Friday, 19 September 2014

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சி

By: ram On: 23:51
  • Share The Gag
  • மனைவியின் பிறந்தநாள் அன்று. கணவன் குடித்து விட்டு வருகிறான் வீட்டிற்கு வந்தவன்
    தன்னிலை அறியாமல் பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைக்கிறான்.

    நடுவீட்டில் வாந்தியும் எடுக்கிறான். மனைவிக்கு கோவம் பொறுக்கவில்லை.

    மறுநாள் காலை கணவன் எழுந்தபோது மனைவி வீட்டில் இல்லை, ஒரு துண்டு காகிதம் தலையணை பக்கத்தில் இருந்தது.

    அதில் மனைவி எழுதி இருந்தால்...

    ஏங்க உங்களுக்கு பிடிச்ச டிப்பன் செஞ்சி வச்சி இருக்கேன்.. மறக்காமே
    சாப்டுங்க.. நா கொஞ்சம் அவசரமா வெளிய போகணும்.. நேத்து உடைஞ்ச பொருள்
    எல்லாம் வாங்கணும்... சீக்கிரமா வந்துடுவேன்... லவ் யூ "

    இதை
    படித்த கணவனுக்கு அதிர்ச்சி. கோபாமாக சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்த
    மனைவி இவ்வளவு அன்பாக கடிதம் எழுதி வைத்து இருக்கிறாளே...

    மகனை அழைத்து கேட்டான் நேத்து என்ன நடந்தது என்று...

    மகன் : "அம்மா உன்ன பெட்ல படுக்கவச்சி.. உன் பேன்ட் பெல்ட் கலட்டுனாங்க...

    அப்போ நீ... ஏய் கையை எடு எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிடுச்சி போதைலயே சொன்ன பா...

    உண்மையான அன்பு புனிதமானது♥♥♥

    அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

    By: ram On: 22:17
  • Share The Gag
  • உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

    இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

    உடல்-மூளை தொடர்பு !

    நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை![/justify]

    அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

    உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

    இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

    படம்:கூகுள்

    நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

    யு.எஃப்.ஓ/UFOs

    யு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

    தேஜா வு (Deja vu)

    “தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

    இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

    பேய்/பிசாசு/ஆவி

    நம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

    மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

    பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

    ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

    நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

    மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

    பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

    டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

    அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!

    எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

    பாலிவுட் போனது தமிழன்னு நிரூபிக்கத்தான்..” – ஏ.ஆர்.முருகதாஸ்!!!

    By: ram On: 21:27
  • Share The Gag
  • கத்தி இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.. “ இந்தப்படம் எந்த அளவுக்கு வந்திருக்குன்னா, இதுக்கு பின்னாடி துப்பாக்கி படத்தை எடுத்திருந்தா நான் ஓ.பி. அடிச்சிருக்கேன்னு சொல்லுவீங்க.. அந்த அளவுக்கு துப்பாக்கியை விட அதிகமா உழைச்சிருக்கோம்.

    நான் இந்தில படம் பண்ணப்போனது நிச்சயமா பணத்துக்காக அல்ல.. இந்தில இருக்குறவங்களுக்கு தமிழ்நாட்டுல ஏதோ ஒரு கிராமத்துல இருந்து வந்த என்னாலயும் சாதிக்க முடியும்னு சொல்லி தமிழன் யாருக்கும் சளைச்சவன் இல்லன்னு நம்மை நிரூபிச்சு காட்டத்தான் அங்க போனேன்..


    இந்தப்படம் ஆரம்பிக்கிறப்ப பிரஷர் இருந்தது உண்மைதான்.. ஆனா சந்தோஷமான பிரஷர்.. ஒருபக்கம் எடிட்டிங், இன்னொரு பக்கம் டப்பிங், சவுன்ட் மிக்சிங்க்னு பரபரப்புல திடீர்னு போன வாரம் டெண்ஹ்சன் அதிகமானதுல மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.. ஆஸ்பத்திரில கண்ணு முஜிக்கிரவரைக்கும் விஜய் சார் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராம் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்ட அன்புக்கு நான் எப்படி நன்றிக்கடன் செலுத்துறதுன்னு தெரியல”

    நிச்சயம் தமிழர்களுக்கு நாங்க துரோகம் பண்ணலை.. துரோகம் பண்றதுக்காக படமும் எடுக்கலை.. நானும் தமிழன் தான்” என்று மனதில் இருந்தவற்றை நெகிழ்ச்சியுடன் கொட்டினார் முருகதாஸ்.

    A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?

    By: ram On: 20:41
  • Share The Gag
  • A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

    இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

    சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .

    வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

    அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .

    இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

    கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

    இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

    தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் - திரைவிமர்சனம்!

    By: ram On: 20:27
  • Share The Gag
  • தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டையில் வசிக்கும் பிரபல ரவுடி. இவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள்பலம் கொண்ட காசி என்ற தாதாவிடம் அடியாளாக வேலை பார்க்கிறான். காசி சொல்லும் வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்து வருகிறார் தமிழ்ச்செல்வன்.

    அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி நர்சிங் படித்து முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டையில் வசிக்கும் கலைச்செல்வி தோழியின் செல்போன் தொலைந்து போய்விடுகிறது. அந்த செல்போனை தமிழ்ச்செல்வனின் நண்பர்கள் எடுத்துவிடுகிறார்கள்.

    அப்போது தோழிக்கு போன் செய்கிறாள் கலைச்செல்வி. அந்த போன் தமிழ்ச்செல்வன் நண்பர்கள் வசம் இருப்பதால் தமிழ்ச்செல்வன் வாங்கி பேசுகிறான். அப்போது எதிர்முனையில் பேசும் கலைச்செல்வி அது தன்னுடைய தோழியின் செல்போன் என்றும், அதை அவளிடம் ஒப்படைக்குமாறும் அவனிடம் கெஞ்சுகிறாள்.

    அவளிடம் தோழியின் முகவரியை வாங்கிக்கொண்டு அவளது வீட்டுக்கு சென்று ஒப்படைக்கின்றனர். அப்போது நாயகி தோழியின் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, நாயகன் தன்னுடைய போனை கொடுத்து நாயகிக்கு போன் போடச் சொல்கிறான். அதன்மூலம் இருவரும் தங்கள் செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

    இதன்பின்னர் தமிழ்ச்செல்வனின் செல்போனுக்கு நாயகி போன் செய்து அவனை பற்றி விசாரிக்கிறாள். இவனும் அவளிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்கிறான். இதனால் மனவேதனையுடன் நாயகி அவனை மாற்ற முயற்சிக்கிறாள். இவனும் திருந்தி வாழ முடிவெடுக்கிறான். நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. தன்னுடைய பிறந்தநாள் அன்று அவனிடம் காதலை சொல்வது என முடிவெடுத்திருக்கிறாள் நாயகி.

    இந்நிலையில், காசிக்கு காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்யவேண்டும் என்ற வேலை வருகிறது. அந்த வேலையை தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைக்கிறார். தமிழ்ச்செல்வனோ அந்த வேலையை செய்ய தயங்குகிறான். காசியோ இந்த வேலையை செய்தால் பெரிய தொகை கிடைக்கும். அதை வைத்து செட்டிலாகிவிடலாம் என ஆசை வார்த்தைகூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.

    அந்த பெண்ணை தேடி காஞ்சிபுரத்துக்கு செல்கிறான் தமிழ்ச்செல்வன். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்செல்வன் அழைந்து கொண்டிருக்கும் வேளையில் காசிக்கு, தான் கொலை செய்யச் சொன்னது தமிழ்செல்வனுடைய காதலியான கலைச்செல்விதான் என்பது தெரிய வருகிறது. நண்பனுக்காக அந்த கொலையை செய்ய வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறான். பின்னர், தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல நினைக்கிறான். ஆனால், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவதால் அவனை தொடர்பு கொள்ள முடிவதில்லை.

    இறுதியில் தமிழ்ச்செல்வன் கலைச்செல்வியை கண்டுபிடித்து அவளை கொலை செய்தானா? அவள்தான் தன்னுடைய காதலி என்பதை தமிழ்ச்செல்வன் அறிந்தானா? கலைச்செல்வியை கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள். 

    தமிழ்ச்செல்வனாக ராஜேஷ் படம் முழுக்க ஒரே முகபாவணையில் நடித்து அனைவருக்கும் வெறுப்பை கொடுத்திருக்கிறார். இவரை ஒரு ரவுடியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவருடைய நண்பர்களாக வரும் மகேந்திரன், தில்சா, பாப் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    நாயகி கலை அனாமிகா, கருணையான முகத்துடன் அனைவரையும் கவர்கிறார். இறுதியில் இவர் கதறி அழும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அடியாளாக வரும் ராம்ஸ் மனிதநேயத்துடன் கூடிய வில்லனாக மனதை கவர்கிறார். மருத்துவமனை அதிபராக வரும் அசோக் பாண்டியன் வில்லத்தனத்தில் அழுத்தம் இல்லை.

    விறுவிறுப்பான கதை, ஆனால் அதை அழகான திரைக்கதையாக அமைக்க தவறியிருக்கிறார் இயக்குனர் பி.பாண்டியன். பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்தது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய காட்சிகளாக அமைத்தது என படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.

    குறிப்பாக, காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக கொடுக்கப்படும் போட்டோ செய்தித்தாளில் இருப்பதாக கொடுக்கப்படுகிறது. அந்த செய்திதாளில் அந்த பெண்ணின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதற்கான செய்தியோ, அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்போ அந்த செய்தித்தாளில் இடம்பெறவில்லை. இயக்குனர் எந்த செய்தித்தாளில் செய்தியில்லாமல் புகைப்படத்தை மட்டும் பார்த்தாரோ தெரியவில்லை. இதுபோல் லாஜிக் மீறலான நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன.

    ராஜதுரையின் ஒளிப்பதிவு தேசிய நெடுஞ்சாலையை அழகாக படமாக்கியிருக்கிறது. மற்ற இடங்களில் பெரிய அளவில் முயற்சி எடுக்காதது தெரிகிறது. சந்திரா பார்ஸ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பேசும்படி இல்லை.

    மொத்தத்தில் தமிழ்செல்வனும் கலைச்செல்வியும் மனதோடு சேரவில்லை.

    விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர்களையே உலகம் கண்டுகொள்கிறது...

    By: ram On: 19:14
  • Share The Gag
  • கடும் கோபத்துடன் காணப்பட்டார் காலையில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் ....
    ”என்ன?” வென்று கேட்டேன் ..

    நண்பர்கள் சிலர் அவரைக் கடுமையாக விமரிசித்து விட்டார்களாம்..அதனால்தான் இந்தக் கோபமாம்...!!!
    ...நான் அவரை அமைதிப்படுத்தினேன் ...நண்பர் கொந்தளிப்போடு கூறினார்...

    ”அமைதியாக இருப்பதற்கு நான் ஒன்றும் அன்னை தெரசா அல்ல..”....

    நான் சிரித்தபடி கூறினேன்...”அன்னை தெரசா சந்திக்காத விமரிசனங்களா ..அவமானங்களா..?”
    நண்பர் அமைதியாய் என்னை உற்றுப் பார்த்துக் கேட்டார்..”மதர் தெரசா பற்றி விமரிசனங்களா..?”
    “வீட்டுக்குப் போய் லிங்க் அனுப்புகிறேன் ..படிச்சுப் பாருங்க..” என்றேன்.....நண்பருக்கு அனுப்பிய லிங்கில் இருந்து சில விமரிசனங்கள் மட்டும் இங்கே....

    # தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

    # பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

    # அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.

    # அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்ந்தெடுத்தார் என்றால் ....இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ...ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்...

    # லிங்கைப் படித்து விட்டு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்...”என்னங்க ஜான்...இவ்வளவு விமரிசனங்களா..? ஒரு விமரிசனத்திற்கே நம் முகம் சுருங்கிப் போகிறதே...இவ்வளவு விமரிசனங்களால்தான் அன்னை தெரசாவின் முகத்தில் இவ்வளவு சுருக்கங்களா ..?”

    நான் படித்த ஒரு பதிவை நண்பருக்கு பதிலாகத் தந்தேன்....

    “அன்னை தெரசாவின் முகச்சுருக்கங்கள்,
    உலக அமைதியின் பிரசவ தழும்புகள்…”

    # ஆம்...விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் விட்டவர்களையே உலகம் கண்டுகொள்கிறது...!

    ரெட்டவாலு வாலாட்டவில்லை...திரைவிமர்சனம்..!

    By: ram On: 19:02
  • Share The Gag

  • சென்னையில் திருட்டு தொழில் செய்து வரும் நாயகன் அகிலை போலீஸ் தேடி வருகிறது. அவர்களுக்கு பயந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்கிறார்.

    அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் ஜோஸ் மல்லூரி திடீரென்று மயங்கி விழுகிறார். அப்போது அகில் அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். இதனால் அகில் மீது ஜோஸ் மல்லூரிக்கு நல்ல எண்ணம் வருகிறது.

    அகில் அனாதை என்று அறிந்துகொள்ளும் மல்லூரி தன்னுடைய ஊருக்கு அவனை அழைத்துச் செல்கிறார். போலீசில் இருந்து தப்பிக்க இதுதான் சரியான வழி என்று ஜோஸ் மல்லூரியுடன் செல்கிறார் அகில்.

    திருவண்ணாமலையில் தனது மனைவி கோவை சரளாவுடன் வாழும் மல்லூரிக்கு ஒரு பிரச்சினை. தனது மகளை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பி ராமையா மீது கோபத்துடன் இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. 

    இந்நிலையில், ஜோஸ் மல்லூரியின் வீட்டுக்கு வந்திருக்கும் அகிலை, தம்பிராமையாவின் மகளான நாயகி சரண்யா நாக், பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அகிலையே சுற்றி சுற்றி வருகிறார். இது அகிலுக்கு பிடிக்கவில்லை.

    ஒருகட்டத்தில் சரண்யாவை அகில் கண்டிக்கிறார். இதனால் கோபமடைந்த அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவளை காப்பாற்றும் அகில், அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜோஸ் மல்லூரிக்கு தெரிய வருகிறது. அதனால் அகிலை ஊரை விட்டே அனுப்புகிறார்.

    பேருந்தில் செல்லும் அகிலை தம்பி ராமையா பார்க்கிறார். ஜோஸ் மல்லூரிக்கு வெறுப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக அகிலை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அகில் தன்னுடைய மகளைத்தான் காதலிக்கிறார் என்பது தம்பி ராமையாவுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது.

    ஒருநாள் அகில் தம்பி ராமையா வீட்டில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அவரது வீட்டில் வந்து அவனை தேடுகிறது. அகில் அங்கு இல்லாததால் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பி ராமையாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தம்பி ராமையா தனக்கு அகிலும் தொடர்பில்லை என்று போலீசிடம் எடுத்துச் சொல்கிறார்.

    இதற்கிடையில், தான் ஒரு திருடனை காதலித்துவிட்டோம் என்று மிகுந்த மனவேதனையடைகிறாள் சரண்யா. அவளிடம் அகில் தான் எதற்காக திருடன் ஆனேன் என்பதை விளக்கிக் கூறுகிறார் அகில். இதைக் கேட்டதும் சமாதானமடைந்த சரண்யா, அவனுடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு இருவரும் சென்னைக்கு தப்பித்து செல்கிறார்கள்.

    சென்னைக்கு சென்ற அவர்களை போலீஸ் உதவியோடு தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் தம்பி ராமையா. இறுதியில் அவர்களை தேடிக் கண்டுபிடித்தாரா? அகிலும் சரண்யாவும் சந்தோஷமாக வாழ்ந்தார்களா? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

    அகில் வழக்கம்போல் அப்பாவி பையன் போலே இந்த படத்திலும் வருகிறார். சரண்யா நாக் உடன் காதல் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு காட்சிகளில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

    காதல் படத்தில் நாயகியின் தோழியாக நடித்த சரண்யா நாக் இந்த படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

    ஜோஸ் மல்லூரி, தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வரும் சோனா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவர் வரும் 15 நிமிட காட்சிகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

    பெற்றோர் பேச்சை மதிக்காமல் பருவ வயதில் தவறான முடிவுகள் எடுக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு ஒரு பாடமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் தேசிகா. படம் ஆரம்பம் முதலே சோகம் தொற்றிக்கொண்டதுபோல் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. பிற்பாதியும் அதேவேகத்தில் செல்வது ரசிக்க முடியவில்லை.

    படத்திற்கு மிகப்பெரிய பலம் வசனம்தான். கிளைமாக்சில் தம்பி ராமையா பேசும் வசனம் பெற்றோர்களை அழவிட்ட பிள்ளைகளுக்கு பெரிய படிப்பினையாக இருக்கும்.

    செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான். சிட்டி பாபுவின் கேமரா கண்கள் காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.

    மொத்தத்தில் ரெட்டவாலு வாலாட்டவில்லை.

    அரண்மனை - கவலைகள் மறந்து சந்தோஷமாக இருக்க நம்பி அரண்மனைக்குள் போகலாம்...திரைவிமர்சனம்!

    By: ram On: 17:23
  • Share The Gag
  • மனிதன் கடுவுள் இருப்பதை நம்புகிறானே? இல்லையோ? அதற்கு நேர் எதிர் சக்தி பேய் இருப்பதை மட்டும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வான். இதற்கு காரணம் பயம். இந்த பயம் என்ற ஒரு ஆயுதத்தை இயக்குனர் சுந்தர்.சி கையில் எடுத்து அதில் காமெடி என்ற மசாலைவை கலந்து ஜாலியாக கொடுத்திருக்கும் படம் தான் இந்த அரண்மனை.

    சந்திரமுகி, காஞ்சனா ஸ்டையில் கதை தான் என்றாலும் அதில் சுந்தர்.சி என்ன புதுமை செய்திருக்கிறார் என்பதே மேட்டர். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரசிகர்களை மிரட்டி சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது கதை.

    சுந்தர்.சி படம் என்றாலே கமர்ஷியல் பேக்கேஜ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், அந்த வகையில் இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவிற்கு ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, வினய், கோவை சரளா, மனோ பாலா இவர்களுக்கு எல்லாம் மேலாக நம் சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

    படத்தின் மிகப்பெரிய பலமே சந்தானம் தான், விட்ட இடத்தை பிடித்து விட்டார், அதற்கும் ஒரு பஞ்சாக படத்தில் இவன்லாம் "எனக்கு காம்ப்பட்டிசனே கிடையாது, ஏதோ கேப்ல வந்துட்டான்” போன்ற சூரிக்கு விடும் மறைமுக தாக்குதல் வசனங்கள் கைத்தட்டல் பறக்கிறது.

    குறிப்பாக மனோ பாலாவிடம் இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் கைத்தட்டல் மற்றும் விசில் சத்தம் அடங்கவே சில மணி நேரம் ஆகிறது. இதுவரை வெறும் அழகிகளாக மட்டும் பார்த்து வந்த ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்றோரை மிரட்டும் கெட்டப்பில் காட்டி நம்மையும் கதிகலங்க வைத்துள்ளார் இயக்குனர்.

    படத்தின் ஒரே பலவீனம் பாடல்கள் மட்டும் தான், அதையும் பின்னணி இசையில் மூலம் ஓவர் டேக் செய்து விடுகிறார் கார்த்திக்ராஜா.

    மொத்தத்தில் கவலைகள் மறந்து சந்தோஷமாக இருக்க நம்பி அரண்மனைக்குள் போகலாம்.

    சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூலில் இருந்து...

    By: ram On: 17:04
  • Share The Gag
  •  ஆணை விட பெண்ணுக்கு…

    பசி இரண்டு மடங்கு

    அறிவு நான்கு மடங்கு

    தைரியம் ஆறு மடங்கு

    காமம் எட்டு மடங்கு

    ஆள் - விதார்த் கலக்கும் அதிரடி திரைவிமர்சனம்!

    By: ram On: 16:44
  • Share The Gag
  • ஆமீர். சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல... அவருடைய காதலி.

    சிக்கிமில் தனியாக வசித்து வரும் ஆமீருக்கு எப்படியாவது தனது குடும்பத்தை சிக்கிமிற்கு கொண்டு வந்து செட்டிலாகி விடவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் பணியாற்றி வரும் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கிடையே சண்டை வருகிறது. முஸ்லீம் மாணவனான ரிஸ்வானை சிலர் அடித்து துன்புறுத்துகிறார்கள். அவன், தான் முஸ்லீம் என்பதால்தான் தன்னை சக மாணவர்கள் கேலியாகவும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள் என்று ஆமீரிடம் கூறுகிறான்.

    இதனால் அவன்மீது இரக்கம் காட்டும் ஆமீர், அவனை தன்னுடன் வந்து தங்குமாறு கூறுகிறார். ரிஸ்வானும் அவருடன் வந்து தங்குகிறான். இருவரும் ஆசிரியர்-மாணவன் பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.

    இதற்கிடையில் ஆமீர்-மீனாட்சியின் காதல் மீனாட்சியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. அவர்கள் ஆமீரை சென்னை வந்து தங்களை சந்திக்குமாறு அழைக்கின்றனர். அதன்படி, ஆமீர் சென்னை போக ஆயத்தமாகிறான். தன்னுடைய காதலி பரிசாக அளித்த கோட்-சூட்டுடன் சென்னை புறப்பட்டு வருகிறான்.

    சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கும் ஆமீருடைய செல்போன் சார்ஜ் இல்லாததால் தன்னை வரவேற்க வந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது, ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்து ஒரு செல்போனை இவரிடம் தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

    அப்போது, அந்த செல்போனுக்கு ஒரு நம்பர் தெரியாத போனில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்து பேசும் ஆமீருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியான செய்தி என்ன? அந்த செல்போனால் அவன் என்னென்ன அவதிப்பட்டான்? என்பதே மீதிக்கதை.

    ஆமீர் கதாபாத்திரத்தில் விதார்த், வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். இதுவரை விதார்த்தை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு கோர்ட்டும் சூட்டும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோபம், சோகம், அழுகை என இவரது முகத்தில் எல்லாமே சரளமாக வருகிறது.

    ஆனால், தனக்கு இடையூறாக வரும் நபர்களை இவர் துரத்தும் காட்சிகளில்தான் ஓடமுடியாமல் தவித்திருக்கிறார். கடைசி காட்சியில் இவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது.

    நாயகி ஹர்திகா ஷெட்டிக்கு படத்தில் சிறு வேடம்தான். ஒரு சில காட்சிகளே வருகிறார். அதனால் மனதில் நிற்கவில்லை. படத்தில் வில்லனாக வரும் விடியல் ராஜூவின் நடிப்புதான் பலே. உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிரட்டி பேசி, தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் நம்மை மிரட்டியிருக்கிறது.

    ஒரு சாதாரண மனிதனின் பலவீனத்தை புரிந்து வைத்துக்கொண்டு அவனை வைத்து தீவிரவாதிகள் தங்கள் காரியங்களை எப்படி சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ள இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு சபாஷ். படத்தின் முதல்பாதி சற்று தொய்வுதான். ஆனால், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. அதே விறுவிறுப்பை இறுதிவரை மாறாமல் கொடுத்திருப்பது இயக்குனரின் தனி சிறப்பு.

    உதய்குமார் ஒளிப்பதிவில் சிக்கிமின் அழகை அழகாக படமாக்கியிருப்பது சிறப்பு. மலையில் அடுக்குமாடி வீடுகளை தனது கேமராவால் அழகாக படமாக்கியிருக்கிறார். கதையை விறுவிறுப்பாக நகர்த்த இவரது கேமராவும் உதவியிருக்கிறது. ஜோஹன் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

    மொத்தத்தில் ‘ஆள்’ அழகுராஜா.

    தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் கமல்

    By: ram On: 07:56
  • Share The Gag
  • கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது' என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது.

     'தேவர் மகன், விருமாண்டி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான 'த்ரிஷ்யம்' ரீ - மேக்கில் உருவாகும், 'பாபநாசம்' படத்தில், மீண்டும் வேட்டி, சட்டையில் அசத்த காத்திருக்கிறார், கமல். இந்த படத்தின் படப்படிப்பு, நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சமீபத்தில் நடந்தது.

    கேரளாவின் இடுக்கியிலும் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக, இடுக்கியில், இயற்கை அழகு சூழ்ந்துள்ள இடத்தில், ஓர் அழகான வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க சில டிப்ஸ்:-

    By: ram On: 07:30
  • Share The Gag

  • சர்க்கரை நோய்

    1. காய்ச்சி ஆறின (அல்லது வெது வெதுப்பான) தண்ணி ஒரு சிட்டிகை நைஸாக பொடிச்ச பட்டைத்தூள் (சமையல்ல வாசனைக்குப் பயன்படுத்தறபட்டைதான்) போட்டுக் கலந்து வச்சு , காலையில் வெறும் வயித்தில் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கும்.


    2. வெந்தயத்தை ராத்திரியேஊறவச்சு, காலையில் அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து வெறும் வயித்தில் குடிச்சாலும் நல்லது.


    3. பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணி இவற்றில் ஏதாவது ஒரு துண்டு எடுத்து பச்சையாகவோ வேகவச்சோ அரைச்சு அந்தத் தண்ணியைக் காலையில் குடிக்கலாம். ஆனா, இது குடிச்சா, 2 மணி நேரத்துக்கு அப்புறம்தான் காபி,டீ குடிக்கணும். அது முடியாதவங்க, வாழைத் தண்டு அல்லது பூசணியை பச்சையா தயிர் பச்சடி பண்ணி சாப்பிடலாம்

    நான் எப்போதும் தமிழனை மறக்காத தமிழன்: கத்தி விழாவில் விஜய் அதிரடி

    By: ram On: 07:01
  • Share The Gag
  • துப்பாக்கி படத்தின் வெற்றிக்கூட்டணியான விஜய்-முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி.

    சமந்தா நாயகியாக நடித்த இப்படத்தின் இசைவெளியீடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரங்கேறியது.

    ஆர்யா, சிபிராஜ், தரணி, பேரரசு, விக்ரமன், ஏ.எல் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் உட்பட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இவ்விழாவில் பேசிய இளையதளபதி விஜய், நான் ஒருபோதும் தமிழனுக்கு எதிரான ஒரு காரியத்தை செய்யமாட்டேன்.

    நான் தியாகி என்று சொல்லமாட்டேன். ஆனால் துரோகி இல்லை என அதிரடியாக பேசியதோடு இவ்விழாவின் நாயகன் அனிருத்தையும் பாராட்டினார்.

    லைகா புரொடெக்சன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

    தொப்பையை குறைக்க இயற்கையான டிப்ஸ்

    By: ram On: 06:41
  • Share The Gag
  • தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

    இதனால் இதயம் பாதுகாப்பாக இருப்பதுடன், கண் மற்றும் தோல் நோய்களுக்கும் தேனை மருந்தாக பயன்படுத்தலாம்.
    காலை எழுந்தவுடன் சுடுநீரில் தேன் கலந்து குடித்தால், தொப்பையை குறைக்கலாம்.

    இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

    அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
    மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் தொப்பை குறையும்.