Wednesday, 8 January 2014

விஞ்ஞானிகளாக பிரத்யேக படிப்பு - திறன்மிக்கவரின் வாழ்வில் பூரிப்பு ...!!!

By: ram On: 14:34
  • Share The Gag



  •  விஞ்ஞானியாகும் லட்சியம் கொண்டவர்களுக்கான பிரத்யேக படிப்பாக பி.எஸ்-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்பு உள்ளது. டூயல் டிகிரி புரோகிராமான இப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.எஸ்.இ.ஆர். (இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்) கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. போபால், கொல்கத்தா, மஹாலி, பூனே, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து பெரு நகரங்களில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். இயங்கி வருகிறது.

    இக் கல்வி நிறுவனத்தில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. அதி புத்திசாலித்தனம், படிப்பில் திறமை மிக்கவர்களை பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சோதித்து, சேர்த்துக் கொள்கின்றனர். பெரிய ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும் கூடிய வாய்ப்பு கொண்ட படிப்பாக இது உள்ளது. அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளிலும், இவர்களுக்கு அமோக வரவேற்பு காத்திருக்கிறது. கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், நுணுக்கமான படிப்பு முறையை கற்பிக்கின்றனர்.

    ஐந்தாண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள் பொறியியல் சார்ந்த அறிவியல் பாடத்தின் அடிப்படை விஷயங்களை ஆழமாக கற்பிக்கின்றனர். அடுத்த மூன்று, நான்காம் ஆண்டுகளில் அறிவியல் பாடத் திட்டத்தில் விரும்புகின்ற பிரிவை ஒவ்வொருவரும் தேர்வு செய்து படிக்க வேண்டும். இறுதி ஆண்டு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை முழு அளவில் கற்பிக்கின்றனர்.

    பேராசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் விஞ்ஞானியாகவும் ஆராய்ச்சியாளராகவும் அனைத்துவிதமான அறிவியல் துறை சார்ந்த தொழில்களில், இவர்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்யும் படிப்பாக அமைந்துள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பில் சேர துடிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகுதி. இப்படிப்பை பொருத்தவரை இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவியரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. கே.வி.பி.ஒய், ஜே.இ.இ. இன்ஸ்பியர் காலர்ஷிப் எக்ஸாம், ஆட்டிடியூட் தேர்வுகளில் வெளியிடும் தர வரிசை பட்டியலில்

    முதலிடம் பிடிப்பவர்களுக்கு வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது. 5 கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் மொத்தம் 750 இடங்கள் உள்ளன. பி.எஸ்.எம்.எஸ். சேர விரும்புபவர்கள் இதற்கான தனி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எந்தெந்த நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தால், இப் படிப்பில் சேர முடியும் என தெரிந்து கொள்ள வேண்டும். கே.வி.பி.ஒய் (கிஷோர் வைகியானிக் புரட்சான் யோஜ்னா) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து 25 சதவீதத்தினரும், ஜே.இ.இ. (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்) நுழைவுத் தேர்வின் தரவரிசை பட்டியலில் 50 சதவீதத்தினரும், மத்திய, மாநில பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மற்றும் இன்ஸ்பியர் காலர்ஷிப் தேர்விலும், ஆட்டிடியூட் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் 25 சதவீதத்தினர் என 100 சதவீத இடம் பூர்த்தி செய்யப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம்தோறும் 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகை என ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும் ஆராய்ச்சி செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். http://www.iser.admission.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மேலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.

    அமெரிக்கன் சொன்னான்..

    By: ram On: 13:37
  • Share The Gag



  • அமெரிக்கன் சொன்னான்..
    எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

    ரஷ்யன் சொன்னான்..

    எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

    இந்தியன் சொன்னான்..

    பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

    கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்...!

    By: ram On: 13:09
  • Share The Gag




  • கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

    ‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.

    இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் த்டையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

    புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி!

    By: ram On: 12:11
  • Share The Gag



  • மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம்.

    உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே காரணம் என கண்டறியப்பட்டது.

    இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள கார்னெல் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தனர்.இவர்களின் பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

    புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

    இதன் மூலம் புற்றுக் கிருமிகள் வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. 2 மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

    தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?

    By: ram On: 11:36
  • Share The Gag





  • நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


    இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


    பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


    சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


    இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


    இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

    ‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!

    By: ram On: 10:57
  • Share The Gag




  • சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.

    அத்திட்டத்தின்படி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் பிறந்த 51 குழந்தைகள் மற்றும் அதன் தாய் ஆகியோரை வாகனங்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு விடும் ‘இலவச தாய்-சேய் வாகனம்‘ திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

    அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கனகசபை, கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை டாக்டர் விஜயா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.மேலும் தேசிய ஊரக நல வாழ்வு இயக்கத்தின் மூலமாக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்ற ‘அவசர பேறுகால சிகிச்சைக்கான பயிற்சி‘ திட்டமும் கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி, எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு, அவசர பேறுகால சிகிச்சை குறித்து 24 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியின்போது, ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் டாக்டர்கள்தான் பிரசவம் பார்க்கிறார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

    லைஃப் இன்ஷூரன்ஸ்: சிறந்த பாலிசி எது..?

    By: ram On: 01:17
  • Share The Gag


  • இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள்.

    காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

    இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.

    மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால திட்டம். இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட திட்டம்

     நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.

    பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும்,  மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.

    அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.

    நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்ஷூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது.

    அதற்கான பதில் இது தான்.

    ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

    இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.

    சிலர் 10 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது.

    மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.

    உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும்.

    முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.

    பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.

    அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.

    பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா..?
    டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தான்.

    உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.