Saturday, 9 August 2014

அப்படி இருந்தா இப்படித்தான் இருக்கும்...!

By: ram On: 23:32
  • Share The Gag

  • ஹாலிவுட் சினிமா மாதிரி தமிழ் சினிமாவிலும் பாடல்களே இல்லைனா எப்படி இருக்கும்? இதோ பாடல்கள் இல்லாத தமிழ் சினிமா.

     தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா படங்கள் எல்லாம் 10 நிமிடங்களுக்குள் முடிந்திருக்கும். தமிழின் முதல் குறும்படம் 70 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கும்.

     எம்.ஜி.ஆர் கையை மேலே தூக்கி, கீழே இறக்கும் காட்சியை நாம் பார்த்தே இருக்க மாட்டோம்.

     பாக்யராஜின் டிரில்லைப் பார்க்க வாய்ப்பில்லாத துரதிர்ஷ்டசாலிகள் ஆகியிருப்போம்.

     பல ஹீரோக்கள், ஹீரோயின்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர் செலவில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.

     படத்தின் பட்ஜெட் பாதியாகக் குறைந்து, தயாரிப்பாளர் நிம்மதியாக இருந்திருப்பார்.

     படத்தின் தொடக்கத்தில் ஏழையாக இருக்கும் ஹீரோ படம்
    முடியும்போதும் ஏழையாகவே இருந்திருப்பார்.

     யமஹா சூயா, லாலாக்கு டோல் டப்பிம்மா, முக்காலா முக்காபுலா போன்ற அரிய வார்த்தைகள் தமிழுக்குக் கிடைத்திருக்காது. செம்மொழி அந்தஸ்தும் தள்ளிப்போயிருக்கலாம்.

     அடிக்கடி தம் அடிப்பதற்காக ஆண்கள் படத்தின் இடையே வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர்களுடைய உடல் நலம் நன்றாக இருந்திருக்கும்.

     எப்.எம் என்றாலே செய்திதான் என்ற நினைப்பு நமக்கு வந்து நிறைய அலைவரிசைகள் தங்களுடைய அட்ரஸைத் தேடிக்கொண்டிருக்கும்.

     குடும்பப் பாட்டு என்ற ஒன்று இல்லாததால் பிரிந்த பல குடும்பங்கள் சேராமலே இருந்திருக்கும்.

     கே.எஸ்.ரவிக்குமார், ஜி.வி.பிரகாஷ், அனிருத் போன்றவர்கள் எல்லாம் பாட்டுக்கு இடையில் வந்து டான்ஸ் ஆடி நம்மை டயர்ட் ஆக்கியிருக்க மாட்டார்கள்.

    நாக பாம்பு ஆசனம் - முயற்சித்துப் பாருங்கள்..!

    By: ram On: 23:16
  • Share The Gag

  • செய்முறை :

    விரிப்பில் உடல் முழுவதும் தரையில் படும்படி குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கைகளை தளர்த்தி உடல் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்த்திருக்க வேண்டும். நெற்றி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

    கைகளை தூக்கி தோல்களின் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங் கைகள் மடங்கி உடலின் பக்கவாட்டில் தொட்டுக் கொண்டிருக்கும். மூச்சை உள்ளிழுக்கவும். தலை, தோள்களை தரையிலிருந்து தூக்கவும். இடுப்புப் பகுதி தரையை தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    மூச்சை வெளியே விடவும். உள்ளங் கைகளை தரையில் ஊன்றி முன் உடலை எவ்வளவு தரையிலிருந்து மேலே தூக்க முடியுமோ அவ்வளவு தூக்கலாம். தலையை நிமிர்த்தி நேராக பார்க்கவும்.

    தோள்களையும், தலையையும் பின்னால் சாய்த்துக் கொள்ளவும். தலையை சாய்த்து மேல் கூரையை பார்க்க வேண்டும். இந்த நிலையில் நார்மலாக சுவாசிக்கவும். உடலை தரைக்கு கொண்டு வரவும். கைகளை தளர்த்தி பழைய படி கூப்புற படுத்துக் கொள்ளவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5முறை செய்ய வேண்டும்.

    பயன்கள் :

    1. முதுகெலும்புக்கு நல்லது

    2. முதுகெலும்பின் டிஸ்க் நழுவலுக்கு இந்த ஆசனம் நல்லது.

    மரணப்புயல்’ ரசிக்கும் புயல் - திரைவிமர்சனம்..!

    By: ram On: 22:49
  • Share The Gag

  • அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மனைவியை இழந்த நாயகன் ரிச்சர்ட், தனது 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இவர் பணிபுரியும் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவை வீடியோ எடுப்பதற்காக தன் மூத்த மகன் மேக்ஸ் டெக்கான் மற்றும் இளைய மகன் நாதன் கிரெசை அழைத்துச் செல்கிறார்.

    அங்கு மேக்ஸ் காதலிக்கும் அலிசியாவை காண்கிறார். சோகத்தில் இருக்கும் அவரை கண்டதும் நாதன் தன் அண்ணன் மேக்சிடம் அவளுக்கு ஆறுதல் கூறுபடி சொல்கிறான். இதற்கு மேக்ஸ் அலிசியாவிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு அலிசியா தான் ஒரு வீடியோ புராஜக்ட் செய்ததாகவும் அது தற்போது அழிந்து விட்டதாகவும் கூறுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறுகிறார்.

    இதைக்கேட்ட மேக்ஸ் அலிசியாவிடம் கவலைப்படாதே, என்னுடைய கேமராவில் நான் பதிவு செய்து தருகிறேன் என்று கூறுகிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடையும் அலிசியா மேக்சை உடனே செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதனால் தனது தம்பியான நாதனிடம் பட்டமளிப்பு விழாவை வீடியோ எடுக்கும் படி சொல்லிவிட்டு அலிசியாவுடன் பாழடைந்த தொழிற்சாலை ஒன்றை படம் எடுக்க செல்கிறார் மேக்ஸ்.

    அப்போது டெக்சாஸ் நகரில் சூறாவளி காற்று தாக்கப்போவதாக தகவல் வருகிறது. சூறாவளியை படம்பிடிக்க அதிநவீன வாகனத்துடன் சாரா வேய்னே தனது குழுவுடன் வருகிறார். முதலில் சிறியதாக ஆரம்பிக்கும் சூறாவளி காற்று பின்னர் மேலும் வலுவடைந்து 300 கி.மீ வேகத்தில் பூமிக்கும் வானத்தும் இடையே சுழன்று வந்து டெக்சாஸ் நகரை தாக்கி முற்றிலும் அழித்து விடுகிறது. பட்டமளிப்பு விழா நடைபெறும் கல்லூரியில் உள்ள அனைவரும் ரிச்சர்ட்டின் அறிவுரைப்படி தப்பிக்கிறார்கள். ஆனால் மேக்ஸ் இல்லாததை கண்டு அவரை தேட ஆரம்பிக்கிறார் ரிச்சர்ட். அப்பொழுது மேக்ஸ் மற்றும் அலிசியா இருவரும் தொழிற்சாலையில் சிக்கியிருப்பதாகவும் உயிருக்கு போராடி வருதாகவும் தகவலை அறிகிறார்.

    இவர்களை காப்பாற்ற ரிச்சர்ட் முயற்சி செய்கிறார். ஆனால் சூறாவளி காற்றால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இறுதியில் ரிச்சர்ட் அங்கு சென்று மேக்ஸ் மற்றும் அலிசியாவை உயிருடன் மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    மனிதர்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி என்னன்வோ செய்கிறார்கள். ஆனால் இயற்கை மனிதனின் வாழ்க்கையை ஒரு சில மணி நேரத்திலேயே தவுடுபொடியாக்கி விடுகிறது என்பதை ஒரு நாளில் நடக்கக்கூடிய கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்டீவன் குவேல். சூறாவளி காற்றை நம்மால் பார்க்க முடியாத நிலையில் இப்படம் நம்மை முழுமையாக திருப்திபடுத்தும் படமாக இருக்கும்.

    ஒரே நேரத்தில் பல சூறாவளி தொகுப்பு சுற்றி வளைத்து தாக்குவது, தரையில் இருந்து கண்டெய்னர்கள், கார்கள், விமானங்கள் எல்லாம் சூறாவளி காற்றுக்குள் சிக்கி விண்ணை நோக்கி பறப்பது போன்ற காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    கடவுள் மேல் மனிதனுக்கு சந்தேகம் ஏன்..? மனிதனுக்கு பெண் மேல் அதிக மோகம் ஏன்..?

    By: ram On: 21:31
  • Share The Gag

  • கலியன் தானம் மாறி தலைகீழாக பூமி வெடித்து தோன்றியவன்(குரோணியின் 6 துண்டம்)முன் யுகங்களில் தன்னை அழித்தார் என்பதற்காகவே விஷ்ணுவையும் அவர் கிளைகளான நம்மையும் அழிக்க வேண்டும் என்றே அவன் விஷ்ணு போலவே உயரம் கொண்டு பிறந்தவன் அவனை ஈசனிடம் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

     உடனே தேவர்கள் கலியனிடம்”கலியனே இவர்தான் ஈசர் இவ்வுலகையும் படைத்தவர் எங்கும் நிறைந்தவர் இவரிடம் உனக்கு வேண்டிய வரங்களை வாங்கிக்கொள்”என்று தேவர்கள் சொல்ல இதைக்கேட்ட கலியன் ஏளனமாக சிரித்து விட்டு “இவனா கடவுள் இவனா கேட்டதை தருவான் மேனி எங்கும் குப்பையை பூசி இருக்கிறான் பண்டாரம் போல் இருக்கும் இவனா கடவுள்”என்றான்.

    இதை கேட்ட தேவர்கள் கலியனிடம் “அப்படி பேசாதே இவர்தான் அனைத்தையும் அடக்கி ஆள்பவர்,எட்டாதப்பொருள்,தோணாதப்பொருள்” என்று விளக்க இதைக்கேட்ட கலியன் “அப்படியானால் எனக்கு துணையாக ஒரு பெண்ணை படைத்து கொடுக்க சொல்லுங்கள் பார்போம் அதுமட்டுமல்ல அவள் அழகில் பேரளகியாகவும் அவள் கண் விழி அனைவரையும் மயக்கும் தன்தையாகவும் கொங்கைகள் சரியாமலும்,அவள் மேல் எப்பொழதும் கமகம என வாசனையடனும் உடனே படைத்து தாருங்கள்“ என்று கேட்க என்று கலியன் சொல்ல அவன் விளா எலும்பில் இருந்தே ஒரு பெண்ணை உடனே படைத்துக்கொடுக்கிறார்.

    பெண்ணை கண்டவன் தன்னை மறந்தான் வாரி எடுக்கலாமா என நினைக்குறான் முத்தமிடலாமா என நெருங்க உறவு கொள்ளவும் தயாராகிறான் தேவர்கள் அவனை தடுக்கிறார்கள்.உடனே கலியன் ஈசனிடம்”ஈசனே இந்ந பெண்மேல் உள்ள ஆசை என் கடைசி மூச்சி இருக்கும் வரை சிறிதும் குறையக்கூடாது” என கேட்டான்(அதனால்தான் இன்றும் கலி எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பெண்ணாசை தலைக்கேறி நிற்கிறது’.

    அதுப்போல் முதலில் கலியன் இறைவன் இவனா என்று சந்தேகப்படுவதனாலேயே இன்றும் கலி எண்ணம் புகுந்த மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் கடவுள் இருக்கிறானா?இருக்கிறானா?என்று சோதிக்கிறார்கள்.அய்யா உண்டு

    பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்..!

    By: ram On: 20:26
  • Share The Gag

  • இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்

    ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்

    ” பள்ளிக்கூடம் போனயா ?”
    ” போனேன் “
    ” சாப்பிட்டாயா ?”
    “ம்… சாப்பிட்டேன் “
    “என்ன சாப்பிட்ட கண்ணா ?”
    சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

    தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி,
    ” டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு “
    சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை . கேட்டால் அடிவிழும்.மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை . ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் .
    தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

    எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி . ” அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே . ” என்றார் .

    எம்.ஜி.ஆர் புன்னகையுடன் , மணியிடம் ” டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் , நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? “

    மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு “அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே “என்று கேட்டுக்கொண்டார் .
    “சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது ” – தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்

    மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் .
    மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , “அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு ” என்று உத்தரவிடுகிறார்.

    அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர் . அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

        இது என்ன மாதிரியான சாமார்த்தியம் , மனிதநேயம் என்றேகணிக்க முடியவில்லை. உண்மையில் இப்படியொரு தலைவன் மிகச் சமீபத்தில் வாழ்ந்தாரா ? சொல்லபோனால் தலைவரை கண்ணால் பார்த்தவர்கள் கூட முன் ஜென்மத்தில் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களாக தான் இருப்பார்கள் ..

         இப்படிப்பட்ட தலைவனை இந்த மாநிலம் மீண்டும் என்றைக்கு பெறப்போகிறது ? .இவருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம்

    120 கோடி ரூபாய் செலவில் கோவில் நிஜெர்சியில்

    By: ram On: 19:49
  • Share The Gag

  • 120 கோடி ரூபாய் செலவில் கோவில் நிஜெர்சியில்

    உலகின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், 120 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில், இம்மாதம் 16ல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப் படுகிறது.


    அமெரிக்காவில் அதிக இந்தியர்கள் வசிக்கும், நியூஜெர்சி மாகாணத்தின், ராபின்ஸ்வில்லி நகரில் இந்த கோவில் கட்டப்பட்டு வந்தது.


     மொத்தம், 134 அடி நீளம், 87 அடி அகலம் கொண்ட இந்தக் கோவிலை, சுவாமி நாராயண் சஸ்தா எனப்படும் அமைப்பு கட்டியுள்ளது.

    அமீர்கானை பின்பற்றும் சித்தார்த்..! போங்க சித்தார்த் காமடி பண்ணாதீங்க...!

    By: ram On: 18:16
  • Share The Gag

  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா.

    இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தாலும், படத்தில் அசால்ட் ரவுடியாக நடித்திருக்கும் சிம்ஹாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஜிகர்தண்டா வெற்றியை பகிர்ந்து கொள்ள நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சித்தார்த்திடம் ஒரு ஹீரோவாக இருந்து சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.

    அதற்கு சித்தார்த், ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படத்தில் அமீர் கான் சாருடை கதாபாத்திரத்தை விட என் கதாபாத்திரம் தான் வலுவாக இருந்தது. ஆனாலும் அமீர்கான் அப்படத்தில் நடித்தார்.

    அவ்ளோ பெரிய ஸ்டார் கதை மட்டும் பார்த்து நடிக்கும் போது, நான் நடித்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.

    உடல் கட்டிகளை நீக்கும் கோரைக்கிழங்கு....!

    By: ram On: 11:48
  • Share The Gag

  • கிராமப்புறங்களில் வயல் வெளிகள் பக்கம் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகை இது. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு  ம ருந்துக் கடைகளில் முத்துக்காசு என்றும் குறிப்பிடுவர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி  போன்ற நறுமணப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது.

    கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.  கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. கடு மையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறையில் இம்மருந்தினை தயாரிக்க வேண்டும்.

    இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும்.  இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான  குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.

    குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ் சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.  இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத் துக்கொள்ள வேண்டும்.

    காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவி டும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண் டும். இதே முறையில் சாப்பிட சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

    தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால்  நன்றாக சுரக்கும்.

    நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்கள்..!

    By: ram On: 11:14
  • Share The Gag

  • உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

    இதோ, நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

    கிவி பழம்

    இது நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    செர்ரி

    செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும்.

    எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

    கொய்யா

    கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

    பெர்ரிப் பழங்கள்

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

    ஆப்பிள்

    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான்.

    ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    அன்னாசி

    அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

    பேரிக்காய்

    சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

    பப்பாளி

    பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

    தர்பூசணி

    தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

    மாதுளை

    அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

    பலாப்பழம்

    பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.

    நெல்லிக்காய்

    கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

    ஆவிகளுடன் இணையும் சூர்யா- மாஸ் பட சுவாரசியம்..!

    By: ram On: 10:49
  • Share The Gag

  • வெங்கட் பிரபு படம் என்றாலே கலகலப்புக்கும், த்ரில்லிங்க்கும் பஞ்சம் இருக்காது. அவருடைய எல்லா படத்திலும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து அசத்துவார். ஆனால் போன பிரியாணி படத்தில் கொஞ்ச தவறவிட்ட சில ட்விஸ்ட்டான விஷயங்களை சூர்யா படத்தின் மூலம் சரி செய்து களம் இறங்க உள்ளாராம்.

    சமீபத்தில் இப்படத்துக்கு மாஸ் என்ற டைட்டிலை வைத்து பலரையும் மாஸாக திரும்பி பார்க்க வைத்தார் வெங்கட் பிரபு.

    தற்போது இப்படம் கதை கரு கசிந்து உள்ளது, அதாவது இப்படம் காமெடி பின்னணி கொண்ட ஒரு சூப்பர் நேச்சுரல் படம். நமக்கு கிடைத்த தகவல் படி கதையில் மூன்று முக்கியமான கதபாத்திரங்களில் கருணாஸ், ஸ்ரீநாத் மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் டேனியல் ஆகிய முவரும் ஆவிகளாக நடிக்க சூர்யாவின் கண்ணுக்கு மட்டுமே இவர்கள் தெரிவார்களாம்.

    இவர்களுடன் சூர்யாவும் ஒரு சந்தர்ப்பத்தில் இணைய அதற்கு பிறகு நடக்கும் மாஸ் விஷயங்கள் தான் வெங்கட் பிரபுவின் மாஸ்.

    இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்க, முதன்முறையாக ஆர். டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கே .இ ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க உள்ளது.