Sunday, 24 August 2014

மூலிகைகளும் தீரும் நோய்களும்

By: ram On: 21:42
  • Share The Gag

  • நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

    அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

    ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

    ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

    தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

    நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

    நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

    முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

    வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

    அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

    வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

    நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

    நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

    சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

    திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

    அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

    சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

    ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

    வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

    வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

    ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

    செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

    ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

    முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

    திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

    திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

    வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

    கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

    கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

    கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

    கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

    காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

    கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

    ஹோட்டலில் இளம் நடிகையை பலாத்காரம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

    By: ram On: 19:14
  • Share The Gag

  • டெல்லியில் சமீபத்தில் வந்த புகார் ஒன்று திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் ஒரு இளம் நடிகை(பெயர் குறிப்பிடவில்லை).

    அவர் தங்கியிருந்த அறைக்கு படத்தின் விவாதம் குறித்து இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா வந்துள்ளார். ஹோட்டலில் விவாதம் நடந்தபோது, திடீரென நடிகையை கட்டிப்பிடித்து தவறாக நடக்க ஆரம்பித்துள்ளார் .

    ஆனால் அந்த நடிகை எவ்வளவு முயன்றும் வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துள்ளார் அன்குர் ஷர்மா. தற்போது அவரிடம் இருந்து டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலிஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    ஆஸ்துமா வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்கு....

    By: ram On: 17:26
  • Share The Gag
  • கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.


    அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிம்ம சொப்பனம்தான். இந்தப் பாதிப்பிலிருந்து மீள, இன்ஹேலர், வெந்நீர், மாத்திரைகள், மருந்துகள் என ஏகப்பட்ட தற்காப்புகள் தேவைப்படும்.


    இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமா நோயாளிகள் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாகக் கூறுகிறார் சென்னை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன்.


    'பொதுவாக ஆஸ்துமா நோயாளிகள், குளிர்காலம் வந்தால்தான் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். எதிர்பாராத ஆஸ்துமா தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க, பெரிய அளவில் பிரச்னை வராமல் இருக்க சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.


    ஆஸ்துமா வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்கு மருந்துகள் இருப்பது போல, வராமல் தடுப்பதற்கும் தடுப்பு மருந்துகள் உள்ளன'' என்கிற டாக்டர் ஸ்ரீதரன், ஆஸ்துமா ஏற்படுத்தக்கூடிய காரணிகளைப் பற்றி விவரித்தார்.


    குளிர்ந்த காற்று: ஆஸ்துமாவுக்கான முக்கியக் காரணங்களில் முதன்மையானது. ஆஸ்துமா என்பது, மூச்சுக்குழல் பாதிப்பு நோய்.  அடுத்தகட்டமாகத்தான் இது நுரையீரலைப் பாதிக்கிறது. காற்றில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது, மூச்சுக்குழலில் சுருக்கம், வீக்கம், சளி சேர்தல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், மூச்சுக்குழலில் அடிப்படைச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சுவாசத்துக்கு உதவும் சிறிய காற்றுக்குழாய்கள் வீக்கம் அடைவதால், காற்றுப்பைகளில் அதிகமாக காற்று தங்கி, சுவாசிப்பது கஷ்டமாகிறது. மார்புத் தசைகள் புடைத்துக்கொண்டு விடுவதால், வலி ஏற்படுகிறது.


    காற்றின் ஈரத்தன்மை (humidity): காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, பலவித மாசுக்களும், ஆஸ்துமா நோய்க்கான காரணிகளும் ஈரக்காற்றின் ஈரத்தன்மையோடு ஒட்டிக்கொண்டு, நீடித்திருக்கும். இவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா வரக் காரண மாகிறது.


    காளான்களின் நுண் அணுக்கள் (mold spores): குளிர், மழைக் காலங்களில் காற்றில், கண்ணுக்குத் தெரியாத காளான்களின் நுண் அணுக்கள் இருக்கும். இவையும் ஆஸ்துமா காரணிகளே.


    படுக்கை உண்ணி (dust mite): கண்ணுக்குத் தெரியாத இந்த உண்ணியின் கழிவுப்பொருளை சுவாசிக்கும்போது, அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ உலகில் இதை 'யுனிவர்சல் அலெர்ஜென்’ என்று அழைப்பார்கள். பொதுவாக எல்லோரும் 'ஏர்கண்டிஷன்’ சாதனம், ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல என்பார்கள். ஆனால், 'ஏசி’ ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், காற்றில் ஈரத்தன்மை அதிகமாக ஆக, காளான்களின் நுண் அணுக்களும், படுக்கை உண்ணிகளும் அதிகமாகும். குறைந்தது 50 சதவிகிதமாவது, ஈரத்தன்மை இருந்தால்தான் இந்த உண்ணியால் உயிர் வாழ முடியும். 'ஏசி’ போடும்போது, ஈரத்தன்மை 30 சதவிகிதமாகக் குறைந்துவிடும். படுக்கை உண்ணியின் தொகையும் குறைவாகவே இருக்கும்.


    வைரஸ் தாக்குதல்: குளிர்காலத்தில், குறிப்பிட்ட சில வைரஸ் அதிகம் காணப்படும். நுரையீரலைத் தாக்கக்கூடிய ஆர்.எஸ்.வி. (respiratory syncytial virus) போன்ற வைரஸ் வகைகளும் மூச்சுக்குழலுக்கு அதிகப் பாதிப்பைக் கொடுக்கும். அதிலும், ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு 'பிராங்கியோலைடிஸ்’ என்று பெயர். இதன் அறிகுறியும் பாதிப்பும் ஆஸ்துமா போன்றே இருக்கும். வைரஸ் தொற்றா அல்லது ஆஸ்துமா தாக்குதலா என்று கண்டறிவதுகூடக் கடினம். இது மூச்சுக்குழாய்களில் தாக்கும்போது, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உண்டு.


    கொசு விரட்டிகள்: மழைக் காலம் வந்தால், கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தான்.  குளிர்காலத்திலும் இது அதிகமாக உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். கொசுவை விரட்டுவதற்காக, நாம் உபயோகப்படுத்தும் சுருள்களும் மருந்துகளும்கூட ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.


    ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான, வீரியமான மருந்துகள் உள்ளன. மூக்குக்குள் உறிஞ்சும், nasal spray வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம்.


    மொத்தத்தில், 'ஆஸ்துமா வந்தால் மட்டுமே சிகிச்சை’ என்ற மனோபாவத்தை மாற்றி, எப்போதுமே மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், குளிர்காலத் தாக்குதல்களிலிருந்து முழுமையாக விடுபடலாம்'' என்கிறார் டாக்டர்.

    சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக......

    By: ram On: 17:23
  • Share The Gag
  • உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும்.

    உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங் கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்றும் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.

    நகம் கடிப்பது

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது. ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.

    சொடக்கு எடுப்பது

    சொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.

    துப்புதல்

     அடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்கும் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.

    படபடப்புடன் இருப்பது

     எப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக்கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

    அதிகமான தூக்கம்

     பெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

     பெட் காபி மற்றும் காலை உணவு


     சிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.

    உடற்பயிற்சியை தவிர்ப்பது

     ஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.

    ஏப்பம்

     ஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்ட பழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.

    சூயிங் கம்

     கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.

    அடக்கம் பண்ணுற வெட்டியானே ஆவியா உலவுனா, அந்த வெட்டியானோட ஆவிய அடக்கம் பண்ணுறது யாருதான்ப்பா…?

    By: ram On: 13:31
  • Share The Gag

  • நல்ல டெக்னிக்பா இது. பேய் படம் பார்க்க எவனும் தனியா வர மாட்டான். ஒரு ஆளு இன்னொரு ஆளு துணையோட வந்தா கூட, ஒன் ப்ளஸ் ஒன்ணுன்னு கல்லா கட்டலாமே? இதுதான் இப்போதைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஐடியா போலிருக்கிறது. திரும்புகிற இடமெல்லாம் பேய் ஆவி சென்ட்டிமென்ட்தான். இந்த கோடம்பாக்க கலவரத்தில் மிக மிக சீரியஸ் ஆகவே ஒரு பேய் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் ‘நந்திவரம்’.

    அடக்கம் பண்ணுற வெட்டியானே ஆவியா உலவுனா, அந்த வெட்டியானோட ஆவிய அடக்கம் பண்ணுறது யாருதான்ப்பா…? இப்படி ஒரு கேள்வியை உருவாக்குகிறது படத்தின் ஒன் லைன். யெஸ்… நந்திவரம் கிராமத்து வெட்டியானும் அவன் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கப்புறம் அந்த ஆவிகள் இரண்டும் தம்பதி சமேதராக அந்த கிராமத்து ஆட்களை போட்டுத் தள்ளுகிறார்கள். நிஜமாவே இந்த கொலைகளுக்கு காரணம் ஆவிகள்தானா? அல்லது வேறு யாராவது கிரிமினல்ஸ் இருக்கிறார்களா? தேடி கண்டு பிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ராமானுஜம். நிஜம் என்ன என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ராமானுஜம்.

    படத்தின் பெயர் மட்டும் நந்திவரம் இல்லை. காஞ்சிபுரம் அருகே நந்திவரம் என்றொரு கிராமமே இருக்கிறது. படப்பிடிப்பையும் அங்குதான் நடத்தியிருக்கிறார்கள். ஜெர்ஷா, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.

    நாடி நரம்பெல்லாம் டண்டணக்கரா போடுகிற அளவுக்கு படம் இருக்கும் என்கிறார்கள். பார்க்கலாம்…!

    கேரளாவில் அஞ்சான் ரிசல்ட் என்ன?

    By: ram On: 12:09
  • Share The Gag

  • தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தற்போது அண்டை மாநிலங்களை தான் பெரிதும் நம்புகின்றன. அதிலும் குறிப்பாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கேரளாவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த அஞ்சான் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வசூலை தந்தாலும், பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    ஆனால் கேரளாவில் இப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 100 திரையரங்குகளுக்கு மேல் வெற்றி நடைப்போடுகிறது. மேலும் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை வருவதால் இன்னும் நல்ல வசூலை எதிர்பார்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

    By: ram On: 11:35
  • Share The Gag
  • நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

    டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

    காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

    சிடி ஸ்கேன்

    தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

    உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

    கலர் டாப்லர் ஸ்கேன்.

    ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

    எக்கோ

    இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

    டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

    வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

    இசிஜி


    இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

    டிஜிட்டல் இசிஜி

    இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



    டிஜிட்டல் எக்ஸ்ரே

    சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

    மோமோ கிராம்

    பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

    மாஸ்டர் ஹெல்த செக் அப்

    மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

    By: ram On: 11:31
  • Share The Gag
  • பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

    உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது.

    ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்…

    உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

    இடுப்பை அளவிடுங்கள்… அபாயத்தைக் கணக்கிடுங்கள்…


    நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

    திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

     ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

    உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்… உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

    உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது’ என்றார்.

    உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

    காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

    குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

    உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

    முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

    பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

    அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

    குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

    குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

    காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

    கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

    லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

    பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போம்.

    18 வயது பூர்த்தியாகாத நடிகைகளுக்கெதிரான வழக்கு ..

    By: ram On: 07:45
  • Share The Gag

  • தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி , சினிமாவில், 18வயதுக்கு கீழுள்ள பெண்கள் நாயகியாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை சென்னை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    முத்துசெல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சினிமாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை நாயகியாக நடிக்க வைக்கின்றனர்.

    சின்ன வயதில் அவர்களது மனம் பக்குவப்படாமல் இருக்கும் சூழலில் சினிமாவில் நடிப்பதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் கொடுமைக்கும் ஆளாகுகின்றனர்.

    சமீபகாலமாக சந்தியா, கார்த்திகா, லட்சுமி மேனன், துளசி போன்றோர் 18 வயதை பூர்த்தியாகாதவர்களை நடிக்க வைப்பது நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது ஆகும்.

    எனவே, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை சினிமாவில், நாயகியாக நடிக்க வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முத்துசெல்வி தனது மனுவில் கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலட்சியம், கனவு, தாங்கள் என்ன ஆக வேண்டும் என ஆசை இருக்கும்.

    அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதற்காக பொதுநல வழக்கும் தொடர முடியாது, எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டனர்.

    ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்..

    By: ram On: 06:26
  • Share The Gag

  • யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்...து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா? தாங்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது, என்றாள்.

    தேவி! சட்டத்தை இயற்றுபவர்களே அதை மீறினால், உலகத்தினர் எப்படி அதை மதித்து நடப்பார்கள்? நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே! ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே! என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா? அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா? நீங்கள் அதை இங்கேயே ஆடிக் காட்டுங்கள். எனது லோகத்திலேயே உங்கள் திருநடனம் நிகழ ஆசைப் படுகிறேன், என்றார் சனி பகவான். சனீஸ்வரனின் வேண்டுகோலை ஏற்று சிவன் உடுக்கையை ஒலித்தபடியே நடனமாடத் தொடங்கினார்.உடுக்கை சப்தம் கேட்டதோ இல்லையோ, சனீஸ்வரன் தன் கோரிக்கையை ஏற்கவில்லையோ எனக்கருதிய அம்பிகை, தான் நிர்மாணித்த அரங்கத்தை, தன் பார்வையாலேயே எரித்து விட்டாள்.

    சனீஸ்வரனின் கடமை உணர்வைப் பார்த்தீர்களா? தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன? நாம் நமது பணிகளை நல்ல முறையில், ஒழுக்கமான முறையில் கவனித்தால் நம்மை அவர் ஏதும் செய்யமாட்டார். புரிகிறதா?

    தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்..!

    By: ram On: 06:12
  • Share The Gag

  • 1. நம்பிக்கை

    கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.

    2. பாதுகாப்பு

    ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

    3. மரியாதை

    ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

    4. அன்பு

    வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

    5. நேர்மை

    நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

    ‘தொட்டால் விடாது’ தொடாமல் இருக்கலாம்...திரைவிமர்சனம்!

    By: ram On: 05:47
  • Share The Gag

  • நாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். எங்கேயும் வேலை செய்ய விருப்பம் இல்லாத இவர்கள், சொந்தமாக பிசினஸ் தொடங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி ஒரு ஓட்டலில் நான்கு பேரும் சேர்ந்து பேசி தொழில் தொடங்க திட்டமிடுகிறார்கள்.

    அங்கிருந்து செல்லும்போது ஒரு கூப்பனில் தங்களுடைய செல் நம்பரை பூர்த்தி செய்து விட்டு செல்கிறார்கள். அந்த கூப்பன் மூலம் ஒரு சொகுசு விடுதியில் தங்க வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் நண்பர்கள் அனைவரும் அங்கு செல்கிறார்கள். சொகுசு விடுதியில் நாயகி அஞ்சனாவை சந்திக்கிறார்கள். அனைவரும் அஞ்சனாவிடம் நட்பாகிறார்கள்.

    நண்பர்கள் நான்குபேரும் சொந்தமாக தொழில் தொடங்கவுள்ளதாக அஞ்சனாவிடம் கூறுகிறார்கள். அதற்கு அஞ்சனா இந்த சொகுசு விடுதியை விற்பதாக இருக்கிறார்கள். இதை நீங்கள் வாங்கி சொந்தமாக தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறாள். அதன்படி அனைவரும் விடுதியை வாங்க முயற்சி செய்கிறார்கள். பின்னர் சொசுகு விடுதியின் உரிமையாளரான தம்பிசார் என்பவரை சந்திக்க செல்கிறார்கள். அவரும் விடுதியை சஞ்சய் மற்றும் நண்பர்களுக்கு விற்றுவிடுகிறார்.

    அதன்பிறகு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அந்த விடுதியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்போது பள்ளம் தோண்டும் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுகிறார். பிறகு அந்த பள்ளத்தில் ஒரு எலும்புக்கூடு இருப்பதை கண்டு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். மற்றொரு நாள் அஞ்சனாவிடம் விவேக் விடுதியின் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு கேமரா ஒன்றை கண்டெடுக்கிறார். அந்த கேமராவில் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அதில் சஞ்சனாவின் புகைப்படமும் இருக்கிறது. மேலும் ஒரு புகைப்படக் கலைஞரின் புகைப்படமும் இருக்கிறது. இது யாருடையது? ஏன் இங்கு இருக்கிறது? இதில் உள்ளவர்கள் யார்? என்று அறிய முயற்சி செய்கிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை வைத்து விடுதியில் எதோ மர்மம் இருப்பதையும் உணர்கிறார்கள்.

    இறுதியில் அந்த விடுதியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் அஜித் ரவி பிகாசஸ் நடித்துள்ளார். நடிப்பை வரவழைக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். படத்தில் நிறைய காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அதிக நேரம் நடந்தே வருகிறார். அஞ்சனாவாக நடித்திருக்கும் நாயகி சனம் அழகாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக விடுதி உரிமையாளராக வரும் தம்பிசாரின் நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது.

    வினோத் வேணுகோபால்-சாம் சிவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு கூடுதல் பலம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. குறிப்பாக துபாயின் அழகையும் ஒரு சில காட்சிகளையும் தனது கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.

    குறிப்பாக படத்தில் நீண்ட காட்சிகள், மெதுவாக நகரும் காட்சிகள் ஆகியவற்றை தயாரிப்பாளரும், இயக்குனருமான அஜித் ரவி பிகாசஸ் தவிர்த்திருக்கலாம். இயக்குனருக்கு விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் பார்க்கும் போது விளம்பர படத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. திரைக்கதையை வலுவோடு எடுத்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘தொட்டால் விடாது’ தொடாமல் இருக்கலாம்.

    ஜீவாவின் யான் ஒரு பார்வை...!

    By: ram On: 05:32
  • Share The Gag

  • ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான். இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசி நாயர் நடிக்கிறார்.

    இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக 2 பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அல்ட்ரா மாடர்ன் லுக்குடன் ஜீவா நடிக்கும் இந்த படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.

    யான் படம் பற்றி ரவி கே.சந்திரன், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் 2 பாடல்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கி வருகிறோம் என தனது டுவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் யான் படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

    By: ram On: 04:53
  • Share The Gag
  • ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

    அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

    ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

     உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


    அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

     ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

    ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

    சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

    அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


    ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

    எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

    அதிக ஆற்றலை தரும் தானியம்


    ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

    ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

    அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


    ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

     இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

    குறைந்த கலோரி உள்ள தானியம்

    ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

     ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

    தயாரிப்பதற்கு சுலபம்


    ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

    இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

    அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால்...?

    By: ram On: 04:51
  • Share The Gag



  • தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்'எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.

    அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது.
    தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது.

    அவை என்ன தெரியுமா?


    * அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது.

    *"பெப்பர்மென்ட்ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.

    * சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.

    *விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.

    * தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.

    * மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்குபல அரிய பலன்களைத் தருகிறது.

    * செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.

    * அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.

    * யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக்கொண்டு ஓடி விடும்.

    * கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.

    இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள்,தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.