Saturday, 20 September 2014

மீண்டும் கத்தியை பின்னுக்கு தள்ளிய ஐ!

By: ram On: 22:14
  • Share The Gag
  • இந்த தீபாவளி கத்தி, ஐ என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரவிருக்கிறது. இப்படங்களின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    ஐ படத்தின் பாடல்கள் தான் ஐ-டியூனில் முதல் இடத்தில் இருக்க, கத்தி பாடல்கள் இதை பின்னுக்கு தள்ளியது.

    தற்போது மீண்டும் ஐ பாடல்கள், கத்தியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

    பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

    By: ram On: 21:46
  • Share The Gag
  • குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ்,
    கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு
    தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து
    உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும்
    சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும்
    அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக
    சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த
    பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

    அவசர உணவுகள் இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம்
    என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ்.
    இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது
    உண்மைதான்.

    புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை
    ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம்.
    இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு
    விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு,
    சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில்
    கண்டறியப்பட்டுள்ளது.

    ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட்
    சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில்
    கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது
    மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக்
    கூறி விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த
    போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு
    வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இ
    ருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை
    குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி
    சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற
    வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

    எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க
    முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை
    கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

    இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு
    இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது.
    இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு
    ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது
    என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
    ஆய்வகத்தினர்.

    குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில்
    பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே
    இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு,
    கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு
    இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
    நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு
    தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய
    தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின்
    அறிவுரையாகும். 

    ரஜினியை சீண்டி பார்த்த டி.ஆர்!

    By: ram On: 21:14
  • Share The Gag
  • டி.ஆர் எங்கு சென்றாலும் குறைந்தது 1 மணி நேரமாவது பேசிவிட்டு தான் வருவார். அதுபோல் சமீபத்தில் நடந்த கல் கண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார்.

    அங்கு அவர் பேசிய போது மேடையில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் நெலிய ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் அவர் பேசிய டாபிக் அப்படி.

    இதில் ‘ தமிழிசை சவுந்தர்ராஜன் ரஜினியை கட்சியில் சேர அழைச்சிருக்காங்க. ஆனால் ரஜினி யோசித்து பதில் சொல்வதா சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் பதிலே சொல்லல. ஏன் தெரியுமா? அவர் ஜெயலலிதா மீது பெங்களூர்ல நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கார். அதை வச்சுதான் அவர் முடிவு சொல்லுவார்’ என்று கூறி தேவையில்லாமல் ரஜினியை சீண்டியுள்ளார்.

    தேவகானம் சிறந்ததா? மனித கானம் சிறந்ததா?

    By: ram On: 20:41
  • Share The Gag
  • இசைக் கலையை ஊக்குவித்து வளர்க்கும்
    சோழ மன்னன் ராஜேந்திர சோழன், ஒரு முறை
    தனது அவையில் விநோதமான போட்டி
    ஒன்றை வைத்தார். அந்தப் போட்டி தேவ கானம்
    சிறந்ததா, மனித கானம் சிறந்ததா என்பதே.

    இசையில் வல்ல இரு பெண்கள் போட்டியிட்டனர்.
    தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண் தேவ கானம்
    இசைத்தாள். மற்றொரு பெண் மனித கானம்
    இசைத்தாள். இதில் தேவகானம் தெரியாத
    அமைச்சர்கள் மனித கானம் செய்த பெண்ணே
    வென்றதாகக் கூற அவையினர் கரகோஷம்
    எழுப்பினர்.

    உன்னதமாகப் பாடியும் அவையினருக்கு தேவகானம்
    புரியாததால் தான் தோற்றோம் என்பதை உணர்ந்த
    தேவதாசி தான் சார்ந்த திருக்கோவிலில் மனம்
    உருகிப் பாடினாள். அவளது கானத்தைச் செவிமடுத்த,
    வைணவ ஆசாரியரான நாதமுனிகள் அவளது
    இசையைப் பலவாறு புகழ்ந்தார். இதைக் கேள்விப்
    பட்ட மன்னன், ஆசாரியரை அழைத்து வரச் செய்தார்.
    பின்னர் அவரிடம் தேவ கானத்தை அறிந்தவர்
    என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் மன்னர்.

    நாதமுனிகள் பல்வேறு எடையும் வகையும் கொண்ட
    100 வாத்தியக் கருவிகளைக் கொண்டு வரச்
    சொன்னார். அவற்றை அரசவையில் வைத்து
    ஒவ்வொன்றாக வாசிக்கப் பணித்தார். அவர்கள்
    வாசிக்கும் ஒலியைக் கேட்டு, அந்த வாத்தியத்தின்
    எடையைக் கூற அவை துல்லியமாக இருந்தன.

    மன்னன் அதிசயித்துப் பல பரிசுகளை வழங்க,
    பெருமாள் தொண்டரான அவர், பெருமாளுக்குத்
    தொண்டு செய்வதே பெரிதெனக் கூறிப் பரிசுகளை
    மறுத்தார்.

    நம்மாழ்வார் பிரபந்தங்களோடு ஆழ்வார்களின்
    பாசுரங்களும் பெருமாள் திருக்கோவில்களில்
    பாடப்பட வேண்டும் என்று நாதமுனிகள் விரும்பினார்.
    பெருமாள் திருக்கோவில்களில் பாடப்படும் பகல்
    பத்து விழா மற்றும் இயற்பா சாற்றுமுறை என்ற
    ஒரு நாள் விழா ஆகியவற்றை உண்டாக்கினார்.
    இன்றளவும் அது பின்பற்றப்பட்டுவருகிறது.

    ஒரு நாள் வேட்டையில் இருந்து திரும்பிய சோழ
    மன்னன் நாதமுனிகளைக் காண வந்தபோது,
    அவர் யோகத்தில் இருந்தார். அதனால் அவருடன்
    உரையாட முடியாத மன்னர் நாடு திரும்பிவிட்டார்.
    இவருக்கு யோகம் கலைந்த பின், அங்குள்ள மக்கள்
    அவர் யோகத்தில் இருந்தபோது குரங்கொன்றும்,
    இரண்டு வில்லாளிகளும், ஒரு பெண்ணும்
    வந்திருந்தனர் என்று தெரிவித்தனர். திருக்கோவிலுக்கு
    வந்திருந்தவர்கள் அநுமனும், ராமனும், லட்சுமணனும்,
    சீதையும் என எண்ணிய நாதமுனிகள், அவர்களைத்
    தேடி சோழபுரம் வரை சென்றார்.

    அவரது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும்
    தெரியவில்லை. ஆனால் அநுமன், ராம, லஷ்மண,
    சீதா ஆகிய நால்வரும் அவரது பார்வைக்குத்
    தோன்றித் தோன்றி மறைந்தார்கள். அப்படியே
    மூர்ச்சித்து விழுந்த அவர், வைகுந்த பிராப்தி
    அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
    அப்போது அவருக்கு வயது 94.

    நாதமுனிகள் `நியாய தத்துவம்`, `யோக ரகசியம்`
    ஆகிய நூல்களை எழுதினார்.

    காளம் வலம்புரி அன்ன, நற்காதல் அடியவர்க்கு
    தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்தவள்ளல்
    மூளும் தவநெறி மூட்டிய நாத முனிகழலே
    நாளும் தொழுதெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே.

    என்று வேதாந்த தேசிகர் நாதமுனிகளைப்
    போற்றுகின்றார்.

    நாதமுனிகள், வைணவத்தை பூவுலகில் பரப்ப
    வந்த முதல் ஆசார்யர்.

    அரண்மனை பிரம்மாண்ட ஓப்பனிங்! வசூல் விவரம்

    By: ram On: 20:02
  • Share The Gag
  • நகைச்சுவை கலந்த திகிலுடன் வெளிவந்துள்ள படம் தான் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம், வினய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

    இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ 2.60 கோடி வசூல் செய்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மேலும் நாளை வரை விடுமுறை இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன

    By: ram On: 19:17
  • Share The Gag
  • ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது …!!

    அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கள் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது …!!

    இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு…!!

    வெற்றியின் போது கை தட்டும்
    பல கைகளை விட –

    தோல்வியின்போது கண்ணீரை
    துடைக்கும் ஒரு விரலே
    சிறந்தது

             – அதுதான்
    ” நட்பு ” .

    ஐ பட விழாவில் பாதியிலேயே அர்னால்ட் சென்றது ஏன்? விளக்கம் தரும் படக்குழு

    By: ram On: 17:37
  • Share The Gag
  • ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், நிகழ்ச்சி முடிவதற்குள் பாதியிலேயே கிளம்பினார்.

    ஏன்? இவர் இப்படி செய்தார் என்று யாருக்கு தெரியாமல் இருக்கு, தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதில் பாடி பில்டர்கள் எண்ணை கையில் அவரை தொட, அணிந்திருந்த கோட் அழுக்காகியுள்ளது. இதனால் கோபமடைந்து வெளியேறி விட்டதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    'ஜிகர்தண்டா' 50-வது நாள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனை

    By: ram On: 08:11
  • Share The Gag

  • 'ஜிகர்தண்டா' படத்தின் 50-வது நாளுக்கு ஒரு பேப்பர் விளம்பரம்கூட இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    சித்தார்த், சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'ஜிகர்தண்டா', கதிரேசன் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

    'ஜிகர்தண்டா' மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிம்ஹா நடிப்பிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 'ஜிகர்தண்டா' வெளியாகி 50 நாள் ஆகிறது. இதற்கு ஒரு பேப்பர் விளம்பரம் கூட இல்லை என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    "50 போட்டதுக்கு ஊர் முழுவதும் ப்ளக்ஸ் ஏற்றியிருந்திருக்கலாம். ஒரு பேப்பர் விளம்பரம், போஸ்டராவது ஒட்டிருக்கலாம். 'ஜிகர்தண்டா' 50-வது நாளை கடந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

    சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை

    By: ram On: 07:56
  • Share The Gag
  • வழக்கமாக சிகரெட் புகைப்பவராக இருப்பினும் சாப்பிடவுடன் சிகரட் பிடித்தால் சாதாரண நேரங்களில் புகைப்பதை விட மிகப் பெரிய கெடுதல் ஏற்படும்.


    சாப்பாட்டின் இறுதியில் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) உருவாகும். எனவே சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன் அல்லது பின் பழங்கள் சாப்பிடும் பழக்கமே உகந்தது.


    சாப்பிட்டவுடன் தேநீர் அருந்துதல் கெடுதியானது. ஏனெனில் தேயிலைத் தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவிலுள்ள புரதச்சத்தினைக் கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


    சாப்பிட்ட உடன் சிலருக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. குளிக்கும் போது, கை, கால், உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரைப்பைக்கு செரிமானத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் குறையும் நிலை ஏற்படும்.


    மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக்கூடாது. உணவுக்குப்பின் குறைந்தது அரைமணி நேரமாவது கழிந்த பிறகே உறங்கச் செல்லவேண்டும்.

    ’எதிர்நீச்சல்’ சதீஸை திருமணம் செய்துகொள்ள போகிறார் சமந்தா?

    By: ram On: 07:45
  • Share The Gag
  • சமந்தாவின் திரையுலக கிராஃப் நாளுக்கு நாள் மேலே சென்று கொண்டே போகிறது. விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இந்நிலையில் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

    இப்படத்தில் நடித்த சதீஸ் அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுக்கு யார் போல் பெண் வேண்டும் என்று கேட்டதற்கு அவர் சமந்தா போல் இருந்தால் ஓகே என்று கூறினார்.

    இதை தொடர்ந்து சமந்தா பேசுகையில் ‘சதீஸ் கவலைப்படாதே, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று விளையாட்டாக கூற அரங்கத்தில் கரகோஷம் அடங்க சில மணி நேரம் ஆனது.

    ஆண்மை அதிகரிக்கும் சிரசாசனம்

    By: ram On: 07:28
  • Share The Gag
  • ஆண்மை அதிகரிக்கும் ஆசனங்கள்

    சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நின்று செய்யப்படும் ஆசனமாகும். சிரசு என்றால் தலை என்று பொருள்.

    செய்முறை

    விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.
    கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.
    உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.
    தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.

    இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும் 100 எண்ணிக்கை இருந்தால் போதும்.
    சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடி 100 எண்ணிக்கை செய்யவும்.

    மூன்று மாத பயிற்சிக்கு பிறகு சுவரை விட்டு விலகி அல்லது தனியாக செய்யலாம்.
    100 எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.
    பிறகு சவாசனத்தில் படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.

    எச்சரிக்கைகள்

    இந்த யோகாவிற்கு நீங்கள் புதிது என்றால் முதலில் சுவரின் துணையுடன் பயிற்சி செய்யவும். மேலும் தகுதி பெற்ற ஆசான் ஒருவரிடம் இந்த ஆசனத்தை கற்றுத்தேர்வதும் நல்லது.
    அடிவயிறு மற்றும் முதுகெலும்பு வலி இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.