Friday, 22 August 2014

‘கபடம்’ விறுவிறுப்பான திரைவிமர்சனம்..!

By: ram On: 20:22
  • Share The Gag

  • நாயகன் விச்சு (சச்சின்) சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் நண்பரை சந்திக்க கோவிலுக்கு போகும்போது அங்கு வரும் நாயகி பத்மினியை (அங்கனா ராய்) பார்க்கிறார். பட்டுச்சேலையில் அவளை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளுக்கு தெரியாமலேயே அவளது பெற்றோரிடம் திருமணம் பேசி முடிக்கிறார். அவர்களும் நிச்சயதார்த்த தேதியை குறித்துவிடுகின்றனர்.

    யாரென்று தெரியாமலேயே அந்த நிச்சயதார்த்தத்துக்கு பத்மினியும் ஒத்துக் கொள்கிறார். நிச்சயதார்த்தத்தின் போது விச்சுவை பார்த்ததும் அவளுக்கு பிடித்துப் போய்விடுகிறது. 3 மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்வதாக பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர்.

    முன்பின் அறிமுகமில்லாத பத்மினியிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது? என்று தெரியாமல் நாயகன் சற்று தடுமாறுகிறார். ஒருகட்டத்தில் அவளுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு காலை உணவு சாப்பிட வருமாறு அழைக்கிறான். அதன்படி அவளும் வருகிறாள்
    .

    அங்கே, எதிர்பாராதவிதமாக விச்சுவின் அறையை பார்க்கிறாள். அந்த அறையில் விச்சு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஆங்காங்கே மாட்டி வைத்திருப்பதை பார்த்ததும் சற்று நெளிந்து போகிறாள். ஆனால், விச்சுவோ, பத்மினி அந்த புகைப்படங்களை பார்த்திருக்கமாட்டாள் என்று மனக்கணக்கு போடுகிறான்.

    விச்சுவுக்கு தான் ஒரு நல்ல காதலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பத்மினி அவளுடன் நெருங்கி பழகுகிறாள். ஆனால், பத்மினியின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. இதை அவளிடம் வெளிப்படையாகவே கூறுகிறான். இதனால், விச்சுவுக்கும் பத்மினிக்கும் இடையே சிறு இடைவெளி உருவாகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளிலும் விச்சு மீது பத்மினிக்கு ஆசையைவிட வெறுப்பே அதிகமாக உருவாகிறது.

    ஒருகட்டத்தில் பத்மினி இன்னொருவருடன் நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் பைக்கில் ஊர் சுற்றுவதுமாக இருப்பதாக விச்சுவுக்கு அவனது நண்பர்களில் ஒருவன் கூறுகிறான். பத்மினியின் நடவடிக்கைகளும் அதுபோலவே இருப்பதால் அவள்மீது சந்தேகம் கொள்கிறான்.

    ஒருநாள் ஊருக்கு கிளம்பும் பத்மினியை சந்திக்க வரும் விச்சு அவளை தனது காரில் அழைத்துச்சென்று பஸ்ஸில் ஏற்றிவிடுகிறான். பின்னர், அந்த பஸ்ஸை பின்தொடர்ந்து சென்று அவளை நோட்டமிடுகிறான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் பாதி வழியிலேயே பஸ்ஸை நிறுத்தி, அருகிலுள்ள ஒரு லாட்ஜிற்கு சென்று தனது பெயரை மாற்றிக்கொடுத்து ரூம் எடுத்து தங்குகிறாள். அவளை பின்தொடர்ந்து சென்ற விச்சுவும் தனக்கு அவளது அறைக்கு எதிரில் உள்ள அறையில் தங்குகிறான்.

    பத்மினி எதிர் அறையில் வேறு ஒருவனுடன்தான் இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, அவளை கொல்ல துடிக்கிறான். தனது நெருங்கிய நண்பன் சிவாவுக்கு போன் போட்டு இதை சொல்கிறான். பதிலுக்கு சிவாவோ அப்படி எதுவும் செய்துவிடாதே? நான் வருகிறேன் என்று சொல்கிறான். அவனுக்கு 20 நிமிடம் அவகாசம் கொடுத்துவிட்டு பத்மினிக்கு எதிர் அறையிலேயே தங்கியிருக்கிறான்.

    விச்சு நினைத்த மாதிரியே எதிர் அறையில் பத்மினி வேறு ஒருவனுடன் நெருக்கமாக இருந்தாளா? விச்சு கொடுத்த 20 நிமிடத்திற்குள் சிவா வந்து அந்த கொலையை தடுத்தானா? இல்லை விச்சு, பத்மினியை கொலை செய்தானா? என்பதே மீதிக்கதை.

    விச்சுவாக வரும் சச்சின் அழகாக இருப்பதோடு, நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். நிர்வாண புகைப்படங்களை தனது அறையில் வைத்து ரசிக்கும் இவரது கதாபாத்திரம், ஏன் தனக்கு நிச்சயமான பெண்ணுடன் நெருக்கமாக இருக்க பயப்படுகிறது என்பதுதான் புரியவில்லை. கடைசி காட்சிகளில் இவரது நடிப்பு அபாரம்.

    பத்மினியாக வரும் அங்கனா ராய், மாடர்ன் உடையிலும், சேலையிலும் அழகாக பளிச்சிடுகிறார். சச்சினை மயக்க இவர் செய்யும் சேஷ்டைகளாகட்டும், பின் அவனை வெறுத்து ஒதுக்குவதாகட்டும் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஒரு லாட்ஜில் நடக்கும் கதை என்பதால் படத்தில் கதாபாத்திரங்கள் மிகக் குறைவுதான். சச்சின் நண்பனாக வரும் ஆதித்யா, லாட்ஜ் ஊழியராக வரும் காதல் சரவணன் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    ஏற்கெனவே, இதேபோல் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதையே தூசி தட்டி மறுபடியும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோதி முருகன். முதல் பாதி சற்று போரடித்தாலும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

    சாஷி இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பாடல் காட்சிகளில் இவரது உழைப்பு தெரிகிறது.

    மொத்தத்தில் ‘கபடம்’ விறுவிறுப்பு

    'சண்டமாருதம்' படத்தின் மூலம் வில்லனாகிறார் சரத்குமார்..!

    By: ram On: 19:49
  • Share The Gag

  • வில்லன் நடிகராக அறிமுகமாகி ஹெரொவானவர்களில் சரத்குமாரும் ஒருவர். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஆக்ஷன் ஹீரோவான இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

    ஏ.வெங்கடேஷ், இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் 'சண்டமாருதம்'. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சரத்குமார், வழக்கமான அண்ணன்-தம்பி, அப்பா-மகன் என்று இல்லாமல், ஒரு வெறு வித்தியாசமான வில்லன் மற்றும் கதாநாயகன் வேடங்களை எற்றுக்கிறார்.

    இப்படத்தின் கதையை சரத்குமார் எழுத, திரைக்கதை, வசனத்தை பிரபல க்ரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் எழுகிறார்.

    “நான் பாக்கறதுக்குத்தான் வில்லன் ஆனா பக்கா ஹீரோ “ என வில்லனும், “நான் செய்வதில் எல்லாம்  ஹீரோயிஷம் இருக்கும்“ என கதாநாயகனும், தனித்தனி கொள்கையுடன் மோதும் ஒரு வித்தியாசமான திரைப்படம் இந்த 'சண்டமாருதம்' இந்த படத்தின்  80  சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன் என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

    இவர்களுடன்  சமுத்திரக்கனி ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதாரவி, தம்பிராமையா, இமான் அண்ணாச்சி, வெண்ணிறாடை மூர்த்தி, நரேஷ், ஆதவன், சிங்கம்புலி, ஜார்ஜ், நளினி, ராம்குமார், கானா உலகநாதன், டெல்லி கணேஷ், மோகன்ராமன், காதல் தண்டபாணி, ரேகா சுரேஷ், ஜி.எம்.குமார், சூப்பர்குட் கண்ணன், பிரபாகர், நடேசன், செல்வராஜ், பாபூஸ், கராத்தேராஜா ஆகியோர் நடிக்க, முக்கிய வேடத்தில் புதுமுக வில்லனாக பெங்களூரை சேர்ந்த அருண்சாகர் அறிமுகமாகிறார்.

    ஜெம்ஸ் வசந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மோகன்ராஜ், சுமதி ஸ்ரீ பாடல்கள் எழுதுகிறார்கள்.

    மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பாக மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை ஆ.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள்.

    ‘ஆயிரம் தோட்டாக்கள்! ’ அஜீத் மனசில் எரிந்ததா பல்ப்?

    By: ram On: 17:52
  • Share The Gag

  • பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு பெயர் வைக்க இவ்வளவா யோசிக்கணும்? சமீபத்தில் வருகிற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பெயர் வைக்கிற விவகாரத்தில் இப்படியெல்லாம் ரசிகர்களை புலம்ப வைப்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் வாடிக்கை! அஜீத் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே. என் புகழ் பாடுற மாதிரி தலைப்பு வேண்டாம். படத்தில் வரும் கேரக்டரின் பெயரையே தலைப்பாக வைக்கிற ஓல்டு ட்ரென்டும் வேண்டாம். அது வேண்டாம்… இது வேண்டாம் என்று ஏகப்பட்ட ‘…டாம்’கள்!

    தல 55 என்று அஜீத் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புதுப்படத்தின் தலைப்பு வைப்பதிலும் அநியாயத்துக்கு சிக்கல். கவுதமுக்கு பிடித்தால் அஜீத் நோ என்கிறார். அஜீத்திற்கு பிடித்தால், கவுதம் இன்னும் கொஞ்சம் யோசிப்போமோ என்கிறார். இப்படியே போன தலைப்பு சம்பந்தமான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

    ஆயிரம் தோட்டாக்கள் என்றொரு தலைப்பை சொன்னாராம் கவுதம். அஜீத் மனசில் பச்சை பல்பு எரிந்ததாக சொல்கிறார்கள். அது ரெட் கலருக்கு மாறுவதற்குள் ஒரே அமுக்!

    அறிவிச்சுருங்களேன் கவுதம் சார்….!

    இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!

    By: ram On: 17:03
  • Share The Gag
  • தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

    சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

    தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

    மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

    மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

    மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

    சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

    மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

    வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

    புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

    மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

    3 வருடம் சிறை தண்டனை உண்டு

    நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!

    By: ram On: 17:02
  • Share The Gag
  • *ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    " இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
    " என்ன சொல்றே?
    நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

    அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

    எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

    கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
    அப்பா...
    என்னம்மா... யார் இந்த பையன்
    இவர்தாம்பா அவர்
    அவர் ...ன்னா
    அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

    அப்படியா வாப்பா..உட்கார்.
    உட்கார்ந்தான்.
    உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
    தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

    இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
    கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

    அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
    கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

    சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
    அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

    சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

    அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

    அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

    நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்...!

    By: ram On: 08:21
  • Share The Gag

  • நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது.

    செய்முறை :

    முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

    இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

    பயன்கள் :

    இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    இந்திராகாந்தி படுகொலை படத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு சிஇஓ!

    By: ram On: 07:54
  • Share The Gag

  • லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மும்பை சென்சார் போர்டு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார், சர்ச்சைக்குரிய இந்திராகாந்தி படுகொலை தொடர்பான படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் அலுவலகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்திராகாந்தி படுகொலை படத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு சிஇஓ

    சான்றிதழ் வழங்க லஞ்சம்

    இந்தி படம் ஒன்றை தணிக்கை செய்து சட்டீஸ்கரில் வெளியிடுவதற்காக ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சென்சார் ஆலோசனைக்குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால், அதிகாரபூர்வ முகவர் ஸ்ரீபட்டி மிஸ்ரா ஆகியோர் மும்பையில், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    அதிகாரிக்கு தொடர்பு

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில், லஞ்ச பணத்தில் மத்திய தணிக்கை வாரிய முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமாருக்கும் பங்கு கொடுத்தது தெரியவந்தது.

    சிஇஒ கைது

    இதனை தொடர்ந்து முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டார். திரைப்படங்களை விரைவாக சென்சார் செய்ய ரூ.10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    கலெக்சன் ஏஜென்ட்

    ராகேஷ் குமாரின் அதிகார பூர்வ ஏஜென்டாக கிருஷ்ண பள்ளி என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் ராகேஷ் குமாருக்காக லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளார்.

    லஞ்சப்பணத்தில் சொத்து

    இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராகேஷ் குமார் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. லஞ்ச பணத்தில் ராகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மற்றும் பீகாரில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிபிஐ ரெய்டு

    மும்பையில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி ரூ.10 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர்.

    ரூ.1 லட்சம் லஞ்சம்

    இதனிடையே இந்திராகாந்தி படுகொலை சம்பவம் பற்றிய சர்ச்சைக்குரிய திரைப்படமான காம் தே ஹீரே திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக ராகேஸ்குமார் ரூ.1லட்சம் லஞ்சப்பணம் பெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்படம் நாளை வெளியாக உள்ளது.

    மத்திய பணியாளர் தேர்வாணையம்

    ராகேஷ் குமார் 1997 மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ரயில்வே தனிச்சேவை அதிகாரியாக தேர்வானவர். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்சார் போர்டின் முதன்மை செயல் அலுவலராக பணியில் சேர்ந்தார். இவர் வகிக்கும் பதவி மத்திய தணிக்கை துறை தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்காணிப்பு வளையத்திற்குள்

    சினிமாக்களை தணிக்கை செய்து வெளியிட சென்சார் போர்டு அதிகாரி லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் போர்டு அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    சிலை வைக்கும் அளவுக்கு இங்கு எந்த நடிகர் இருக்கிறார் - சிவகுமார் பேச்சு ..!

    By: ram On: 07:14
  • Share The Gag

  • மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை ஐகோட்டில் நேற்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

    சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காந்தியடிகள், ஆபிரகாம்லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

    சமஅளவு முகம் ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன்.

    மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சமஅளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக் கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக் கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும்.

    எல்லா லட்சணமும்கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்தி மாலாதான்.

    யார் முட்டாள்..?

    By: ram On: 06:54
  • Share The Gag
  • அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இவன் அடிமுட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராட்சிகளில் ஈடுபட்டார்.

    இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும்..!"

    மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். இப்போ சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..?ஆகவே யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொர் வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்.

    ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி...

    By: ram On: 06:54
  • Share The Gag
  • உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

    கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

    இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

    சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
    தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

    ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

    அன்புள்ள கணவருக்கு...

    By: ram On: 06:53
  • Share The Gag
  • ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! 

    அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

    நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

    ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

    கைதி பதில் எழுதினான்.

    அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

    அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

    ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

    அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

    இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

    கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

    அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

    ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

    மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடாதீங்க.... அது மிகப்பெரிய தவறாம்!.....!

    By: ram On: 06:52
  • Share The Gag

  • அட! என்னைய்யா அநியாயமா இருக்கு! அவளோட பேரை மட்டும் தான் சொல்றதுக்கு எங்க வீட்டிலே அதிகாரமே இருந்துச்சு! அதுக்கும் வேட்டு வைச்சுட்டீரே! நீர் நல்லாயிருப்பீரா! என்று தலைப்பைப் படித்தவர்கள், திட்ட ஆரம்பித்திருப்பீர்கள்.

    கொஞ்சம் பொறுங்க! விஷயத்தை முதலில் தெரிஞ்சுக்கிடுங்க! அந்தக் காலத்து சினிமா பார்த்திருக்கீங்களா! மனைவியிடம் கணவன் தேவி என கசிவார். அந்த அம்மையார் நாதா என உருகுவார். இதெல்லாம் விளையாட்டுக்கு இல்லே! சாஸ்திரப்படி தான், அப்படி சொன்னாங்க.

    பொதுவாக, வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்பது மரபு. உறவுமுறை சொல்லி தான் அழைக்க வேண்டும். அதன்படி, கணவனின் பெயரை மனைவி சொல்லக்கூடாது.

    அப்படியானால், கணவனை மனைவி எப்படி தான் அழைப்பதாம்! மாமா, அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைக்கலாம். அப்படி சொல்லும் வழக்கமில்லை என்றால், தங்கள் குழந்தைகளின் பெயரால், ஆகாஷ் அப்பா, கிருஷ்ணப்பா, சாந்தி அப்பா, வசந்தியப்பா என்று கூப்பிடலாம்.

    ஆனால், மனைவியின் பெயரை கணவன் சொல்லவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இவர்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ராதா என்று பெண் தெய்வங்கள் ஒன்றின் பெயரால் தான், அவர்களை அழைக்க வேண்டுமாம்!

    அட போங்க சாமி! நீங்க டிவியிலே சீரியலே பாக்கிறது இல்லியா! சரவணா, மாதவாங்கிற காலமெல்லாம் போய், புருஷனை வாடா, போடாங்கிற ரேரஞ்சுலே போய்கிட்டு இருக்கு! இந்த நேரத்தில் இதுமாதிரி நியூஸெல்லாம் போட்டு, பொம்பளைங்கள வெறுப்பேத்துறீங்களே! என்கிறீர்களா?...

    சாஸ்திரம் சொல்றதை நாங்க சொல்லிட்டோம்! அதை பாலோ பண்றதும், பண்ணாததும் உங்க இஷ்டம்!

    கழுத்தைப் பராமரிக்கும் இரகசியம் இதுதான்....!

    By: ram On: 06:52
  • Share The Gag

  • முகத்தை போலவே கழுத்தையும் அக்கரையுடன் பராமரிக்க வேண்டும். சிலருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்படும். இந்த கருமையை நீக்க இயற்கை பிளீச்சாக எலுமிச்சை பயன்படுகிறது. தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எலுமிச்சை சாறை கழுத்தில் கருமையான பகுதிகளில் தடவி ஊறவிட்டு குளிக்க வேண்டும். இதனால் படிப்படியாக கருமை மறையும்.

    இது போல் பால் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதை தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல கலக்கவும். இந்த கலவையை கழுத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும். வாரம் ஒருமுறை இதுபோல் செய்தால் கழுத்து பளபளக்கும்.

    இது போல் தயிர், தக்காளி ஜூஸ் அல்லது மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து பூசலாம். கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து பூசலாம். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

    செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, அவரி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் கூடும்.
    குங்குமப்பூ, வால்மிளகு, லவங்கம், ஓமம், சாம்பிராணி தலா 25 கிராம் எடுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் எடுத்து சில சொட்டு பால் விட்டு கலந்து முகம், கழுத்தில் பூசிவர சிகப்பழகு கூடும்.

    வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்..!

    By: ram On: 06:52
  • Share The Gag

  • வெள்ளி நகைகள் பாதுகாப்பும் பயன்களும்

     வெள்ளி நகைகள் வெப்பம் உண்டாக்கும் இயல்பு கொண்டவை.

     உடலில் உண்டாகும் இசிவு எனும் நோயை அகற்றக்கூடியது.

     மனதில் மிகுந்த குதூகலத்தை உண்டாக்கக் கூடியது.

     மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் பெற்றது.

     உடலின் உள்ளே உள்ள கொதிப்பை அகற்றும் தன்மை கொண்டது.

     மூளைக்கு மிகுந்த வலிமையை உண்டாக்கும் இயல்பு கொண்டது.

     பெண்களுக்கு பெரும்பாலும் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளிலும் முழங்கை போன்ற மூட்டுப் பகுதிகளிலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு. இதற்கு ருமாட்டிக் "ஆர்த்தரைட்டிஸ்' என்று ஆங்கிலத்தில் பெயர். இதனை அகற்ற பெண்கள் கணுக்கால்களில் உள்ள மூட்டுப் பகுதிகளில் கால் விரல்களில் வெள்ளி நகை அணிய வேண்டும்.

     காலில் அணியும் மெட்டியால் வலியில்லாமல் ஈஸியான சுகப் பிரசவம் ஏற்படும் என்பது ஒரு நம்பிக்கை.

     காலில் அணியும் கொலுசு, தண்டையினால் நம்மிடம் இருந்து வெளியேறும் சக்தியை மீட்டு ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி கூடும்.

     தங்கம், வெள்ளி எந்த நகைகளாக இருந்தாலும் நெக்லஸ், செயின், கொலுசு, பிரேஸ்லெட், ஆரம் போன்றவற்றை வைக்கும்போது வளைத்துச் சுருட்டி வைக்கக்கூடாது. வளைத்தால் விரைவில் இணைப்பு விட்டு விடலாம். இதைத் தவிர்க்க நீளமான பெட்டியில் வைக்க வேண்டும்.

     வெல்வெட் துணி, நல்ல வெள்ளைத் துணிகளை இரண்டாக மடித்து அதன் மேல் நகைகளை வைத்தால் நகைகள் புதிது போல் இருக்கும்.

     உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்துக் கழுவித் துடைத்தால் பளிச்சென மின்னும்.

     திருநீறு கொண்டு தேய்த்துக் கழுவினாலும் வெள்ளி நகைகள் கறுப்பு போய் மிளிரும்.