Tuesday, 9 September 2014

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடாமையால் ஏற்படும் பாதிப்புக்கள்

By: ram On: 23:11
  • Share The Gag
  • ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம்

    இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே.

    ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.

    அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.

    உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.

    அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

    இயற்கையை வென்றது யார் தான்…? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.

    அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.

    அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்.

    உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.

    தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும்.

    இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும்.

    எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.

    அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.

    உலக சினிமா ரசிகர்களை வியக்கவைத்த காக்கா முட்டை!

    By: ram On: 22:09
  • Share The Gag
  • வெற்றிமாறன் -தனுஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. இப்படத்தை மனிகண்டன் என்பவர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே டொரொண்டோ ஃபிலிம் விருதிற்கு அனுப்பபட்டது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த பல உலக சினிமா வல்லுனர்கள் மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

    இதை பற்றி முழுமையாக அறிய டுவிட்டர் வலைத்தளத்தில் The Crow's Egg என்ற தலைப்பில் தேடினால் பல தகவல்கள் கிடைக்கும்.

    உடல் பருமனை குறைக்கும் கரிசலாங்கண்ணி!

    By: ram On: 21:03
  • Share The Gag
  • வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

    1. தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

    2. காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

    3. பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.

    4. கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

    5. விவசாயிகளுக்கும் சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதாரணமாக வரக்கூடியது சேற்றுப்புண். இதை குணமாக்க கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.

    6. சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.

    நான் பார்த்த மனிதர்களில் விஜய் தான் சிறந்தவர்!

    By: ram On: 20:19
  • Share The Gag
  • கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வேகமாக வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் இளைய தளபதியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

    இதில் ‘என் வாழ்வில் விஜய் போல் எளிமையான நல்ல மனிதரை பார்த்தது இல்லை, அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது மனதிற்கு மிக நிறைவை கொடுத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

    தற்போது படக்குழு ‘செல்பி புள்ள’ பாடலை படமாக்க படக்குழு லண்டன் சென்றுள்ளது.

    ஆயுர் வேதத்தில் வயாக்ரா !

    By: ram On: 19:49
  • Share The Gag
  • இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது.

    ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

    அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

    மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.
    ……காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.
    அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.

    கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

    நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது. 

    பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்!

    By: ram On: 17:09
  • Share The Gag
  • பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
    உடல் மெலிவான தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். உடல் எடையை குறைப்பதற்காக பலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

    பால் கலக்காத டீயை மட்டும் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    ஏனெனில் தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் கலக்கப்படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால், அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்கிறது.

    எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும் ரத்த அழுத்தம் குறையும் என அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பசிக்க 7 வழிகள்...

    By: ram On: 08:05
  • Share The Gag
  • ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

    * நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

    *சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

    * உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

    * உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
    *சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

    *சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

    *எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

    சார்… நீங்கதான் உதவணும்! தாணுவிடம் சரண்டர் ஆன அதர்வா

    By: ram On: 07:27
  • Share The Gag
  • கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின் மார்க்கெட்டில் அதள பாதாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துவிட்டது. இந்த பேரதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். இத்தனைக்கும் இந்த படம் பிரேக் ஈவன் ஆகிருச்சு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து நாதஸ்வரம் ஊதினாலும், அதை சங்கு சப்தமாகவே கருதுகிறது கோடம்பாக்கம். ஏனென்றால் அதர்வா கேட்கும் சம்பளம் அப்படி.

    பின்வரும் படங்கள் தன்னை காப்பாற்றுமா, மாட்டாதா? என்கிற கவலையெல்லாம் அதர்வாவை வாட்டி எடுக்க, அண்மையில் வலிய சென்று பிரபல தயாரிப்பாளர் தாணுவை சந்தித்திருக்கிறார் அவர். ‘சார்… ஒரு ஹீரோவை முறையா பிரமோட் பண்ணி, அவருக்கு ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுப்பது ஒரு கலை. அதை சரியாக செய்வது நீங்கதான். எனக்கும் கை கொடுத்து உதவணும்’ என்று கேட்டுக் கொண்டாராம்.

    ‘உங்க அப்பா முரளி மேல எனக்கு தனி பாசம் உண்டு. அவருக்காக செய்யுறேன். பதறாமல் போப்பா.. ’ என்று ஆறுதல் கூறி அனுப்பியிருக்கிறார் தாணுவும்.

    முல்லைக்கு தேர் கொடுப்பீங்களோ, மூஞ்சுருக்கு கொழுக்கட்டை கொடுப்பீங்களோ? முதல்ல அதர்வாவுக்கு ஒரு ஹிட்டு கொடுங்கப்பா…!

    பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

    By: ram On: 06:53
  • Share The Gag
  • (paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

    உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

    குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

    அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

    எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

    அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

    ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

    பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

    நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

    இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

    இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.