Wednesday, 20 August 2014

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க . . !

By: ram On: 23:01
  • Share The Gag

  • குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

    உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

    பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

    தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

    இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

    இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

    தல 55-ல் அஜீத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    By: ram On: 22:24
  • Share The Gag

  • கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தில், அவருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

    இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ 40 கோடி ஒரே தவணையில் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வருமான வரியாக மட்டுமே ரூ 12 கோடியை செலுத்திய அஜீத், மீதித் தொகையை காசோலை மூலம் 'வெள்ளை'யாகவே பெற்றுள்ளார் என்பதுதான் சிறப்பு.

    தல 55-ல் அஜீத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    தமிழ் சினிமாவில் தன் சம்பளத்தை முழுக்க முழுக்க வெள்ளையாகவே பெற்றுக் கொள்ளும் நடிகர்கள் அபூர்வம். ரஜினி தன் சம்பளத்தில் வருமான வரி செலுத்தியது போக, மீதித் தொகையை காசோலை மூலமே பெற்றுக் கொள்கிறார். பல ஆண்டுகளாக இது தொடர்கிறது.

    இப்போது அஜீத்தும் சம்பளத்தை காசோலை மூலம் பெற்றுக் கொள்கிறார். இப்போது அவர் நடித்து வரும் தல 55-படத்துக்கு அவரது சம்பளம் ரூ 40 கோடி என்று தெரியவந்துள்ளது. இதில் வருமான வரி பிடித்தம் போக ரூ 28 கோடி அவருக்கு தரப்பட்டுள்ளதாம்.

    அஜீத் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு சம்பளமாக ரூ 50 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

    அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

    By: ram On: 20:07
  • Share The Gag

  • தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றியும், உடல் அமைப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை.

    ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண்களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந்தையை பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

    கூந்தல் உதிர்வு

    கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதிலேயே இழந்துவிடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர்கிறது. எனவே இரும்புச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும். கூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும்.

    வறண்ட சருமம்

    கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில் செதிலாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மையடையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும் போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

    கூந்தல் உதிர்வு

    கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

    பித்த வெடிப்பு

    நீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.

    மாஸ் படத்தில் சூர்யாவின் அசத்தல் கெட்டப் ரகசியங்கள்!

    By: ram On: 18:38
  • Share The Gag

  • அஞ்சான் படத்தை முடித்த கையோடு சூர்யா மாஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, நயன்தாரா, எமி ஜாக்ஸன் நடிக்கவுள்ளனர்.

    இதில் வேறு எந்த படங்களிலும் இல்லாத வகையில் புதிய தோற்றத்தில் சூர்யாவை காட்டபோகிறார்களாம். அதிலும் இரண்டு விதமான கெட்டப்புகளில் சூர்யா கலக்க இருக்கிறார்.

    முடி நீளமான ஒரு கதாபாத்திரமும், மற்றொரு கதபாத்திரம் ரகசியமாக வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    'நான் அழகாயிருக்கேனா?' - கணவரிடம் சும்மா 'தொணதொண'க்காதீங்க!

    By: ram On: 17:36
  • Share The Gag

  • இல்லறத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். அந்தரங்கமாக பேசும் விசயங்களை அவையில் பேசுவது நாகரீமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்திவிடும். அதேபோல் கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வரைமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். ஆண்களுக்கு எது எது பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளனர். அவற்றை படித்து பின்பற்றிப் பாருங்களேன்.

    அடிக்கடி போன் பண்ணாதீங்க

    காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி டிஸ்டர்ப் செய்வது பிடிக்காதாம்.

    துணைக்கு கூப்பிடாதீங்க

    சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லுங்கள். எதையாவது சொல்ல வந்து பின்னர் அதை விடுங்க என்று பொடி வைத்து பேசுவது கணவரை எரிச்சல் படுத்துமாம்.

    எந்த விசயமென்றாலும் தனியாக சமாளித்து பழகுங்கள். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கணவரை துணைக்கு அழைப்பது பிடிக்காதாம். ஏனெனில் அவருக்கும் நிறைய வேலை இருக்கும் இல்லையா?

    சந்தேகம் வேண்டாம்

    சம்பளப் பணத்தைப் பற்றி எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்காதீங்க. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவி மேல் வெறுப்பு வர அதுதான் காரணமாக உள்ளது.

    வேலை விசயமாக வெளியே அலைந்து விட்டு கணவன் வீட்டுக்கு திரும்பும் போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசுவது கணவனுக்கு பிடிக்காதாம். முக்கியமாக ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுத்திட்டு வர்ரீங்க என்று கேட்க கூடாதாம்.

    அழுவது பிடிக்காது

    ஏதாவது ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து பயப்படுவது தேவையற்றது. தனக்கென வாழாமல் சமூகத்திற்காக பயந்து வாழும் பெண்களை கணவருக்கு அறவே பிடிக்காதாம்.

    எதையும் அழுது சாதிக்கலாம் என்று நினைக்கும் மனைவியை கணவருக்கு அறவே பிடிக்காதாம். அழுது வடியும் அழுமூஞ்சி பெண்களை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவார்களாம்.

    மாற்ற நினைக்க வேண்டாம்

    கணவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தனக்கு பிடித்தமாதிரிதான் இருக்க வேண்டும் என்று கணவரை மாற்ற முயற்சி

    செய்வது கூடாதாம். அது சிக்கலில் கொண்டு போய் விடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

    அதேபோல் சாப்பிடும் நேரத்தில் சந்தோசமாக சாப்பிடாமல் குடும்ப பிரச்சினைகளை கிளறுவது சுத்தமாக பிடிக்காத விசயமாம். கணவருக்காக காத்திருக்கிறேன் பேர்வலி என்று இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது பிடிக்காத விசயமாம்.

    ரூல்ஸ் பேசுவது கூடாது

    வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதி வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது ரூல்ஸ் பேசுவது பிடிக்காத விசயமாம். அதேபோல் வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது பிடிக்காதாம். முக்கியமாக அவரது நண்பர்களைப் பற்றி தவறாக பேசுவது, மட்டம் தட்டிப்பேசுவது பிடிக்கவே பிடிக்காதாம்.

    ஒப்பிட வேண்டாம்

    என் தங்கை வீட்டுக்காரர் அந்தமாதிரி இருக்கார். பக்கத்து வீட்டுக்காரர் தன்னோட மனைவிக்கு இதெல்லாம் செய்து கொடுக்கிறார் என உங்கள் கணவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். இது உலக மகா எரிச்சலை ஏற்படுத்துமாம்.

    பொய் சொல்ல வைக்காதீங்க

    புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.

    குழந்தையின் தொப்புளில் சாம்பல் பூசாதீங்க!

    By: ram On: 15:58
  • Share The Gag

  • குழந்தை வளர்ந்து ஆளாகும் வரை அதை நோய்தாக்காமல் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் அக்கம் பக்கத்தார் கூறும் தேவையற்ற மூடநம்பிக்கையான செயல்களினால் அந்த குழந்தை பெரும்பாடு பட்டுவிடும். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்.

    தொப்புள் கொடி

    கருவில் இருக்கும் குழந்தைக்கும் தொடர்பில் இருக்கும் தொப்புள் கொடியை கட் செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள். குழந்தையில் வயிற்றில் சிறிய அளவில் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடியை கிளிப் மாட்டியிருப்பார்கள். இந்த பகுதியை தொற்றுநோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.

    ஐந்து நாட்களுக்குள் இந்த தொப்புள் கொடி காய்ந்து விழுந்து விடும். ஆனால் இன்றைக்கும் சில கிராமங்களில் தொப்புள் கொடிக்கு சுண்ணாம்பு, சாம்பல் போன்றவற்றை தடவினால் சீக்கிரம் தொப்புள் காய்ந்து விடும் என்று பூசுவார்கள். ஆனால் அது குழந்தையின் உயிருக்கே உலை வைத்துவிடும். தொப்புளில் சுண்ணாம்பு பூசுவதால் குழந்தை டெட்டனஸ் என்னும் ஜன்னி தாக்கி இறந்துவிடும்.

    சீம்பால் தர மறுப்பு

    குழந்தை பிறந்த உடனே தாய்க்கு சுரக்கும் சீம்பாலை சூனியக்காரியின் பால் என கொடுக்க மறுத்துவிடுவார்கள். இது தவறான செயலாகும். மஞ்சள் நிறத்தில் சுரக்கும் அந்த தாய்பாலில்தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

    கண்ணில் எண்ணெய்

    குழந்தையின் கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் எண்ணெய் விடுவார்கள். இது ஆபத்தானது. நேராக நுரையீரலை சென்று தாக்கி தொற்று நோயை ஏற்படுத்திவிடும்.

    நீல நிற கண்கள்

    பிறந்த குழந்தையின் கண்கள் நீல நிறத்தில் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பார்கள். இது தவறான கருத்து. குழந்தையின் கண்களின் நிறத்திற்கு காரணமான கார்னியா படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரிஜினல் நிறத்திற்கு மாறும். 6 மாதங்களில் கண்களில் ஒரிஜினல் நிறம் கிடைத்து விடும்.

    சூரிய ஒளியில் காட்டுதல்

    காலையில் சூரிய ஒளியில் குழந்தையை காட்டுவது அவசியம் என்று பிறந்த குழந்தையை வாட்டி எடுப்பார்கள். இது தவறான செயல். இதனால் குழந்தையின் மென்மையான தோல் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படும்.

    ஹன்சிகா குளிப்பதை அவரே வீடியோ எடுத்து வெளியிட்டார்!

    By: ram On: 15:31
  • Share The Gag

  • கதாநாயகிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக ஏதும் செய்து கொண்டே தான் இருப்பார்கள் போல, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் விழிப்புணர்வுக்காக ஐஸ் கட்டி தண்ணீரில் குளித்து ஒரு வீடியோ வெளியிட்டார்.

    இது உலகம் முழுவது பரவி பல முன்னணி நட்சத்திரங்கள் இதுபோல் செய்து வெளியிட்டனர். தற்போது அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார்.


    கதாநாயகிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக ஏதும் செய்து கொண்டே தான் இருப்பார்கள் போல, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் விழிப்புணர்வுக்காக ஐஸ் கட்டி தண்ணீரில் குளித்து ஒரு வீடியோ வெளியிட்டார்.
    இது உலகம் முழுவது பரவி பல முன்னணி நட்சத்திரங்கள் இதுபோல் செய்து வெளியிட்டனர். தற்போது அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107573/#sthash.262s1tvs.dpuf

    பிரசவத்தால் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்கை நீக்க இயலாதா?

    By: ram On: 14:47
  • Share The Gag

  • ஸ்ட்ரெச் மார்க்’ தொல்லைக்கு அருமருந்தாக வந்துள்ளது ‘அரோமா ஆயில்’. மூலிகை மற்றும் சாறுகளால் தயாராகும் அரோமா எண்ணெயை கீறல் வடுக்களின்மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.


    மாதம் ஒரு முறை வீதம் பிரசவத்திற்கு முன்பான
    மூன்று மாதங்களும், பின்பு மூன்று மாதங்களும் என ஆறு மாதம் தொடர்ந்து இதைச் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் முற்றிலுமாக நீங்கிவிடும்.



     இதுதவிர, பிரசவ வடுக்களை நீக்க சில உடற்பயிற்சிகளும் உள்ளன. அவற்றை தொடர்ந்து செய்தாலும் பலன் உண்டு. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.

    யுவனைப் பாராட்ட மறந்த இளையராஜா...!

    By: ram On: 11:16
  • Share The Gag

  • தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, தனக்கு பிறகு வந்த எந்த இசையமைப்பாளர்களின் திறமையையும் இதுவரை மனம் திறந்து பாராட்டியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரகுமானைகூட அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கி வந்த பிறகுதான் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தானும் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.

    அதேசமயம், தனது மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் திறமையைதான் ஆரம்ப கலத்தில் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவரைத்தான் பெரிய அளவில் வருவார் என்றும் எதிர்பார்த்தார். மாறாக, அவர் எதிர்பார்க்காத யுவன் ஷங்கர் ராஜா பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட அவர் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில், உங்களது இசையில் உருவான பாடல்களில் இளையராஜாவுக்கு பிடித்தமான பாடல்கள் ஏதாவது உள்ளதா? என்று யுவனிடம் கேட்டால், நான் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டேன். சமீபகால எனது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ஆனால், என் தந்தைக்கு எனது இப்போதைய பாடல்கள் எதுவும் பிடித்ததாக அவர் என்னிடம் சொல்லவில்லை.

    ஆனால், தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் என் இசையில் உருவான இது காதலா என்ற பாடலை அந்த சமயத்தில் ஒருநாள் என் தந்தை பாராட்டினார். அதன்பிறகு இன்றுவரை என்னை அவர் பாராட்டியதில்லை. ஆனாலும் அந்த முதல் பாராட்டு இன்று வரை என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது எனகிறார் யுவன்.

    மாமனார் இல்லாத புகுந்த வீடு...!

    By: ram On: 10:39
  • Share The Gag

  • மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

    புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக அனுபவம் மாமியாரைவிட மாமனாருக்கு அதிகம்.

    எப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.

    தவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பு வேண்டும். பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான்.

    மகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார். மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? மண வாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை மனம் விட்டு யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. அப்போதெல்லாம் மாமனார் இல்லாத குறை மருமகளை வாட்டும்.

    கணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் எப்பாடுபட்டாவது வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் உன்னத பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும் என்பது பல பெண்களின் கருத்து.

    மாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்!

    இளமையான அரசனுக்கு முதுமையான அமைச்சர் ஒருவர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பது முன்னோர் வாக்கு. அப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த மாமனாரின் அறிவுரை வேண்டியிருக்கிறது. தன் மகனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் ஆழ்ந்த அறிவு தந்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது.

    ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார். குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள். மருமகளுக்கு புகுந்த வீட்டில் மிக முக்கிய நபர் மாமனார். அவர் இல்லாத வீடு காவலாளி இல்லாத தோட்டம் போன்றது.

    ஷங்கரின் பர்த் டே பார்ட்டியில் விஜய்! கைவிடப்பட்ட எந்திரன் 2 EXCLUSIVE தகவல்கள்…!

    By: ram On: 09:20
  • Share The Gag

  • டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா கொடுப்பார்? அவரது மனசுக்கும் தொழிலுக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் வந்திருந்தார்களாம் பார்ட்டிக்கு. முக்கியமாக விக்ரமும், ஐ படத்திற்கு சம்பந்தமேயில்லாத விஜய்யும்.

    ‘நண்பன்’ படத்திற்கு பிறகு விஜய்யும் ஷங்கரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும். அது ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் அங்கபிரதட்ஷணம் செய்யாத குறைதான். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவே இல்லை. ஷங்கரும் எந்திரன் பார்ட் 2 எடுக்க முடிவு செய்து அதில் ரஜினியை நடிக்க கேட்டு வருவதாக தகவல். தற்போது இருக்கிற உடல் நிலையை கருத்தில் கொண்ட ரஜினி, இதற்கான பதிலை தள்ளி தள்ளி போட்டு வருகிறார். அஜீத் நடிப்பதாகவும் ஒரு தகவல் கிளம்ப, அதையும் அழுத்தமாக மறுத்திருக்கிறார் ஷங்கர். இந்த நிலையில்தான் எந்திரன் 2 வில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சியாக இந்த பார்ட்டியை கருதலாமா என்ற கேள்வி எழுந்தது திரையுலத்தில்.

    விசாரித்தால் அதுவும் இல்லையாம். எந்திரன் பார்ட் 2 என்கிற திட்டத்தையே இப்போதைக்கு கையில் எடுக்கப் போவதில்லையாம் ஷங்கர். வேறொரு கதையை தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். அதற்கான டிஸ்கஷன் வேலைகளும் இப்பவே துவங்கிவிட்டதாக கேள்வி. அந்த புதிய படத்தில் விஜய் நடிக்கக் கூடும் என்கிறது புதிய தகவல்கள்.