Thursday, 31 July 2014

பிறந்தநாள் என்றால் என்ன ? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!

By: ram On: 22:44
  • Share The Gag

  • பிறந்தநாள் என்றால் என்ன ?
    இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில்
    உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும்
    கேட்டனர்.
    அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்யபட்டது யாருடைய பதில் தெரியுமா?
    அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.
    அது என்ன
    தெரியுமா!!?
    .
    .
    .
    ..
    .
    .
    .
    .
    .
    .
    " வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய
    அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது..... "

    நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா ?? போலியானதா ??

    By: ram On: 21:35
  • Share The Gag

  • நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா ?? போலியானதா ??

    நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால்
    ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும். அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்.

    10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும் மருந்து தயாரித்த நிறுவனத்தின் விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்...

    PharmaSecure's unique SMS authentication solution that helps identify a fake/ genuine medicine in just 10 seconds. SMS 9 digit alphanumeric code to 9901099010 and get all information from the manufacturer in less than 10 seconds.

    காக்க வைக்கும் கௌதம்! கடுப்பில் அஜித்!

    By: ram On: 21:19
  • Share The Gag

  • தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தல-55 தான். இப்படத்தை முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

    தற்போது பிரச்சனையே கௌதம் தானாம், ஆம் தீபாவளிக்கு படத்தை எப்படியாவது ரிலிஸ் செய்யவேண்டும் என்று சொல்லி தான் ஏ.எம்.ரதனம் இப்படத்தை தயாரிக்க சம்மதித்துள்ளார்.

    ஆனால் இப்படத்தை முடிப்பதற்குள் சிம்பு, விக்ரம் படத்தின் அறிவிப்புகளை கௌதம் வெளியிட ரத்னம் கடும் கோபத்தில் இருக்கிறார், அஜித் தான் இந்த படத்தின் வாய்ப்பை கௌதமிற்கு வழங்கியதால் இவர்களுக்கிடையே என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.

    ஒரே படத்தில் யுவன், தனுஷ். இளையராஜா இணைகிறார்கள்..!

    By: ram On: 19:49
  • Share The Gag

  • தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி விட்டார், குறிப்பாக தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணையவுள்ளனர். இந்த முறை இவர்களுடன் இசைஞானியும் இணைந்து கலக்கப்போகிறார்.

    வை ராஜா வை படத்தில் தனுஷ் ஒரு பாடல் எழுதுகிறார், அப்பாடலுக்கு யுவன் இசையமைக்க, இளையராஜா பாடவுள்ளார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

    By: ram On: 18:27
  • Share The Gag

  • கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

    சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மையானது கிரயப்பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்த முடியும்.

    நகல் பத்திரம்

    பிறருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கல் இன்றி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். ஆதலால் கிரயப்பத்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அது தொலைந்து போனால் சொத்து நமக்குரியதாக இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்க வேண்டி இருக்கும்.

    அதற்கும் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் கிரயப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு கிரயப்பத்திரத்தின் பதிவு எண், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் தெரிந்திருக்க வேண்டும். பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் இருந்தால் அதன் மூலமாக புகாரில் விவரங்களை குறிப்பிட்டு விடலாம்.

    சிரமங்களை சந்திக்கநேரும்

    ஆனால் ஜெராக்ஸ் இல்லாமல் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு நோட்டில் கிரயபத்திரத்தில் இருக்கும் எண்கள், விவரங்களை குறிப்பிட்டு வைத்திருந்தால் அதன் மூலம் புகார் கொடுக்க ஏதுவாக இருக்கும். அப்படி எழுதி வைக்காத பட்சத்தில் கிரயப்பத்திர நகலை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தின் சர்வே நம்பராவது மனதில் பதிந்திருந்தால் அதன் மூலம் புகார் செய்ய முதல்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்.

    அதுவும் தெரியாத பட்சத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் காவல் நிலையத்தில் கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதாக புகார் தெரிவித்தால்தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகலை எளிதாக பெற முயற்சிக்க முடியும். அத்துடன் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் எளிதாக கிரயப்பத்திர நகலை பெற முடியும்.

    கேள்விகள் எழும்

    ஏனென்றால் 1987–ம் ஆண்டுக்கு முன்பு சொத்து வாங்கப்பட்டு இருந்தால் கணிணி மூலம் பத்திர நகலை பெறுவது இயலாது. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் பழைய ஆவணங்களை தேடி பிடித்து அதன் மூலமே நகல் பத்திரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் காலதாமதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    அப்படியே நகல் கிரயப்பத்திரத்தை வாங்கினாலும் அதனுடன் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கும். அதிலும் சொத்தை விற்பனை செய்வதாக இருந்தால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உண்மையிலேயே கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ஏனெனில் கிரயப்பத்திரத்தை வேறு யாரிடமாவது அடமானம் வைத்து பணம் வாங்கி இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவே இருக்கும்.

    பாதுகாக்க வேண்டும்

    பிறரிடம் அடமானம் வைத்தது பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது வில்லங்க சான்றிதழில் தெரியாது என்பதே சந்தேகத்துக்கு காரணமாக அமையும். அதனால் நகல் கிரயப்பத்திரம் வைத்திருக்கும் சொத்தை விற்பனை செய்வது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். சொத்து தங்களுடையது தான் எனத் தெரிந்தும் கிரையப்பத்திரம் தொலைத்து போனால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.

    கிரயப்பத்திரத்தில் இருக்கும் விவரங்கள் நினைவில் இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாத நிலைதான் ஏற்படக்கூடும். ஆகவே கிரயப்பத்திரத்தை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அத்துடன் கிரயப்பத்திர விவரங்களை முக்கியமான நோட்டுகளில் எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. அதுபற்றிய விவரங்களை வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்தி விடுவதும் பிற்காலத்தில் உபயோகமானதாக இருக்கும்.