Friday, 25 July 2014

சூர்யாவை இயக்கும் 'மனம்' விக்ரம் குமார்...!

By: ram On: 21:21
  • Share The Gag

  • மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் 'இஷ்க்' என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மனம்' படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா தற்போது 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் குமார் இயக்கும் படம் ஆரம்பமாக உள்ளது.

    இதன் காரணமாகத்தான் விக்ரம் குமார் 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பொதுவாக தாங்கள் அடுத்து நடிக்கும் படங்களின் இயக்குனர்களையோ, தயாரிப்பாளர்களையோ அவரவர் விழாக்களுக்கு நடிகர்கள் வரவழைப்பது வழக்கம். அப்படித்தான் 'அஞ்சான்' விழாவிலும் விக்ரம் குமார் கலந்து கொண்டுள்ளார்.

    விக்ரம் குமார் இயக்கும் படம் 'மனம்' படத்தைப் போன்று குடும்பப் படமாக இருக்குமா, அல்லது 'யாவரும் நலம்' படத்தைப் போன்று திகில் படமாக இருக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி. அப்படி 'மனம்' படம் போன்று இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தில் சூர்யாவுடன், ஜோதிகா, சிவகுமார், கார்த்தி ஆகியோரில் யாராவது நடிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், ஜோதிகாவுக்கும் பொருத்தமான கதை கிடைத்தால் மீண்டும் சேர்ந்து நடிப்போம் என்று சூர்யா கூறியிருந்தார். அது அநேகமாக விக்ரம் குமார் இயக்கும் படம் மூலம் நடந்தாலும் நடக்கலாம்.

    அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?

    By: ram On: 21:04
  • Share The Gag
  • தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


    போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


    அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


    சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


    இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


    ஸ்மார்ட் போன் கேலரிக்கு
     ஸ்மார்ட் போன் கேலரிக்கு
     இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


    இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


    இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

    இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.? ஓ... அப்படியா..!

    By: ram On: 17:57
  • Share The Gag
  • சஹாரா:

    “சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


    “ஆரஞ்ச்’ வந்த வழி:

    வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


    தாய் + தந்தை:

    தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


    உதகமண்டலம்:

    தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


    காகிதம்:

    “காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


    திங்கள்:

    திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


    கிருதா:

    “கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


    சர்க்கரை:

    சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


    டொபாக்கோ (புகையிலை):

    ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

     இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


    பஞ்சாங்கம்:

    கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

    முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

    ஆலமரம்:

    ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
    அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்

    கோலாகலம் குறைவு - திருமணம் எனும் நிக்காஹ் - திரைவிமர்சனம்..!

    By: ram On: 17:47
  • Share The Gag

  • சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ராகவன் (ஜெய்), தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு ரெயிலில் புறப்படுகிறார். டிக்கெட் முன்பதிவு செய்யாததால் முஸ்லீம் பெயருடைய ஒருவருடைய பயணச்சீட்டில் பயணம் செய்கிறார்.

    அதே ரெயிலில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ரியா (நஸ்ரியா) வேலை நிமித்தமாக தனது தோழி ஆயிஷாவின் பயணச்சீட்டில் பயணம் செய்கிறார். இருவரும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் என்றாலும், ரெயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும்போது தங்களை முஸ்லீம் என்றே அறிமுகம் செய்துகொள்கின்றனர்.

    பயணத்தின் போது சகபயணி ஒருவர் ப்ரியாவை அவரது மொபைலில் தவறாக படம் பிடிக்க, அவரை ராகவன் கண்டித்து போலீசில் ஒப்படைக்கிறார். இதனால், பிரியாவுக்கும், ராகவனுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகிறது. பின்னர் இருவரும் கோயம்புத்தூரில் இறங்கி தனித்தனியாக பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.

    2 நாட்கள் கழித்து இருவரும் சென்னைக்கு திரும்பும்போது மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது இருவரும் தங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக்கொள்கிறார்கள். அன்றுமுதல் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு பேசி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    பிரியாவிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக ராகவன் முஸ்லீம் பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கிறான். அதேபோல், பிரியாவும் ராகவனிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக முஸ்லீம் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறாள்.

    இந்நிலையில், இருவரது பெற்றோர்களும் இவர்களுக்கு வரன் தேடுகிறார்கள். இதனால் பிரியாவும், ராகவனும் தங்களை பற்றிய உண்மையை பரிமாறிக் கொள்கிறார்கள். இருவருமே ஒரே பிரமாண குலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்களும் இருவரின் காதலை ஏற்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

    ஒருவரையொருவர் முஸ்லீமாக நினைத்து காதலித்து வந்ததால் பிரமாண முறைப்படி நடக்கும் திருமணத்தை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் பிரிகிறார்கள். இறுதியில் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    ராகவனான ஜெய், தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். அவருடைய நடிப்பும், தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பிரியாவாக வரும் நஸ்ரியா தமிழுக்கு அறிமுகமானது இதுதான் முதல் படம் என்றாலும், தமிழில் அவருக்கு இது கடைசி படமாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய பெண், பிரமாண பெண் என இரண்டு வேடங்களிலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

    ஜெய், நஸ்ரியா என இருவரையும் சுற்றியே முழுப்படமும் நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களில் வலுவில்லை. ரொம்பவும் சென்சிட்டிவான கதையை கையிலெடுத்து அதை பக்குவமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அணிஸ். முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி, வேறு எதையோ சொல்ல வர, கடைசியில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. திரைக்கதையிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத படமாக இருந்திருக்கும்.

    ஜிப்ரான் இசையில் ‘நெஞ்சுக்குள் பொத்தி வைப்பேன் பாடல்’ ரசிக்கும்படியாக இருக்கிறது. அப்பாடலின் காட்சியமைப்பும் பலே. லோகநாதனின் ஒளிப்பதிவு நஸ்ரியாவையும், படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் அழகாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’-வில் கோலாகலம் குறைவு.

    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!

    By: ram On: 16:39
  • Share The Gag
  • குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

    மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

    பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

    டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

    விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

    4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

    எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

    சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்! மிக எளிமையானது...!

    By: ram On: 08:07
  • Share The Gag
  • கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

    ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

    அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

    தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

    அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.

    ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

    'தல55'ல் நடிக்கும் லேடி அஜித்!

    By: ram On: 07:53
  • Share The Gag

  • கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துகொண்டிருக்கும் படம் கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிந்துவிட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

    இப்படத்தில் தல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இப்போது மேலும் ஒரு அஜித் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கேரளாவை சேர்ந்த நடிகை தேவி அஜித் தான் அது.

    ஒரு மலையாள தொலைக்காட்சியில் வீ.ஜே-வாக இருந்து பின்னர் நடிகையானவர் தேவி அஜித். அவர் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.