Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 9 November 2014

ரசிகர்கள் கேள்வி கோகோ கோலா முதல் தன் எதிரிகள் வரை விஜய்யின் அதிரடி பதில்கள்! முழு விவரம்

By: ram On: 18:31
  • Share The Gag
  • கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய் இன்று டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர்.

    இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக...

    கேள்வி: உங்களை ரோல் மாடலாக கொண்டு பல இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை போல் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

    பதில் : உழைத்திடு, உயர்ந்திடு உன்னால் முடியும்

    கேள்வி : உங்கள் ரசிகர்கள் பற்றி கூறுங்கள்?

    பதில் : வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள் ...நடிகன் ரசிகன் தாண்டிய உறவு எங்களுடயது...

    கேள்வி : சமீபத்தில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது?

    பதில் : ஜிகர்தண்டா, த்ரிஷ்யம்(மலையாளம்)

    கேள்வி : எந்தவொரு கஷ்டமான தருணங்களையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

    பதில் : அமைதியாக இருந்தாலே போதும்.

    கேள்வி: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான அனைத்து கிடைத்து விட்டது அடுத்து என்ன?

    பதில்: ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கும் நேரம், என் அன்பை...கண்டிப்பாக கொடுப்பேன்.

    கேள்வி: உங்களுக்கு நிறைய எதிரிகள் உள்ளார்களே?

    பதில்: என் எதிரிகளையும் நான் நேசிப்பேன்

    கேள்வி: புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு தரமாட்டீங்களா?

    பதில்: இதுவரை நான் நடித்த 58 படத்தில் 28 படம் புதுமுக இயக்குனர்கள் தான். ஓகேவாண்ணா..

    கேள்வி: நாம் பயப்புடுகிறோமா? அல்லது பதுங்குகிறோமோ?

    பதில்: இரண்டும் இல்லை அனுபவங்களை தேடுகிறோம்.

    கேள்வி: உங்களையே சமீப காலமாக சர்ச்சைகள் குறி வைக்கின்றன ஏன்?

    பதில்: என் மனதை பாதிப்பதில்லை, ஆனால் இப்படங்களில் என்னுடன் பணியாற்றும் தொழிலாளர்களை நினைத்து வருத்தப்படுவேன். அவர்கள் உழைப்பை சுரண்டுகிறார்களே என்று.

    கேள்வி: இன்னும் 10 வருஷம் கழிச்சு எந்த இடத்தில் இருப்பீங்க?

    பதில்: என் கடமையை செய்கிறேன்...வேறு எந்த ப்ளானும் இல்லை.

    கேள்வி: நீங்களே கோல விளம்பரத்தில் நடித்துவிட்டு, படத்தில் அதை தடை செய்ய சொல்லி வசனம் பேசுனீங்களே?

    பதில்: நான் மட்டும் இல்லை இந்தியாவில் மிகப்பெரிய பிரபலங்களான அமீர் கான், சச்சினே நடித்தார்கள். கத்தி படத்திற்கு பிறகு இனி இது போன்ற விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை. என் தவறை நானே திருத்தி கொள்வேன்.

    கேள்வி: உங்களுக்கு இளைய தளபதி பட்டம் வேண்டுமா? சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமா?

    பதில்: உங்கள் அன்பு மட்டும் போதும், எந்த பட்டமும் வேண்டாம்.

    கேள்வி: கத்தி படம் பற்றி கூறுங்கள்?

    பதில்: படம் வராதுன்னு சொன்னாங்க, தியேட்டல் ஜன்னல உடைச்சாங்க, 12 மணி வரைக்கும் டிக்கெட் ஓபன் ஆகல. ஆனால், எண்ணி 12வது நாள் படம் ரூ 100 கோடி வசூல்ன்னு சொல்றாங்க

    இவ்வாறு ரசிகர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து விட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    Friday, 7 November 2014

    கவுண்டமணி கையில் அடி வாங்க வேண்டும்! சித்தார்த் ஓபன் டாக்

    By: ram On: 22:01
  • Share The Gag
  • ஜிகர்தண்டா வெற்றி சித்தார்த்தை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இவரது நடிப்பில் காவியத்தலைவன் இந்த வாரம் ரிலிஸ் ஆகவுள்ளது.

    இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக உள்ள இவரிடம் ’நீங்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை’ என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு ‘ஒரு நாளாவது செந்திலாக மாறி, கவுண்டமணி சார் கையில் அடி வாங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

    என்னை அறிந்தால் படத்தின் டைட்டில் மிகவும் பிடித்துள்ளது - சிம்பு!

    By: ram On: 21:37
  • Share The Gag
  • சிம்பு தற்போது முன்பு போல் தான் இல்லை, எந்த ஈகோவும் இல்லாமல் அனைவருடனும் நட்பாக பழகி வருகிறார். யாருக்கும் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, சக நடிகர்கள் படம் ரிலிஸ் என்றாலும் சரி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களை சொல்லிவிடுவார்.

    அந்த வகையில் இன்று உலக நாயகன், அனுஷ்கா, வெங்கட் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல், என்னை அறிந்தால் படத்தின் டைட்டில் மிகவும் பிடித்துள்ளது, அஜித் மற்றும் கௌதம் மேனனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

    தன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்!

    By: ram On: 21:24
  • Share The Gag
  • அஜித் எப்போதும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். அடுத்தவர்களுக்கே அப்படியென்றால் தன் மகளுக்கு சொல்லவா வேண்டும்.

    சமீபத்தில் மகள் அனோஷ்கா பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு நேராகவே சென்று ஆசிரியர்கள் மட்டுமின்றி தன் மகளுக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

    கையில் ஒரு கேமராவுடன் வந்த அவர் பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் தவப்புதல்வன்! உலக நாயகன் ஸ்பெஷல்(

    By: ram On: 18:55
  • Share The Gag
  • செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடனே அதை எப்படி கையாள்வது என்று யாருக்கும் தெரியவில்லை, அதனால் 21ம் நூற்றாண்டுகளுக்கு முன் மக்களின் குறை தீர்க்க கடவுள் இறை தூதுவனை மண்ணிற்கு அனுப்பியது போல், செல்லுலாய்ட் உலகத்தை ஆட்சி செய்ய கலையுலக கடவுளாக பரமகுடியில் பிறந்தார் இந்த கலைஞானி.

    குழந்தை மனம் மாறாமல், கொஞ்சும் தமிழுடன் களத்தூர் கண்ணமாவில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி மார்பில் தூங்கி சரோஜாதேவி மடியில் விழித்து எழுந்த தவப்புதல்வன் நீ. உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை.

    தமிழ் சினிமாவின் ஐன்ஸ்டின், கிராகம்பெல், நியுட்டன் எல்லாமே நீ தான். ஆம் இந்திய சினிமாவே டெக்னாலஜி என்ற வார்த்தையை டிஸ்னரியில் தேடிக்கொண்டிருந்த நேரம், எளிதாக நீ வந்து உன் பத்து விரல்களிலும் பத்து விதமான டெக்னாலஜிகளை பாய்ச்சினாய் தமிழ் சினிமாவில்.

    உலக சினிமாவே பேசத்தொடங்கிய காலத்தில் பேசாமலேயே பேசும் படம் எடுத்து உன்னை பற்றி புறம் பேசியவர்களை பேச விடாமல் செய்தாய். மாயஜாலம் என்றால் புராணகதைகளில் படித்து வந்த நேரம் முதன் முதலாக கிராபிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தை இந்திய திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திவைத்த குரு நீ.

    அதே சமயம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக தொன்று தொட்டு நிற்கும் செண்டிமெண்டுகளை வன்முறையாக அறுவடை செய்தாய். ஆனால் அன்பு தான் சிறந்தது என அன்பே சிவமாக மாறினாய். ஹே ராம் நீ நல்ல நடிகன் தான்யா.

    உன் இமையில் சிக்கிய சிவப்பு ரோஜாக்கள் பற்றி எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களை இமை மூடாமல் பார்க்க வைக்கிறது உன் சாதனைகள். இந்திய சினிமாவே எதிர்ப்பார்ப்பது உங்களுக்கு எப்போது ஆஸ்கர் கிடைக்கும் என்று. ஆனால் நாங்கள் காத்திருப்பது ஆஸ்கருக்கு எப்போது கமல்ஹாசன் விருது கிடைக்கும் என்று.

    நீங்கள் கடவுளா? மிருகமா? என்று தெரியாது ஆனால் தமிழ் சினிமாவை எப்போதும் நீங்கள் ஆளவந்தவர் என்று மட்டும் தெரியும். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று தெரியாது ஆனால் உலகமே வியந்து நோக்கும் ஈடு இணையில்லா நாயகன் என்று தெரியும்.

    நீ வாங்கிய விருதுகளை எண்ணி முடிக்க உலகத்தை சுற்றி வரும் நேரம் ஆகும், அதேசமயம் நீ ஏற்ற கதாபாத்திரங்களை எண்ண ஆரம்பித்தால் அந்த உலகமே தலை சுற்றி கீழே விழுந்து விடும்.

    களத்தூர் கண்ணாமாவில் பாலகனாக அறிமுகமான நீ உன் 16 வயதினேலே பல சவால்களை கடந்து கலைஞனாக மட்டுமின்றி தமிழ் மக்கள் மனதில் புன்னகை மன்னனாக வலம் வந்தவர் நீங்கள். உன்னை போல் ஒருவன் இந்த பூமியில் பிறக்க போவது இல்லை, உன் விஸ்வரூபத்தை வெல்ல போவதும் இல்லை.

    இந்திய சினிமாவிலேயே ஏன்? உலக சினிமாவிலேயே திரைத்துறையில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நடித்து அதில் வெற்றி பவனி வரும் ஒரே கலைஞன் நீ மட்டும் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என சினிமாவில் நீ பேசாத மொழிகளே இல்லை.

    உங்களை வாழ்த்துவதற்கு நாங்கள் தசவதாரம் எடுத்தால் தான் முடியும், ஆனால் அதற்குள் நீங்கள் 100 அவதாரத்தை எடுத்து விடுவிற்களே. அதனால் தற்போது சொல்லி கொள்கிறோம் ‘உலகம் வியக்கும் உலக நாயகனுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    Wednesday, 5 November 2014

    என்னை அறிந்தால் பாடல் வெளியீட்டுக்கு அஜித் தரிசனம் ?

    By: ram On: 22:01
  • Share The Gag
  • தல ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் செம்ம குஷியில் மிதந்தனர்.

    என்னை அறிந்தால் படத்தின் விதவிதமான போஸ்டர் மற்றும் நீண்ட நாள் பிறகு வெளியான படத்தின் தலைப்பு என்று போன வாரம் படத்தை பற்றி முக்கியமான விஷயங்களை என்ன அறிந்தால் டீம் வெளியிட்டனர்.

    இந்நிலையில் படத்தை வேகமாக முடித்து கிறிஸ்துமஸ் அல்லது ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருகிறது படக்குழு.என்னை அறிந்தால் படத்தின் டீசர் நவம்பர் 25ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. படத்தின் பாடல் வெளியிடு டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு விழாவாக நடத்தலாமா என்று கௌதம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறது .

    ஆனால் பாடல் வெளியிடுக்கு தல தரிசனம் கொடுக்க மாட்டார் என்றவுடன் பல யோசனைக்கு பிறகு ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைத்து விடலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

    நீண்ட வருடங்களுக்கு பிறகு கௌதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் பாடல் உருவாகியுள்ளதால் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

    தனுஷ் கலக்கும் டங்கமாரி

    By: ram On: 20:05
  • Share The Gag
  • தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .

    அனேகன் படத்தில் ஒரு கேரக்டர் வட சென்னை சுற்றி உள்ளதால் இப்படத்தில் மெர்சலாயிட்டேன் பாடல் மாதிரி ஒரு பாடல் உள்ளதாம்.

    இப்பாடலில் பக்கா லோக்கல் வார்த்தைகள் சேர்க்கபட்டுள்ளது. உதாரணத்துக்கு டங்கமாரி என்று தொடங்கும் அந்த பாடலில் சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி என்ற பக்கா லோக்கல் வார்த்தைகள் உள்ளது.

    தனுஷ் இந்த பாடலில் செம்ம குத்து டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.

    அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்

    By: ram On: 19:17
  • Share The Gag
  • நடிகர் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் - அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.

    அந்த வகையில் அஜித் போல் சால்ட் ன் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார் விவேக் நேற்று இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு "7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்! சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.

    ஹாப்பி நியூ இயர் படத்தை கழுவி ஊத்திய அமிதாப் பச்சன் மனைவி

    By: ram On: 17:30
  • Share The Gag
  • கடந்த தீபவளியன்று உலகம் முழுவதும் வெளியான ஷாருக்கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தை பற்றி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மனைவி ஜெய பச்சன் ஹாப்பி நியூ இயர் ஒரு கேவலமான படம் என்று கூறியுள்ளார்.

    சமீபத்தில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெயா பச்சன், சமீபத்திய சினிமாக்களில் இலக்கியங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளன என கூறினார். தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் படம் பற்றி பேசிய அவர், சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான படம் என்றால் அது ஹேப்பி நியூ இயர் படம் தான்.

    ஒரு பெரிய நடிகர், கேமிரா முன்னால் ரொம்பவே முட்டாளாக நடந்து கொண்டுள்ளார். இன்றைய சினிமாக்கள் இப்படி சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

    சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் தான் எந்த படத்தில் நான் நடிப்பதில்லை என தன் மனதில் பட்டதை பொது மேடையிலே கூறினார்.

    வை ராஜா வை படத்தில் தனுஷ்!

    By: ram On: 08:54
  • Share The Gag
  • ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை’. யுவன் இசையில் சமீபத்தில் தனுஷ் பாடல் எழுத அப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.  

    டாப்ஸி , டேனியல் பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

    '' ’வை ராஜா வை’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷூக்கு நன்றி . இந்தக் காட்சியைப் படமாக்கும் போது கண்டிப்பாக உற்சாகமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

    'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுக்குமாம் லிங்கா படம்..!

    By: ram On: 08:14
  • Share The Gag
  • ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. உடனடியாக இதனை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்களில் ரசிகர்கள் பரப்பினர். 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர் இதனை பார்த்தனர். மேலும் இது பரவி வருகிறது.

    டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று பாலத்தின் மேல் கம்பீரமாக நிற்பது போன்றும் தோன்றும் டிரெய்லரில் ரஜினி இருந்தார்.

    ஒவ்வொரு காட்சியும் ரசிக்கதக்கவையாக இருந்தன என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ‘லிங்கா’ படத்தை டிசம்பர் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் டப்பிங் ரீ-ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் அதற்குள் முடியுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பணிகள் முடியாவிட்டால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.

    படத்தில் பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதை படமாக்குவதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு சென்றுள்ளனர். 'லிங்கா' படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தையும் இப்போதைய காலகட்டத்தையும் உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

    சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினி வேட்டி சட்டையிலும் இப்போதைய ரஜினி மாடர்ன் டிரெஸ்ஸிலும் வருகின்றனர். இதில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார்.

    பெரியாறு அணையைபோல் ஏரி தகராறை மையமாக வைத்து இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குனரால் எடுக்கப்பட்டு சர்ச்சைகளை கிளப்பிய 'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுப்பதுபோல் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் பேச்சு நிலவுகிறது.

    நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகி தங்கை

    By: ram On: 08:02
  • Share The Gag
  • பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா.

    தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

    இவருக்கு உடன்பிறந்த தங்கைகள் இல்லாவிட்டாலும் பரிணிதி சோப்ரா, மீரா சோப்ரா (நிலா) என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    இந்நிலையில் மற்றொரு தங்கையான மன்னாரா ஸ்சித் படம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார்.

    இம்மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக மன்னாரா நிர்வாண போஸ் படங்கள் தந்து பரபரப்பை வெளியிட்டார்.

    Tuesday, 4 November 2014

    விஸ்வரூபம் 2 தாமதம் - விளக்கம் அளித்த கமல்

    By: ram On: 21:47
  • Share The Gag
  • விஸ்வரூபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி வருவது நாம் அறிந்த விஷயம்.

    ஆனால் இப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'உத்தம வில்லன்', ஜூது ஜோசப் இயக்கத்தில் 'பாபநாசம்' என இரண்டு படங்களை முடித்து விட்டார் கமல்.

    இந்நிலையில் விஸ்வரூபம் 2 எப்போது வெளியாகும் என கமல் அவர்கள் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஸ்வரூபம்' முதல் பாகத்திற்கு நேர்ந்த பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்து நான் கவலையடைந்தேன்.

    அதனால் அப்படத்தை வெளியிட காத்திருக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்போது அப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டேன்.

    'விஸ்வரூபம் 2'-ன் படப்பிடிப்பு, ஒரு பாடலைத் தவிர, போன வருடம் அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. தயாரிப்புப் பணிகள் தாமதமாவதால் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

    கார்த்தி - லிங்குசாமி இணையும் படம் கைவிடப் பட்டதா ?

    By: ram On: 21:14
  • Share The Gag
  • அஞ்சான் படத்தின் படுதோல்வி பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறார் லிங்குசாமி. சமுக வலைதளங்களில் அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து மனதை புண்படுத்தினார்கள் .

    இந்நிலையில் அஞ்சான் எடுத்த சமயத்திலே கார்த்தியுடன் "எண்ணி ஏழு நாள்" படத்தின் முலம் மீண்டும் இணைய போகிறோம் என்று அறிவித்தார் லிங்குசாமி. அதன் பிறகு அஞ்சான் ரிலீஸ் ஆக படத்தின் ரிசல்ட் வேற மாதிரி போனதால் கார்த்தி படத்தின் கதை விவாதம் கிடப்பில் போடப்பட்டது.

    கார்த்தியும் வெவ்வேறு படங்களில் பிஸியானார், இந்நிலையில் எண்ணி ஏழு நாள் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்க உள்ளாராம், ஆனால் எனக்கு கதை டெவலப் செய்ய இன்னும் போதுமான நாட்கள் தேவை என்று கார்த்தியிடம் சொல்லி இருக்கிறார். அவரும் சரி என்று கையில் வைத்திருந்த மற்ற சில படங்களில் கமிட் ஆக உள்ளாராம்.

    ஆக மொத்தத்தில் எண்ணி ஏழு நாள் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி.

    மெர்சலாயிட்டேன் பாடல் பற்றி ஷங்கர் சொன்ன ரகசியம்

    By: ram On: 20:56
  • Share The Gag
  • விக்ரம் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஐ.

    இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது , ரஹ்மானின் இசையில் உருவான அணைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் செம்ம ஹிட் .

    இயக்குனர் ஷங்கர் பாடல்களை படமாக்கவதில் பலே கில்லாடி, அவருடைய படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பிரம்மாண்டமாக மட்டுமில்லாமல் வியக்கத்தக்க விஷயங்களும் இருக்கும். அது போல் ஐ படத்தில் அனிருத் குரலில் வரும் மெர்சலாயிட்டேன் பாடல் அனைவரின் பிடித்த பாடலாக அமைந்து விட்டது.

    இப்பாடல் காட்சிகளின் உருவாக்கத்தில் பலரது கடின உழைப்பு அடங்கியுள்ளதாம், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பல கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் பாட்டில் இடம் பெற்று உள்ளது. உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சல் ஆவார்கள் என்று ஷங்கர் கூறினார்.

    படத்தின் வெளியிடு பற்றி தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,'' ஐ படத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர்.

    அவசரப்பட்டு நான் ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது. பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன். நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ’ஐ’ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன் '' என்று தெரிவித்தார்.

    அட்லி - ப்ரியாவுக்கு வருகிற நவம்பர் 9ம் தேதி மறக்க முடியாத நாள்

    By: ram On: 18:03
  • Share The Gag
  • அட்லி மற்றும் ப்ரியா இருவரும் காதலித்து நவம்பர் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

    ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி.

    ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த 27 வயது இளைஞருக்கு, ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த கிருஷ்ண ப்ரியாவுடன் காதல் மலர்ந்தது.

    தங்களது எண்ணங்களை முறைப்படி பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதமும் வாங்கிய இந்த ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

    இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 9ம் தேதி சென்னை ஹயாத் ஹோட்டலில் மாலை நடைபெறவிருக்கிறது.

    இவர்களின் இல்லறம் கடவுளின் வரமாக அமைய  வாழ்த்துக்கள்

    என்னை அறிந்தால் ஷகிலா படத்தின் டைட்டிலா?

    By: ram On: 17:47
  • Share The Gag
  • கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சமீபத்தில் தான் வெளிவந்தது. அப்படத்திற்கு என்னை அறிந்தால் என்ற பெயர் வைத்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலக அளவில் இந்த டைட்டில் ட்ரெண்டாகி சாதனையெல்லாம் படைத்தது.

    இப்போது இந்த டைட்டிலை இது ஒரு டைட்டிலா என்று சொல்லும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது 2002 ஆம் ஆண்டு 'கவர்ச்சி நடிகை ஷகீலா' மற்றும் 'கவர்ச்சி புயல் ரேஷ்மா' நடிப்பில் வெளிவந்த படத்தின் பெயரும் 'என்னை அறிந்தால்'.

    இந்த தகவலை ஷகிலாவின் என்னை அறிந்தால் படத்தின் போஸ்டரோடு ஒருவர் டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். என் தலைவியின் பட டைட்டிலை எப்படி அஜித் படத்திற்கு வைக்கலாம் என ஆவேச கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

    இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இதுதான் சரியான நேரம் என்று அஜீத் ரசிகர்களை மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ரசிகர்களை ஏமாற்றிய ரஜினிகாந்த்

    By: ram On: 10:12
  • Share The Gag
  • டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்த ஒரிரு நாட்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டவர் ரஜினிகாந்த்.

    அவர் டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்த சில நாட்களுக்கு கோச்சடையான் படத்தை பற்றியும், தனது மகள் செளந்தர்யாவிற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்க மட்டுமே பயன்படுத்தினார். அவர் கடைசியாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்தது மே 23ம் தேதி.

    கடந்த ஐந்து மாதங்களாக வேறு எந்த பதிவையும் போடவில்லை. மேலும் அவரது ரசிகர்கள் லிங்கா படம் பற்றி ஏதாவது தலைவர் போடுவார் என்று காத்திருந்தனர். ஆனால் லிங்கா படத்தை பற்றியும் இதுவரை ரஜினிகாந்த் எந்த பதிவையும் போடவில்லை.

    அதோடு  லிங்கா படத்தின் டீஸர் வெளியானது. ரஜினிகாந்த் லிங்கா டீஸரையாவது தனது டுவிட்டர் பக்கத்தில் போடுவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்று காலை வரை லிங்கா படத்தை பற்றிய ஒரு தகவலையும் போடவில்லை.

    படத்தை பற்றிய பதிவாக ஒரு வார்த்தைக் கூட இல்லாதது ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

    நீங்க தான் அடுத்த நயன்தாரா -புகழ் பாடும் சந்தானம்

    By: ram On: 09:02
  • Share The Gag
  • கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய வெற்றி படங்களை அடுத்து சந்தானம் ஹீரோவாக இன்னொரு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

    'தில்லுக்கு துட்டு' என்ற இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நாயகியாக நடித்த பெங்களூர் மாடல் அழகி அகிலா கிஷோர், ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் இதுவரை நான் ஏற்காத வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறேன். மேலும் இந்த படத்தில் அஸ்னா ஜவேரியும் என்னுடன் நடிக்கின்றார்.

    இந்த படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றபோது என்னுடைய முக அமைப்பை பார்த்த படக்குழுவினர் அனைவரும் நான் நயன்தாரா மாதிரியே இருப்பதாக கூறினர். உண்மையில் நான் நடிப்பிலும் நயன்தாரா மாதிரியே புகழ் பெறவே விரும்புகிறேன்.

    சந்தானத்தின் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து தனக்கு தமிழில் பல்வேறு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், பெங்களூர் பெண்ணான இவர் இதையடுத்து சென்னையில் செட்டிலாக உள்ளதாகவும் கூறினார்.

    கதை திருட்டு பிரச்சனை தடுக்க விக்ரமன் புது முயற்சி

    By: ram On: 08:50
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பிரச்சனை கதை திருட்டு. பெரிய பிரபலங்கள் முதல் தற்போது வளர்ந்து வரும் பிரபலங்கள் வரை இந்த பிரச்சனை தொடர்கிறது.

    இப்பிரச்சனை மிகவும் அதிக அளவில் பாதித்தது கத்தி படத்திற்கு தான், ஆனாலும் படம் வெளியாகி 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் அதிகரித்து வரும் இப்பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், படங்களுக்கு தலைப்பு பதிவு செய்வதை போன்று, ஒரு படத்தின் கதையையும் இயக்குநர் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கதை திருட்டை தடுக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.