் அமைதி அடையும்போது அந்த வேகம் குறைந்து படிப்படியாக நார்மல் ஆகிறது. உறவின்போது நமது மூச்சு ஆக்சிஜனுக்காக அதிகமாக துடிக்கும். உறவு முடியும்போது அதிக அளவிலான ஆக்சிஜனை நமது உடல் சுவாசிக்கிறது. ஆக்சிஜன் திடீரென அதிகமாவதால் உடலின் அனைத்துப் பாகங்களும் வேகமாக ரிலாக்ஸ் ஆகின்றன. இதுவும் தூக்கம் கண்ணைத் தழுவ ஒரு காரணம்.

    யாருக்கு உறவுக்குப் பின்னர் வேகமாக தூக்கம் வருகிறதோ, அவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடையலாம். காரணம் அவர்களது உறவு முழுமையாக இருந்திருக்கிறது என்று அர்த்தமாம். அதேசமயம், சரியாக தூக்கம் வராவிட்டாலோ அல்லது அசவுகரியமாக உணர்ந்தாலோ உறவில் முழுமை இல்லை அல்லது உடல் ஆரோக்கியத்தில் குறை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

    உறவுக்குப் பின்னர் நமது உடலை நல்ல இயல்புக்குக் கொண்டு வர குளிர்ச்சியான எலுமிச்சை சாறை அருந்தலாம் என்று டாக்டர்கள் அட்வைஸ் தருகிறார்கள். இது நம்மை மேலும் புத்துணர்ச்சியாக்கவும், நல்ல தூக்கத்தில் மூழகவும் உதவுமாம்.

    இது ஆண்களின் கதை. பெண்களைப் பொறுத்தவரை உறவுக்குப் பின்னர் உடனே அவர்களுக்குத் தூக்கம் வராது. காரணம், அவர்களின் உச்ச நிலை உடனடியாக அடங்கி விடாது என்பதால். உறவின்போது பெற்ற அனுபவத்தையும், பரிபூரணத்தையும் அவர்கள் மேலும் சில நிமிடங்களுக்கு நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த உணர்விலிருந்தும், நினைவிலிருந்தும் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியாது. இதனால்தான் உறவை முடித்த பின்னர் தூங்கப் போய் விடாமல், அனுசரணையாக, ஆதரவாக, காதலோடு அவர்களுடன் சில நிமிடங்களை ஆண்கள் பகிர்நது கொள்ள வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் ஆணுக்கு மட்டுமல்லாமல், பெண்ணுக்கும் அன்றைய உறவு முழுமை அடையும் என்பது டாக்டர்கள் கூறும் கருத்து.

    உடல் ரீதியான தேவைகளுக்காக மட்டும் ஒரு பெண்ணும் சரி, ஆணும் சரி உறவை நாடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். உடலையும் தாண்டி மனதையும் இங்கு முக்கியமாக கருத வேண்டும். மனதின் உணர்வுகளும் முழுமையாக பூர்த்தியாகும்போதுதான் எந்தவிதமான உறவாக இருந்தாலும் அது உண்மையிலேயே முழுமையடைய முடியும்.

    சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்

    By: ram On: 07:35
  • Share The Gag

  • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ் ஏறி கொண்டு இருந்த செல்போன் மீது தெரியாமால் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது போன் கடும் வெப்பம் அடைந்துள்ளது. இதனால் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில் "நான் தூங்கியபோது போனில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக எனது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நான் என்னுடையை போனை தூக்கியபோது அது மிகவும் வெப்பமாக இருந்தது. என்னால் அதனை தொடக் கூட முடியவில்லை." என்று கூறியுள்ளார். அதிகமாக வெப்பம் ஆகும் ஐ-போனால் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஐ-போனை வைத்து தூங்கிய  18 வயது ஜாக் பார்கெர் என்ற வாலிபர் கையில் காயம் ஏற்பட்டது. பிப்ரவரியில் பள்ளி மாணவியின் பாக்கெட்டில் இருந்த ஐ-போன் எரிந்ததில் அவர் காயம் அடைந்தார். 14 வயது சிறுமி வைத்திருந்த ஐ-போன் எரிந்ததில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது ஐ-போன் வெப்பத்தால் காயம் அடைந்த பெண் தனது இரண்டாவது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாது என்று மிகவும் அச்சத்தில் உள்ளார்.

    சார்ஜ் ஏறும்போது அதில் பேச வேண்டாம், கேம் விளையாட வேண்டாம் என்று பல்வேறு விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும், அதனை மீறுபவர்கள் உள்ளனர். யாரும் தூங்கும் போது தங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளில் கொடுப்பதும் தவறு. இதுபோன்ற தவறுகளால் பொதுமக்கள் பரவலாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

    ஆண்மைக் குறைவு, தாது விருந்தி நீங்க - இயற்கை மருத்துவம்

    By: ram On: 01:24
  • Share The Gag


  • ஆண்மைக் குறைவு

    * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

    * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

    * அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

    * அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

    * படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

    தாது விருந்தி:

    * முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

    * நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

    * கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

    * அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

    * வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்

    தூக்கமும் நீங்களும்...

    By: ram On: 01:16
  • Share The Gag
  • உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


    அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


    அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


    மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


    சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


    தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


    மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


    மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


    ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


    இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


    ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

    காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!

    By: ram On: 01:10
  • Share The Gag


  • காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!


    1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ


    16-21 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ


    22-34 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?


    35-49 வயது என்றால் : பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா ..?


    50-64 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது


    65- வயது மேல் - காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது இந்த வயதில் காதாலா ...? கலிகாலமடா இது.!

    ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்...!

    By: ram On: 01:00
  • Share The Gag



  • தலவரலாறு:

     ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.

    முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

    கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை - காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 - 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

    உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்…!

    By: ram On: 00:19
  • Share The Gag

  • உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்…..!

    உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்……!

    முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்……!

    வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்…….!

    மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்……..!

    மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது……..!

    வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்……..!

    மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்……..!

    கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்…….!

    மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்…….!

    மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீட்டு நினைப்பு வந்துவிடலாம்……!

    எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்…….!

    சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்……!!!