சுத்தமான இந்தியா உருவாக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டார்.
டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.
சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. என்றார். இந்தியாவை சுத்தப்படுத்துவதற்கு மக்கள் சுமார் 100 மணிநேரம் செலவிட வேண்டும். என்று மோடி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை பிரபல் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா தனது டூவிட்டர் இணையதளத்தில் நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரியங்கா சோப்ரா தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சுத்தமான இந்தியா திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன். நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம். என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.