அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விவேக், தேவி அஜீத், பிரம்மானந்தம், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டான் மெக்கதூர் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.
நாளுக்கு நாள் இப்படத்தின் சுவாரஸ்யமான செய்திகள் வந்துக் கொண்டே இருக்கிறது. இச்செய்திகள் தல 55 எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ஏற்கனவே அஜீத் நடிப்பில் பொங்கல் அன்று ரிலீசாகி வெற்றிப் பெற்ற படம் வீரம். அதேபோல் இப்படத்தையும் பொங்கல் அன்று ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளனர்.
தல 55 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஐதராபாத் மற்றும் மலேசியாவில் படமாக்கவுள்ளனர்.