Thursday, 21 August 2014

பயனில்லாத ஏழு!!!

By: ram On: 23:19
  • Share The Gag
  • ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,



    அரும்பசிக்கு உதவா அன்னம்,




    தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்,




    தரித்திரம் அறியாப் பெண்டிர்,




    கோபத்தை அடக்கா வேந்தன்,




    குருமொழி கொள்ளாச் சீடன்,




    பாவத்தைத் தீராத் தீர்த்தம்,




    பயனில்லை ஏழும்தானே.


    ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல...

    By: ram On: 23:19
  • Share The Gag
  • 1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.


    2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.


    3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.


    4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.


    5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.


    6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.


    7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.


    8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.


    9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது


    10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.


    11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.


    12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாமா கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.

    தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?

    By: ram On: 23:18
  • Share The Gag

  • தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.


    உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.


    சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.


    எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.


    சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.


    கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.


    இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    ’மாத்தி யோசி’

    By: ram On: 21:29
  • Share The Gag
  • கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.


    அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.


    ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.


    சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.


    ”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.


    இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.


    அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது...

    வேதனையின் உச்சக்கட்டம்.....!!

    By: ram On: 21:29
  • Share The Gag
  • இந்த வருடம் இவ்வளவு பெட்ரோல் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.


    இந்த வருடம் இவ்வளவு வாகனங்கள் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.


    இந்த வருடம் இவ்வளவு தங்கம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.


    இந்த வருடம் இவ்வளவு சாராயம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.


    இந்தப் பதிவு சிரிப்பதற்காக அல்ல... வேதனையின் உச்சக்கட்டம்




    ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.!

    By: ram On: 21:28
  • Share The Gag
  • 1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்


    2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்


    3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்


    4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு


    5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு



    எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!


    நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம்.


    எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை என்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.


    இடுப்பு வலி குறைய:


    சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். 20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும். சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.

    தெரிந்துக் கொள்வோம் : புகைத்தலைப் பற்றி?

    By: ram On: 21:27
  • Share The Gag
  • இன்றைய உலகில் ஆண்களில் பெரும்பாலனோர்க்கு ஆறாவது விரலாய் இருப்பது சிகரெட் தான். இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.


    சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.


    ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.


    கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.


    உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.


    புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.


    ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.


    உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
    புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
    என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................


    புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.


    மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.


    இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.


    ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.


    இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.


    இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.


    ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:


    புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.


    பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.


    புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


    புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.


    இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.


    புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.


    யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.


    இன்றைய உலகில் ஆண்களில் பெரும்பாலனோர்க்கு ஆறாவது விரலாய் இருப்பது சிகரெட் தான். இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.


    சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.


    ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.


    கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.


    உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.


    புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.


    ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.


    உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
    புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
    என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................


    புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.


    மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.


    இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.


    ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.


    இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.


    இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.


    ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:


    புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.


    பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.


    புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


    புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.


    இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.


    புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.


    யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.


    பொல்லாத புகைப்பழக்கம்
    இல்லாதிருப்பதே ஒழுக்கம்

    குதிகால் வலிக்கு நிவாரணம்..விரைவில்.!

    By: ram On: 20:55
  • Share The Gag

  • குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள்போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இதுபோன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று “எக்ஸ்-ரே” எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொ றுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சைமூலம் இதை சரிசெய்துவிடலாம்.

    பொதுவாக, பலருக்கு காலையில் எழுந்ததுமே பாதங்களை கீழே வைத்தால் சட்டென வலிக்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், சரியான காலணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஏற்படும் வலி இது. வெகுசிலருக்கு உடம்பில் உப்பு சத்து அதிகமானாலும் இப்படிப்பட்ட வலி உண்டா கும்.

    குதிகாலில் ஏற்படும் வலியைப் போக்க வீட்டிலேயே இரண்டுவிதமான சிகிச்சைகள் மேற் கொள்ளலாம். ஒன்று வெந்நீர் ஒத்தடம். ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் – பாதங்கள் மூழ்கும் அளவுக்கு – வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் ஒரளவு குணம் தெரியும்.

    இரண்டாவது சிகிச்சை முறை, மெழுகு ஒத்தடம்! ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் மெழுகு கிடைக்கும். இந்த மெழுகை வாங்கி வந்து வெந்நீரில் போட்டு ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே எடுத்து குதிகாலில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

    குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் பாதங்கள் நன்கு அழுந்தும்படியான மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக குதிகால் வலியுள்ளவர்கள் “மைக்ரோ செல்லுலார் புட்வேர்” அணிவது அவசியம். இதை வீட்டிற்குள் நடமாடும் போதும் அணிய வேண்டும். அப்படியும் உங்கள் வலி சரியாகவில்லையென்றால் பிசியோதெரபி நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

    வ‌யதுக்கு அதிகமான எடை இருந்தால் அதைக் குறைக்க வேண்டும் அதற்கான முறையான பயிற்சியை மேற்கொண்டாலும் வலி நீங்க வாய்ப்பிருக்கிறது.

    சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....!

    By: ram On: 19:50
  • Share The Gag

  • 》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்

    》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்

    》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்

    》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்

    》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

    》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்

    》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்

    》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்

    》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)

    》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்

    》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்

    》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
    ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

    லிங்கா படக்குழுவினரை அசிங்கப்படுத்திய சோனாக்ஷி..?

    By: ram On: 18:57
  • Share The Gag

  • கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டு படம் லிங்கா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜாக் பால்ஸ்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சோனாக்ஷி சிங்கா நேற்று டிவிட்டர் பக்கத்தில், கடவுளே நான் என்ன தான் செய்திருந்தாலும், என்னை அப்படி ஒரு மோசமான ஓட்டல் அறையிலா தங்க வைப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி அப்படித்தின் தயாரிப்பாளர் கூறுகையில், ஜாக் பால்ஸ் கிட்டத்தில் எந்த ஒரு நல்ல ஓட்டல் அறைகளும் இல்லை. அதனால் இருப்பதில் எது நல்ல ஓட்டலோ அதில் தங்க வைத்தோம். ஆனால் சோனாக்ஷி சிங்காவிற்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

    ஆனால் தற்போது சோனாக்ஷி சிங்கா அந்த டிவிட்டை எடுத்துவிட்டார்.

    இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…

    By: ram On: 18:09
  • Share The Gag
  • சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

    * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

    * இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

    * ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

    * கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

    * எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

    * குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

    * காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

    * தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

    * பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

    * வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

    * அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

    • காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    அனல் பறக்கிறது தல 55வது படம்..!

    By: ram On: 17:58
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவான அஜித் இன்றைய இளைஞர்களின் ரோல்மாடாலாக திகழ்கிறார். அதனால் தான் என்னவே அவர் நடிக்கும் எல்லா படத்துக்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அஜித் என்ற நடிகனை விட நல்ல மனிதனாக தான் எல்லோரும் பார்க்கிறோம் .

    இன்று அவர் நடித்து கொண்டு இருக்கும் தல 55 படம் தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக், படம் எப்படி வரபோகிறது என்று எல்லாரும் ஆவலாக கார்த்திருக்க அங்கே அங்கே நடக்கும் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளிவந்து இணைய தளத்தில் பட்டய கிளப்பி கொண்டிருக்கிறது.

    தல 55வது புகை படங்கள் வெளிவந்தாலே ட்விட்டரில் ட்ரண்ட் ஆக தொடங்கிறது, நேற்றைய தினம் வெளிவந்த புகைப்படம் எல்லா ரசிகர் மத்தியுலும் பலத்த சந்தோசம், தல பார்க்க பக்க போலீஸ் கெட்டப்பில் வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் இருக்கிறார் .

    இந்த ஒரு புகை படத்துக்கே இணையத்தளத்தில் அனல் பறக்கும் எதிர்பார்ப்பு.

    வழுக்கை தலையில் முடிவளர.....!

    By: ram On: 17:27
  • Share The Gag

  •  வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

    வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
                                           
    சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

    சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

    கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

    குறும் படத்திலிருந்து கத்தி பட டைட்டில் ட்ராக் காப்பி - ஆதாரம் உள்ளே!

    By: ram On: 17:06
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் காப்பி அடிப்பதில் நம்ம ஆட்களை அடிச்சிக்கவே முடியாது, படத்தை மட்டும் இல்லாமல் இசையை கூட திருடபவர்கள் உண்டு.

    விஜய் பிறந்த நாளென்று வெளியான கத்தி மோஷன் டீசெர் பல சர்ச்சகளை சந்தித்து. இந்த டீசெர் நியூ யார்க் டைம்ஸ் என்ற வீடியோ வை வடிவமைத்து உள்ளனர் என்ற சர்ச்சை வெளிவந்தது. அதன் பிறகு கத்தி படத்துக்கு வேற சில பிரச்சனைகள் வர அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் விஜய்க்கு வேண்டியவர்களும் மற்றும் பத்திரிக்கையர்களும் .

    பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு இசையமைத்த ஹரன் எஸ் ஹரி தனது முகபுத்தக பக்கத்தில் ஒரு வீடியோ வை ஷேர் செய்து உள்ளார் . அதை கேட்டுவுடன் பலத்த அதிர்ச்சி , "நான் யார்" என்றா குறும் படத்துக்காக அவர் போட்ட இசையை அப்படியே கத்தி படத்தின் டைட்டில் ட்ராக் இசை வடிவமைத்து உள்ளார் அனிருத்.

    இந்த இசை போன மே மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது, இது தெரிந்து நடந்தா இல்லை தெரியாமல் நடந்தா என்ற ஆராய்ச்சி போக வேண்டாம்.

    ஆனால் ஒரு இசையை திருடவது நியாமற்றது !

    கத்தி படத்தின் ஒரிஜினல் மியூசிக் இதோ

    https://soundcloud.com/haran-s-hari27/the-revenge-ost-naan-yaar
    நான் யார் படத்தின் ட்ரைலர்

    https://www.youtube.com/watch?v=dZ3OvQbkBKo

    இருபெரும் கோபுர வாயில்கள்தான்.....!

    By: ram On: 08:29
  • Share The Gag

  • தஞ்சை கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் கோயில் கருவறையின் நேர் கிழக்கே அமைந்திருந்த "கேரளாந்தகன்" வாயில், "ராச(ஜ) ராச(ஜ)ன்" வாயில் ஆகிய இரு பெரும் கோபுர வாயில்கள் தான் தமிழ்நாட்டிலேயே பெரிய கோபுரங்களாக அப்போது திகழ்ந்தன, இதை மையமாய் வைத்து தான் இதற்கு பின்னர் கட்டப்பட்ட கோயில்களில் 13 நிலைகள் வரை கோபுரங்கள் உயர்ந்தது.

    இந்த இரு வாயில்களையும் கடந்து நாம் உள்ளே சென்றதும் விண்ணை முட்டி நிற்கும் விமானத்தின் உயரமும் அகலமும் பல பகுதிகளாலான பாறைகளை, இணைத்தது தெரியாமல் ஒரே கல்லை போன்று இணைத்து விமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கும் அந்த 80 டன் எடையுடைய பாறையும் நம் கண்ணில் பட்டதும் கோயிலை சுற்றி இருக்கும் மற்ற விசயங்கள் நம் கண்களுக்கு சாதராணமாக தோற்றமளிக்கும், இதனால் சுற்றி இருக்கும் நிறைய விடயங்களை தவறவிடுவோம், அது நம்முடைய தவறல்ல அந்த விமானத்தின் பிரம்மாண்டம் அப்படி!.

    அப்படி நாம் தவறவிடுவதில் முக்கியமானவை திருமதிலை சுற்றி தெற்கு, மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் மற்ற மூன்று வாயில்கள், அதிலும் முக்கியமானவை கோயில் திருமதிலின் வடமேற்கே இருக்கும் "அணுக்கன் வாயில்".

    அப்படி என்ன சிறப்பு இந்த வாயிலுக்கு? இந்த திருவாயிலின் வழியே தான் மாமன்னர் ராச ராசன் இறைவனை வழிபட வந்திருப்பார் என்பதற்கு சில ஆதாரங்கள் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அய்யா அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

    திருமதிலில் இணைத்துள்ள நான்கு வாயில்களில் இந்த அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்கிறது என்பதை அங்கு காணப்படும் மற்ற வாயிகளை வைத்தும், அணுக்கம் வாயிலின் எச்சங்களை வைத்தும் நாம் உணர முடிகிறது. நம் வீடுகளில் மரத்தில் செய்வதைப் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ்வாயில் நிலைக் கல் அமைந்துள்ளது.

    இந்த வாயிலின் இருபக்கமும் சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுருப்பதையும் காணமுடிகின்றது.

    இந்த நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசைகளில் துவாரங்களை காணலாம், அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் கூடிய தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. மேலே காணப்படும் இந்த துவாரங்களில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும், செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.

    அதெப்படி அவ்வளவு உறுதியாக இவை இதற்கு தான் பயன் பட்டவை என்று எப்படி கூற முடியும் என்று கேட்பவர்கள், இவ்வகை அமைப்பை அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரசு(ஸ்)கோ ஓவியங்களிலேயே இது போன்ற அமைப்பை காணலாம், அதே போன்று தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத் தான் இருந்தன என்பதை ராசராசன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.

    அதுமட்டுமல்லாமல் ராசராச சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே இன்றைக்கு உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பதை வீடு கட்ட ஒருவர் நிலத்தை தோண்டும்போது கிடைத்த தூண்களும், அதில் உள்ள கல்வெட்டுகளை வைத்தும் தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "சுந்தர பாண்டியன்" படை எடுப்பின் போது தஞ்சை அழிக்கப்பட்டது என்பது கல்வெட்டுகளின் மூலம் உறுதியாகின்றது, அப்போது இங்கிருந்த அரண்மனையும் அழிவுற்றிருக்கலாம் .

    மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் (சண்டிகேஸ்வரர் சன்னதி அருகில்) மட்டுமே அட்ட மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதும் நாம் இங்கு கவனிக்க வேண்டியவை.

    செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின் போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் ராசராசன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது.

    வெற்றி விருந்து வைக்கிறார் பார்த்திபன்..!

    By: ram On: 07:59
  • Share The Gag

  • பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள், பத்திரிகையாளர்களுடன் கொண்டாடுகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை (ஆகஸ்ட் 21) வெற்றி விருந்து (சக்சஸ் பார்ட்டி) வைக்கிறார். அதோடு படம் பற்றிய திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகிறார்.

    இதுகுறித்து பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 1989ல் புதிய பாதை வெளியீட்டின்போது அனுபவித்த அதே பிரவச வேதனையை இந்த 2014 ஆகஸ்ட் 15லும் அனுபவித்தேன். என் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கொஞ்சம் வித்தியாசமானது என்று எனக்கு நானே ஒத்துக் கொண்ட படம். காரணம் கதைக்களம் இல்லாத கதையில் களமாட வேண்டியதாயிருந்தது. பலமான திரைக்கதையில் பரீட்சார்த்தமாய் செய்த எல்லா விஷயங்களும் இன்று எல்லோராலும் ரசிக்கப்படுவதில் ஆனந்த அதிர்ச்சியாகியுள்ளேன்.

    திரைத்துறைக்கு முற்றிலும் புதிதான ஆனால் திரைக்கலையையும், என்னையும் நேசித்த ஒரு நல்ல தயாரிப்பராளரால் தான் இந்த வித்தியாசமான முயற்சி சாத்தியமானது. புதிதாக எடுக்கப்படும் ஒரு முயற்சியின் போது இது மக்களுக்கு புரியுமா, ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் படைப்பாளியின் முன் வைக்கப்படும் கேள்வி. அது அவனை சமரசம் செய்ய வைக்கும்.

    என்மேல் ரசிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், அவர்கள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் பொய்ததில்லை. அரங்கங்களிலும் எழும் கைதட்டல்கள் அதை உறுதிப்படுத்தும்போது கலங்கி விட்டேன். என் கைகுட்டை கண்ணீர் குட்டையானது. ஒவ்வொரு ரசிகனையும் கட்டிப்பிடித்து நன்றி தெரிவிக்க ஆசை, அதனை உங்கள் மூலம் செய்கிறேன். இது 25 வருடங்கள் இதயத்தில் அடக்கி வைத்த ஆக்கபூர்வமான ஆதங்கம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால்.....!

    By: ram On: 07:49
  • Share The Gag

  • அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.


    இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.

    இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.

    இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.
    இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

    சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

    உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்

    எளிதில் சீரணமடையும்
    மலச்சிக்கலைப் போக்கும்
    சிறுநீரை நன்கு பிரிக்கும்
    இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
    பித்த அதிகரிப்பை குறைக்கும்
    நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

    உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது.