Tuesday, 23 September 2014

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

By: ram On: 23:02
  • Share The Gag
  • ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார்.

    ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது அரண்மனைச் சேவகர்கள் எதையோ தேடிக் கொண்டு மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.

    அந்தச் சேவகர்கள் ஜடிக்கிடம் அவர் வரும் வழியில் ஒரு நாயைக் கண்டாரா என்று கேட்டனர். அந்நாய் மகாராணியினுடையது. அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

    ஜடிக், அவர்களிடம் அந்த நாயைப் பற்றி விவரித்தார். “ஒரு கட்டையான பெண் நாய். காதுகள் கீழே படும்படியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சமீபத்தில்õன் குட்டிகளை ஈன்றது. அதனுடைய முன் வலது கால் சிறிது ஊனமாக இருக்கும்’ என்றார்.

    அவர்களும் ஆவலுடன் அந்த நாய் எங்கே சென்றது என்று கேட்கவும் அவர், “எனக்கு அரசியிடம் ஒரு நாய் இருப்பதே தெரியாது. நான் அதைப் பார்த்ததும் இல்லை’ என்றார். அவர்கள் ஏமாற்றமடைந்து நாயைத் தேடுவதைத் தொடர்ந்தனர்.

    அதே சமயம் அரசரின் பிரதான குதிரையையும் காணோம். அதைத் தேடியவாறு வந்த சேவர்களும் ஜடிக்கைப் பார்த்து அவரிடம் அரசரின் குதிரையை அவர் பார்த்தாரா என்று வினவினார்.

    ஜடிக் சொன்னார். “அந்தக் குதிரை 5 அடி உயரம், வாலின் நீளம் மூன்றரை அடி. நல்ல பாய்ச்சல் குதிரை. வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டது. அதன் சேணம் 23 காரட் தங்கத்தாலானது.’

    அவர்களும் மிக ஆர்வத்துடன் அக் குதிரை எந்தப் பக்கம் சென்றது என்று கேட்டார்கள். அவர் குதிரையைப் பார்க்கவில்லை என்று சொல்லவும் அவர்கள் அவரைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்தார்கள். விஷயத்தைக் கேள்வியுற்ற அரசர் ஜடிக்கை சைபீரியாவிற்கு நாடு கடத்தும்படியும், அவர் அபராதமாக 400 அவுன்ஸ் தங்கம் தரவேண்டும் என்றும் தண்டனை கொடுத்தார்.

    அப்போது, காணாமற்போன நாயும், அரசரின் குதிரையும் கிடைத்து விட்டதாகத் தகவல் வந்தது. அதனால் ஜடிக் பெற்ற நாடு கடத்தல் தண்டனையை ரத்து செய்து, அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்திட உத்தரவிட்டார.

    ஜடிக்கிடம் எப்படி அவரால் காணாமற்போன மிருகங்களை அவ்வளவு துல்லியமாக வர்ணிக்க முடிந்தது என்று அரசர் முதல் அவையில் இருந்த அனைவரும் கேட்டார்கள்.

    ஜடிக் சொன்னார்: “நான் சென்று கொண்டிருந்த மணற் பாங்கான சாலையில் ஒரு நாயின் காலடித் தடத்தைக் கண்டேன். அதன் முன்புறத்து வலதுகால் ஊனமாக இருந்ததால் அந்தக் கால் தடம் சரிவர காணப்படவில்லை; அதன் காதுகள் தரையைத் தொட்டுக் கொண்டு தொங்கியவாறு இருந்ததால் அந்தக் காதுகளின் தடயம் மண் பாதையில் தெரிந்தது. அது சமீபத்தில்தான் குட்டிகள் ஈன்றிருந்தபடியால் அதன் மடியும், காம்புகளும் மணலில் கோடாகத் தெரிந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டுதான் என்னால் நாயைப் பற்றிச் சரியாக ஊகித்துக் கூற முடிந்தது.’

    “குதிரை விஷயம் என்னவென்றால் நான் சென்று கொண்டிருந்த மண்பாதையின் அகலம் 7 அடி. குதிரை சரியான நாலுகால் பாய்ச்சலில் சென்றதால், அதன் வாலின் அசைவுகளால் சாலையோரம் இருந்த மரங்களில் தூசு இல்லாமல் இருந்தது. அதனால் குதிரையின் வால் மூன்றரை அடி நீளம் என்றேன். சுமார் 5 அடி உயரம் வரை மரங்களின் இலைகள் குதிரையின் தலையில் பட்டு உதிர்ந்திருக்கவே அது 5 அடி உயரம் இருக்கும் என்றேன். அதன் குளம்புகளின் தடங்களில் வெள்ளி ரேகைகள் தென்பட்டதால் அதற்கு வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டு இருக்கும் என்று சொன்னேன். அதனுடைய சேணம் ஒரு பாறையில் கீறிக்கொண்டு சென்றிருந்தது. அதனால் அந்தத் தங்கம் 23 காரட் என்றேன்’ இவ்வாறு அவர் விளக்கம் கூறவும் அரசரும் அவையோரும் அவரது புத்திகூர்மையைப் புகழ்ந்தார்கள்.

    ஆனாலும் என்ன! வழக்கை விசாரித்ததற்காக அவரிடமிருந்து 398 அவுன்ஸ் தங்கமும், மீதி 2 அவுன்ஸ் தங்கம் அரண்மனைச் சேவகர்களுக்கு பரிசாகவும் வசூலிக்கப்பட்டது.

    ஆக, ஜடிக்கின் மிதமிஞ்சிய புத்திக் கூர்மையால் அவருக்கு 400 அவுன்ஸ் தங்கம் இழப்பு! இதுதான் அவர் கண்ட பலன். தனது புத்திசாலித்தனத்திற்காகத் தன்னையே நொந்து கொண்டார்.

    ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு

    By: ram On: 21:24
  • Share The Gag
  • எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

    இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

    ஆண் என்பவன் யார்?

    ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

    அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

    பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
    தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

    அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

    அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

    இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

    பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

    அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

    ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

    இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

    அதிகப்படியான உடல் பருமனால் சந்திக்கக்கூடிய விநோதமான பிரச்சனைகள் !

    By: ram On: 20:23
  • Share The Gag
  • குண்டாக இருப்பது என்பது வாழ்க்கையை சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு செல்ல மிகவும் தடையாக இருக்கும். ஏனெனில் ஒருமுறை குண்டாகிவிட்டால், அதனால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

    மேலும் அனைவருக்கும் உடல் பருமனடைந்தால், இந்த பிரச்சனைகள் மட்டும் தான் வரும் என்று தெரியும். ஆனால் உடல் பருமனடைந்தால், இதுப்போன்று இன்னும் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், உதாரணமாக உடல் பருமனடைந்தால் நிம்மதியான தூக்கத்தை இழக்க நேரிடும். இதுப்போன்று நிறைய பிரச்சனைகள் உடல் பருமனடைந்தவர்கள் சந்திப்பார்கள்.

    தூக்கமின்மை

    உடல் பருமனடைந்தவர்களால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் தூங்கும் போது, காற்று செல்லும் வழியானது அடைத்து, தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இதனால் தூங்கும் போது மிகுந்த கஷ்டத்தை உடல் பருமன் அடைந்தவர்கள் சந்திப்பார்கள்.

    குறட்டை

    ஒருவேளை அசதியில் தூங்கிவிட்டால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தினால், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் குறட்டையின் சப்தமானது எழுகிறது.

    விரைவில் முதுமை தோற்றம்

    ஆய்வு ஒன்றில், உடல் பருமன் அடைந்தவர்கள் புகைப்பிடிப்பவர்களை விட சீக்கிரம் முதுமை தோற்றத்தை பெறுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கண்புரை நோய்

    பொதுவாக கண்புரை நோயானது உடல் பருமனடைந்தவர்களுக்கு ஏற்படும். ஏனெனில் உடல் பருமன் அதிகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு குறைந்துவிடுகிறது.

    செரிமான பிரச்சனை

    உடல் பருமன் அடையும் போது, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களானது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தி, அசிடிட்டி, செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

    குடலிறக்கம்

    உடல் பருமன் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், அவர்களுக்கு குடலிறக்கத்திற்கான பாதிப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் வயிறு பெரிதாக இருப்பதால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அப்போது வெட்டுப்பட்ட இடத்தில் தசைகளானது வளர்ந்துவிடுகிறது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான வலியை உணரக்கூடும்.

    புரோஸ்டேட் அளவு அதிகரிக்கும்

    உடலின் பருமன் அதிகரிக்கும் போது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியும் பெரிதாக ஆரம்பிக்கும். இதனால் புரோஸ்டேட் பெரியதாகி, நாளடைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

    கற்பதில் சிரமம்

    சிறுவயதிலேயே குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டால், ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்களின் கற்கும் திறனானது குறைந்துவிடும்.

    நோயெதிர்ப்பு சக்தி குறைவு

    உடல் பருமன் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இதனால் தான் அவர்களுக்கு நோய்களானது எளிதில் தொற்றுகிறது.

    ஆஸ்துமா

    அதிகப்படியான உடல் பருமன் இருந்தால், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதோடு, அந்த ஆஸ்துமாவும் மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்.

    கீல்வாதம்

    அதிகப்படியான யூரிக் அமிலத்தின் வெளிப்பாட்டினால், மூட்டுகளில் உள்ள திசுக்களாது உடைக்கப்பட்டு கீல்வாதம் ஏற்படுகிறது. பொதுவாக இத்தகைய பிரச்சனை எந்த வயதில் உடல் பருமனுடன் இருந்தாலும் ஏற்படும்.

    விறைப்புத்தன்மை குறைபாடு

    ஆண்கள் உடல் பருமனாக இருக்கும் போது, நீரிழிவு, உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் பெரிதான புரோஸ்டேட் ஆகியவற்றினால், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டு, குழந்தை பிறப்பதில் பிறப்பதில் கஷ்டமாகிவிடும்.

    வெங்கட் பிரபு படத்திலிருந்து யுவன் மாற்றம்!

    By: ram On: 20:11
  • Share The Gag
  • வெங்கட் பிரபு படங்களில் அவர் தம்பி ப்ரேம்ஜி எப்படி இருக்கிறாரோ, அதே போல் இசைக்கு என்றுமே யுவன் தான். தற்போது வெங்கட் பிரபு, சூர்யா நடிப்பில் மாஸ் படத்தை இயக்கி வருகிறார்.

    இப்படத்திற்கும் இசை யுவன் தான், இவர் சமீபத்தில் தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். ஆனால் பெயர் மட்டும் இன்னும் தன் பழைய பெயரை தான் டைட்டில் கார்டில் பயன்படுத்துகிறார்.

    இந்நிலையில் மாஸ் படத்திலிருந்து தன் இஸ்லாமிய பெயரையே திரையில் போட முடிவு செய்துள்ளாராம்.

    சிறுநீரகம், சிறுநீரகத்தில் கற்கள் ... என்னென்ன செய்யலாம்..செய்யக்கூடாது..!

    By: ram On: 19:55
  • Share The Gag
  • இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.

    சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

    சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது.

    நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் முலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் முளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

    திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.

    சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும்.

    சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம்.

    சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும்.

    பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது.

    பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.

    கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.

    மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த லிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

    சிறுநீரகத்தில் கற்கள்

    உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்..

    ஐ ஹிந்தி பதிப்பை வெளியிட வரும் சில்வஸ்டர் ஸ்டோலன்?

    By: ram On: 19:43
  • Share The Gag
  • ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    அக்டோபர் மாதம் 2ம் தேதி இப்படத்தில் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. இதை தொடர்ந்து பாலிவுட் பெரிய மார்க்கெட் என்பதால், அங்கு இசை வெளியிட ஒரு ஹாலிவுட் நடிகரை அழைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

    இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது ராம்போ, ராக்கி போன்ற படங்களின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்த சில்வஸ்டர் ஸ்டோலன் தானாம். இது குறித்து தயாரிப்புக்குழு விரைவில் பல தகவல்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

    By: ram On: 18:52
  • Share The Gag


  • சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.

    சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். 1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.

    2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.

    3.வயிறு, குடல்:அசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.

    4.மூக்கு: சளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.

    5.பல்,ஈறுகள்: பற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.

    6.கண்கள்: கண்களில் கட்ட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.

    7.காது: காதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.

    இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.

    தொற்றுக்களை தடுக்க:

    1.சக்கரை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

    2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள்  நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.

    3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.

    4. உடற்பயிற்சி,மூச்சுப் பயிற்சி

    5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.

    6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.

    7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.

    8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

    9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

    10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

    11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.

    12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.

    13.கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

    14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.

    ரஜினிக்கே கிளாஸ் எடுத்த அனுஷ்கா!

    By: ram On: 18:38
  • Share The Gag
  • கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் அனுஷ்கா படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு கிளாஸ் எடுத்து வருகிறாராம். என்னது சூப்பர் ஸ்டாருக்கே கிளாஸா? என்று கோபப்பட வேண்டாம்.

    இது யோகா கிளாஸ் தான், அதே சமயத்தில் ரஜினி ஆன்மிக மற்றும் தியானம் குறித்து பல தகவல்களை கூறுகிறாராம்.

    விஜய்-58 படத்தில் எனது கதாபாத்திரம்? சொல்கிறார் சுதீப்

    By: ram On: 18:26
  • Share The Gag
  • நான் ஈ என்ற ஒரு படத்தின் மூலம் நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் சுதீப். இவர் கன்னட திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான்.

    இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

    இதில் ’இப்படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதே நேரத்தில் வில்லனும் இல்லை. இப்படத்தில் ஸ்ரீதேவி அவர்களுடன் இணைந்து நடிப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    சொல்லித்தெரிவதில்லை எனும் "கலை" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்

    By: ram On: 17:43
  • Share The Gag
  • சொல்லித்தெரிவதில்லை ''அந்த'' கலை என்று கூறப்பட்டாலும் ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி, குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

    படிக்காதவர்கள் என்பதனாலோ, பாமர மக்கள் என்பதனாலோ இவர்களுக்குத் தான் இது தெரியவில்லை என நினைத்தால் அது மிகவும் தவறு. படித்த, மிகவும் நாகரிகம் உள்ள தம்பதியர்கள் கூட இனச் சேர்க்கை பற்றியோ, உடல் உறவு பற்றியோ, குழந்தைப் பிறப்பைப் பற்றியோ சரியாக, முறையாக அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குறியது.
    குழந்தை பெற வேண்டும் என்ற ஆவலில் வரும் பெரும்பாலான தம்பதியர் டாக்டரிடம் எழுப்பும் ஐயப்பாடு, "நாங்கள் சரியான முறையில் தான் உடலுறவு கொள்கிறோமா!" என்பது தான்.

    குழந்தை பிறப்பதில் பெரும்பாலும் தடை ஏற்படக் காரணமாக இருப்பது, செக்ஸ் குறைபாடுகள் தான். அவற்றை நோய் என்று கூறுவதை விட தடுமாற்றம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமானதக்க இருக்கும்.]


    ஒரு நாள் மதிய உணவு வேளை குடும்பத்தோடு உணவருந்திக் கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்பட்டது. என் உதவியாளர் கதவைத் திறந்தவுடன் அவரைத் தள்ளிக்கொண்டு "டாக்டர் எங்கே?" என்று கேட்டுக்கொண்டு மடமடவென ஒருவர் உள்ளே நுழைந்து, டைனிங்க் டேபிளை அடைந்து விட்டார். அவர் இடுப்பில் ஓர் அழுக்கு லுங்கியும், தோளில் ஓர் அழுக்கு துண்டும், கழுத்தில் பாசி மணி மாலையும்... பார்த்தவுடனேயே நாடோடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது புரிந்தது. என்னைப் பார்த்தவுடன் உணவு பிசைந்திருந்த என் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டார்.
    குடும்பத்தில் அனைவரும் வாயடைத்துப் போனோம். நான் சற்று சமாளித்துக் கையளம்பிக்கொண்டு அந்த மனிதரை எனது கட்ஸல்டிங் அறைக்கு அழைத்து வந்தேன். அந்த மனிதர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார். அவரை சற்று அமைதியடையச் சொல்லி "யார்? என்ன விபரம்?" எனக் கேட்டேன்.
    "ஐயா! என்னை ஞாபகம் இல்லைங்களா? போன வருஷம் என் மகளையும் மருமகனையும் குழந்தை இல்லைன்னு கூட்டி வந்தாங்களே! இப்ப ரெண்டு நாளைக்கு முன்னே எனக்கு பேரன் பொறந்துட்டான். ஐயா கிட்ட சமாசாரம் சொல்லலான்னு அங்கிருந்து உடனே வந்திட்டேன்" என்றார். அவர் கூறிய ஊர் ஏறத்தாழ 200 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது.

    "அவ்வளவு தூரத்தில் இருந்து இதைச் சொல்லவா வந்தீர்கள்?" என ஆச்சரியத்தோடு கேட்டேன்.
    "ஆமா ஐயா, உங்களுக்குத்தானே மொதல்ல நன்றி சொல்லணும்" எனக் கூறி, "ஏதோ ஏழை, என்னால் மத்தவங்க மாதிரி உங்களுக்கு பணம் காசு கொடுக்க முடியாது. இதை எடுத்துக்குங்க" என ஒரு பாட்டில் தேன் கொடுத்தார். பின்னர் வேறு ஒரு பாட்டில் தேனை எடுத்து எனது உதவியாளர்களுக்குக் கொடுத்தார். நான் எத்தனையோ வற்புறுத்தியும் வழிச் செலவுக்கோ அல்லது தேனுக்கோ பணம் வாங்க மறுத்து விட்டு சென்று விட்டார்.

    நான் எனது தொழிலில் சம்பாதித்த எத்தனையோ ஆயிரக்கணக்கான பணத்தை விட அந்த ஒரு தேன் பாட்டில் எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாகட், மகிழ்ச்சி தருவதாகத் தோன்றியது.

    அந்த பாட்டிலையே பார்த்துக்கொண்டிருந்த எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஒரு வருடத்திற்கு முன் இந்த மனிதர் தேன் விற்க வந்ததையும், நான் ஒரு டாக்டர் என அறிந்து, தன் மகளுக்கு ஏழெட்டு வருடங்களாக குழந்தை இல்லை என்று கூறியத்தையும், பின்னர் ஏறத்தாழ 30 - 40 உறவினர்களோடு மகளையும், மருமகனையும் எனது மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும், நான் பரிசோதித்ததையும் அசைபோட்டது. மெதுவாக அவர்கள் வந்த நாளை, நினைவு படுத்தி அவர்களது கேஸ் சீட்டை எடுத்துப் பார்த்தேன். அவர்களது பிரச்சனையும் நான் கொடுத்த சிகிச்சையும் நினைவுக்கு வந்தது,

    திருமணம் ஆகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் - கணவனுக்கு 28 வயதும், மனைவிக்கு ஏறத்தாழ 25 வயது ஆகியும், இருவருக்கும் உடல் உறவை பற்றியும் குழந்தை பெறுவது எப்படி என்பது பற்றியும் அறியாமல் இருந்ததும், அதற்கு நான் வழங்கிய ஆலோசனைகளும்....

    படிக்காதவர்கள் என்பதனாலோ, நாடோடி இனத்தைச் சேர்ந்த பாமர மக்கள் என்பதனாலோ இவர்களுக்குத் தான் இது தெரியவில்லை என நினைத்தால் அது மிகவும் தவறு.

    படித்த, மிகவும் நாகரிகம் உள்ள தம்பதியர்கள் கூட இனச் சேர்க்கை பற்றியோ, உடல் உறவு பற்றியோ, குழந்தைப் பிறப்பைப் பற்றியோ சரியாக, முறையாக அறியாமல் இருப்பது ஆச்சரியத்திற்குறியது.
    சொல்லித்தெரிவதில்லை ''அந்த'' கலை என்று கூறப்பட்டாலும் ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி, குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

    குழந்தை பெற வேண்டும் என்ற ஆவலில் வரும் பெரும்பாலான தம்பதியர் டாக்டரிடம் எழுப்பும் ஐயப்பாடு, "நாங்கள் சரியான முறையில் தான் உடலுறவு கொள்கிறோமா!" என்பது தான்.

    குழந்தை பிறப்பதில் பெரும்பாலும் தடை ஏற்படக் காரணமாக இருப்பது, செக்ஸ் குறைபாடுகள் தான். அவற்றை நோய் என்று கூறுவதை விட தடுமாற்றம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமானதக்க இருக்கும்.
    இந்த குறைபாட்டை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    அவை:

    o  தடை செய்யப்பட்ட காம உணர்வு
    o  அதிகப்படியான பரவசம்
    வேறு விதமாகப் பிரிப்பதானால்
    o  ஆர்வக் குறைபாடு
    o  வெளிப்பாட்டில் உள்ள குறைகள்
    o  இன்ப உச்சம் எட்டுவதில் உள்ள குறைகள்
    o  உடலுறவில் ஏற்படும் வலி - வேதனை
    என்று பிரிக்கலாம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

      ஆர்வக் குறைபாடுகள் 
    காம உணர்விற்கு காரணம் உடலில் சுரக்கப்படும் ஆண்டிரோஜன் எனப்படும் ஹார்மோன்கள் தான். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த ஹார்மோன்களின் சுரப்பில் கூறைபாடு இருக்குமானால் செக்ஸ் ஆர்வமும் குறைவாகவே இருக்கும்.
    இதைத் தவிர,
    o  வயது ஏறஏற ஏற்படும் மாற்றங்கள்
    o  களைப்பு
    o  உடல் நலக் குறைவு
    o  சில மருந்து வகைகள்
    o  மனநலக் குறைவு
    போன்றவை காரணமாக இருக்கும்.

      காம வெறுப்பு 
    செக்ஸ் - செயல்களைத் தவிர்த்தல், பின் வாங்குதல், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இதில் அடங்கும்.
    பரபரப்பு, மூச்சு வாங்குதல், வெறுப்பு போன்றவை இந்தக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்றால்,
    o  உடல் குறைபாடுகள், நோய்கள்.
    o  சரியான் வடிகால் இல்லாத உணர்வு.
    o  உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணை.
    o  துன்புறுத்தும் கணவன் அல்லது மனைவி.
    o  ஆர்வமில்லாத வாழ்க்கைத் துணை.
    o  திருமணப் பிரச்சனைகள்.
    o  அடக்கி வைக்கப்பட்ட கோபம்.
    o  பழைய செக்ஸ் சம்பதப்பட்ட மனக்காயங்கள்.
    போன்றவை காரணங்களாக இருக்கின்றன.

      வெளிப்பாட்டில் உள்ள குறைபாடுகள் 
    இந்தப் பிரிவில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அடைப்படையக இருக்க வேண்டிய அளவு செக்ஸ் ஆர்வம் இருக்கும். ஆனால், அதனை கணவனிடமோ மனைவியிடமோ வெளிப்படுத்துவதில் தயக்கம், கூச்சம், பயம் போன்றவை இருக்கும். இந்தப் பிரிவில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கி அடக்கி வைத்து வாழ்பவர்கள்.
    சமூகத்தில், பெண்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்கள் அவசியம் என வற்புறுத்தப்பட்டு வருவதும், அதன் காரணமாக ஒரு பெண் தன் உணர்வுகளை சொந்தக் கணவனிடம் வெளிப்படுத்தினாலும், "அவள் தவறான நடத்தை உள்ள பெண் என்று கருதப்பட்டு விடுவாளோ" என்ற பயமுமே, இப்படி உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணம்.

      உச்சம் எட்டுவதில் உள்ள பிரச்சனைகள் 

      ஆண்மைக் குறைபாடு : 

    ஓர் ஆணுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் அவனது உடல் தசைகள் முறுக்கேறுவதோடு அவனது ஆண்குறி விரைத்து, கெட்டியாக இருப்பதில் குறைபாடு இருக்கும்னால் அதையே ஆண்மைக் குறைவு என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக ஏறத்தாழ 60 வயதிற்கு மேல் புராஸ்டேரில் பிரச்சனைகளோ மற்ற நோய்களோ தாகும் வரை ஆண்களுக்கு இப்பிரச்சனை ஏற்படுவது இல்லை.
    அப்படி ஏற்படுமானால், அது அடிப்படையாகவே உள்ள பிரச்சனையா? (அதாவது  எப்பொழுதுமே இப்படி விரைத்து, நீண்டு, கெட்ட்படவில்லயா?) அல்லது மன பிரச்சனைய? என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும்.

      இன்ப உச்சம் எட்டுவதில் உள்ள குறைபாடுகள் : 
    மனித உடலில் தலை முதல் கால்வரை ஓரிரு நொடிகள் ஏற்படும் இன்பமயமான துடிப்பு அல்லது உணர்வு, உடலுறவின் உச்சக்கட்டம் இந்த இன்ப உச்சமே. இதற்கு உடலும் மனமும் சரியாக இருக்க வேண்டும். அப்படி ஒன்றோ அல்லது இரண்டுமோ சரியில்லாத நிலையில் இந்த சுகம் அனுபவிக்க முடிவதில்லை.
    இந்த இன்ப உணர்வு கிடைக்கவில்லை என்று கவலைப்படும் பெர்ம்பாலானோருக்கும், செக்ஸ் பற்றிய அறிவு இல்லததே காரணமாக இருக்கிறது. கூச்சம், கவலை, பரபரப்பு, துக்கம், குழப்பம் போன்றவை முதல் குறைபாடுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றால், இவற்றோடு ஆண்குறி விரைப்பதில் உள்ள குறைபாடுகளும் மன அழுத்தம், வயது, மனவேகம் இவையும் அடுத்த குறைபாட்டீற்கு காரணமாகிறது.

      உடலுறவில் வலி - வேதனை 
    பலவித நோய்கள் - உதாரணமாக புண்கள், கட்டிகள் மற்றும் வேறு சில காரணங்களாலும் உடலுறவ்ல் வலியும் வேதனையும் ஏற்படுகின்றன. இப்படி ஏற்படும் வலி பல சமயங்களில் உடலுறவையே வெறுக்க வைக்கிறது. சில தம்பதியருக்கு உடலுறவு இல்லாமல் இருப்பதே சுகம் என நினைக்க வைக்கிறது.
    உடலுறவைப் பற்றிய தவறான கருத்துகளும், இது ஒரு பாபகரமான கெட்ட விஷயம் என்ற குற்ற மனப்பான்மையும் கூட இப்படி வலியும் வெறுப்பும் ஏற்படக் காரணமாகிறது.

      குறைபாடுகளைக் களையும் வழி 
    இந்த செக்ஸ் குறைபாடுகளைக் களைவது மிகவும் சிக்கலான ஒன்று. முதலில் இந்தக் குறைபாடுகளை கண்டுபிடிப்பதே மிகவும் கஷ்டம். காரணம், இது ஒவ்வொரு தனி மனிதனுடைய அல்லது தம்பதியருடைய அந்தரங்கம் பற்றியது. அது மட்டுமல்லாமல் இது உடல் - மனம் - உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். மேலும், சமூகம், மதம் போன்ற பல்வேறு அம்சங்களும் சேர்ந்து ஏற்கனவே சிக்கலான விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

    அதனால் இதனைச் சரிசெய்ய உடல் சிகிச்சை, உடற்பயிற்சி, மனப் பயிற்சி, மன சிகிச்சை என்ற தேவையை அனுசரித்து சிகிச்சை பெறலாம். இதற்கு மலட்டுத் தன்மை நீக்கும் நிலையங்களும், உடல்நோய் மனநோய் வல்லுநர்களும், மனவியல் நிபுணர்களும் உதவுவார்கள்.
    ஏற்கனவே கூறியதுபோல தம்பதியர் தங்கள் கொள்ளும் உறவு சரியான முறையில் உள்ளது தானா? என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறார்கள். வேறு சிலர் எது சரியான முறை எது தவறான முறை எனக் கேட்கிறார்கள். இதுதான் சரியான முறை என்றோ இப்படித்தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறுவதோ சரியானதாக இருக்காது. அதே சமயம் கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை கீழே தருகிறோம்.



      கணவனும் மனைவியும்  உடலுறவு கொள்ளும்போது  கவனத்தில் கொள்ள வேண்டிய  சில விஷயங்கள் 
    o  ஐம்புலன்களும், மனமும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
    o  அடுத்த மாத விலக்கிற்கு ஏறக்குறைய 14 ஆம் நாள் முதல் எவ்வளவு முறை முடியுமோ அவ்வளவு முறை உடல் உறவு  கொள்ள வேண்டும்.
    o  உடல் உறவிற்கு முன் இருவரும் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும்.
    o  அருவருப்போ வெறுப்போ இன்றி உடல் உறவு கொள்ள வேண்டும்.
    o  ஒருவர் மனதை, உணர்வை மற்றவர் புரிந்து செயல்பட வேண்டும்.
    o  ஒருவர் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களான பவுடர், சென்ட் போன்றவை மற்றவருக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்.
    o  உணர்வுகளைத் தூண்டும் விஷயங்களை பெல்லப் பேசுவதும் கேட்பதும் மிகுந்த பயனுள்ள செயல்களாகும்.
    இந்த முறைகளைக் கடைப்பிடிப்பது உடல் உறவில் இன்பத்தை அடைய மட்டுமல்லாமல், குழந்தையை அடையவும் இயற்கையான ஓர் எளிய வழியாகும்

    பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

    By: ram On: 08:16
  • Share The Gag
  • எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உளுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே

    தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

    "முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம்.

    தங்களுக்குள்ள போட்டி
    பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

    ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

    போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம்.

    முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

    உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக

    யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

    என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

    "ஐயோ வடபோச்சே...."

    பேச வந்த கார்த்தியை பிடித்துக் கொண்ட கே.வி.ஆனந்த்!

    By: ram On: 08:04
  • Share The Gag
  • நடிகர் கார்த்தியின் கிராஃப் ஏறுமுகமும் இறங்குமுகமுமாக அல்லாடிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தை சேர்ந்த பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் அதிர்ஷ்டம் ஆள் வைத்து அழைத்திருக்கிறது கார்த்தியை. எப்படி?

    வெற்றிப்பட இயக்குனரான கேவி.ஆனந்த் (இதில் மாற்றான் மட்டும் ஹி..ஹி..) இயக்கி வரும் படம் அநேகன். தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் கே.வி.ஆனந்த். டப்பிங் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த நேரத்தில்தான் கேரக்டர் அறிமுகம் செய்ய ஒரு அழகான கம்பீரமான குரல் தேவைப்பட்டிருக்கிறது அவருக்கு. அதுவும் அவர் ஒரு ஹீரோவாக இருந்தால் இன்னும் சிறப்பு என்று நினைத்தாராம். பளிச்சென்று அவர் நினைவுக்கு வந்தவர் கார்த்தி.

    தனது தேவையை கார்த்தியிடம் சொல்ல எவ்வித ஈகோவும் இல்லாமல் ஓடி வந்தாராம் கார்த்தி. வந்தவரிடம்தான் தனது அடுத்த படத்தின் கதையை கேஷுவலாக கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆஹா ஓஹோ… அற்புதம் என்று மெய்சிலிர்த்த கார்த்தி, இந்த படத்தின் நானே நடிக்கிறேனே என்றாராம் கே.வி.ஆனந்திடம்.

    அந்த இடத்திலேயே தன் அடுத்தப்பட ஹீரோ கார்த்திதான் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம் ஆனந்த்.

    ஆனந்தமே உண்டாகட்டும்!