Thursday, 11 September 2014

தமிழ் சினிமாவில் விஜய்யை மிஞ்ச யாரும் இல்லை! சொல்கிறார் பிரபுதேவா

By: ram On: 23:33
  • Share The Gag
  • தன் நடனத்தின் மூலம் இந்திய மக்களையே ஆட்டம் போட வைத்தவர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனராக வாழ்க்கையை ஆரம்பித்து, பின் நடிகராகவும் வெற்றி பெற்று தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

    இதுவரை தமிழில் போக்கிரி, வில்லு, வெடி மற்றும் ஹிந்தியில் வாண்டட், ரவுடி ரத்தூர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் இவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு ‘தமிழ் சினிமாவில் எனக்கு விஜய்யை தான் மிகவும் பிடிக்கும், அவர் நடனத்தை அடித்துக்கொள்ள யாருமே இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

    ஆண்மையை உயிர்ப்பிக்கும் ‘ஜின்செங்’ ஆதாரப்பூர்வ நிரூபணம்!

    By: ram On: 22:46
  • Share The Gag
  • ஆண்மைக்குறைபாடு என்பது இன்றைக்கு அநேக இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. உறுப்பு எழுச்சியின்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாகி மருகிப் போவிடுகின்றனர் பல ஆண்கள். இந்த குறைபாடு உடையவர்களுக்கு கைகொடுக்கும் மூலிகையாக உள்ளது ‘ஜின்செங்’ எனப்படும் மூலிகை வேர். இந்த வேரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மாத்திரை ஆண்மைக்குறைபாடு, ஆண்குறி மலட்டுத் தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக இருப்பது சோதனை மூலம் தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக கொரியாவைச் சேர்ந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள யோன்சீ மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது ஆண் மலட்டுத் தன்மை உள்ள ஒரு 119 ஆண்கள் இதற்காகத் தேர்வு செயப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதிப்பேருக்கு கொரிய ஜின்செங் வேர் அடங்கிய மாத்திரைகள் ஒரு நாளைக்கு 4 கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு அவர்களது செக்ஸ் வாழ்க்கையில் மாற்றம் இருப்பது தெரியவந்தது.

    இதேபோல் மலட்டுத் தன்மை, ஆண்குறி உயிர்ப்பின்மை, செயலிழந்த ஆண்குறி ஆகிய குறைபாடுகள் உள்ள 100 பேர் தேர்வு செயப்பட்டு சிலவாரங்களுக்கு ஜின்செங் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. சில வாரங்களுக்கு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஆண்மையிழந்த பல ஆண்கள் அதன் பிறகு செக்ஸை உத்வேகத்துடன் அனுபவித்ததாக ஆவாளர்கள் கூறியுள்ளனர். ஜின்செங்கில் உள்ள ஜின்செனாசைட் அல்லது பேனாக்சாசைட் என்ற ஒரு மூலப்பொருளே ஆண்குறி உயிர்ப்படைய மூலக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    ஜின்செங் எடுத்துக் கொண்டால் பலன் இருக்கும் என்பது ஒரு வதந்தி வடிவமாகவே இருந்து வந்தது, ஆதாரமற்றுத்தான் அந்த ஜின்செங் பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதோ ஜின்செங் உட்கொண்டவர்களின் செக்ஸ் வாழ்க்கை மீண்டும் உயிர்ப்புடனும் உற்சாகமாகவும் மாறியுள்ளது ஆவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டதை அடுத்து , ஜின்செங் விற்பனை இனி சந்தையில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆய்வு மலடு பற்றிய சர்வதேச ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

    அஸ்வகந்தா உடல் சோர்வு நீங்க மற்றும் ஆண்மை பெருக

    By: ram On: 22:30
  • Share The Gag
  • இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் (alkaline) இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கென பயன்படுத்தப் படுகின்றன.

    பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

    மூலிகையின் பெயர் : அஸ்வகந்தா.

    தாவரப்பெயர் : WITHANIA SOMNIFERA DUNAL.

    தாவரக் குடும்பம் : SOLANACEAE.

    வேறு பெயர்கள் : அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

    வகைகள் : ஜவகர் அஸ்காந்த்-20

    பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

    வளரியல்பு : அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது.

    இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம்.

    விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

    ‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
    மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
    முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
    அசுவகந் திக்கென்றறி.’

    சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

    முறை : அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்தி தேவைப்படும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

    அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

    அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும்.

    இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில்

    சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும்.

    தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது. 

    மூக்கிரட்டை மருத்துவ குணங்கள்

    By: ram On: 22:03
  • Share The Gag
  • Boerhavia-diffusa, மூக்கிரட்டை, சாரணத்திசாலையோரங்களிலும், வாய்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் களைக்கொடி.. சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடம் தளைத்துவிடும்.

    இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், லத்தின் அமரிக்காவிலும் பரவியது. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

    மூலிகையின் பெயர் -: மூக்கிரட்டை.

    தாவரப்பெயர் :- BOERHAAVIA DIFFUSA.

    தாவரக்குடும்பம் ;- NYCTAGINACEAE..

    வேறு பெயர்கள்-மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை, சாரணத்தி

    பயன்தரும் பாகங்கள் :

    இலை, தண்டு, வேர் விதை

    வளரியல்பு :- மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீழ்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது.

    மருத்துவப்பயன்கள் :

    ஒரு பிடி  வேரும், 4 மிழகும் 100 மி.லி.விளக் கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டடு வடிகட்டி வைத்ததுக் கொண்டு
    6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
    அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவைத் தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

    ஒரு பிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.ல்லி. ஆகியவற்றை100 மி.லி. விளகெகெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல்  வருதல் குணமாகும்.

    ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணரல் தீரும்.

    வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.

    இலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

    கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்

    இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமிம் உண்டாகும்.
    இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு  கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.

    மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊரவைக்கவேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்கவைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும்.

    இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில்  முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும். 

    சர்ச்சைக்குள்ளான காந்தி கடிதங்கள்

    By: ram On: 20:50
  • Share The Gag
  • மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜெர்மனை சேர்ந்த யூதரான ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிட கலைஞருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
    இருவரும் கடிதங்கள் மூலம் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர்.

    இந்த 50 ஆண்டு காலம் இருவரும் எழுதிய கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் லண்டனை சேர்ந்த ‘சோத்பி’ ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட இருந்தது.

    ஆனால், இந்த ஏலம் நடைபெறுவதை தடுத்த இந்திய அரசு, சோத்பி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த மொத்த கடிதங்கள் மற்றும் ஆவணங்களை 1.28 மில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டது.

    இந்த கடிதங்கள் டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

    இந்த கடிதங்களை இந்திய அரசு வாங்கியிருப்பது குறித்த இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

    ‘தேசப்பிதாவான காந்தியடிகளின் கடிதங்கள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு நினைத்ததில் என்ன  தவறு, இதில் எதற்கு சர்ச்சை என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

    பாலியல் கவர்ச்சி

    மகாத்மா காந்தி-ஹெர்மன் கேலன்பேக் ஆகியவர்களுக்கு  இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக ‘ஜோசப் லெலிவெல்ட்’ என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய  எணூஞுச்ணா குணிதடூ- –ச்டச்ணாட்ச் எச்ணஞீடடி ச்ணஞீ ஏடிண் குணாணூதஞ்ஞ்டூஞு தீடிணாட ஐணஞீடிச்" என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    ‘இந்த காரணத்தால் மகாத்மா காந்தி-ஹெர்மன் கேலன்பேக் ஆகியவர்களுக்கு  இடையே நடந்த சர்ச்சைக்குரிய கடிதங்களை பொதுமக்கள் பார்வைக்கு வராமல் தடுக்கவே இந்த ஆவணங்களை இந்திய அரசு வாங்கியது’ என்று சில ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.


    காந்தியின் வாழ்க்கை திறந்த புத்தகம்
    ‘காந்தி தனது வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகம் என்று கூறியிருக்கிறார்.  அவரது சுயசரிதையான ‘சத்திய சோதனை’யில், அவர் பிரம்மச்சார்யம், தனது பாலியல் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

    அப்படி இருக்கும் போது பாலியல் கவர்ச்சி இருப்பதாக கூறப்படும் இந்த கடிதங்கள் குறித்த விவாதமோ, சர்ச்சையையோ காந்தியடிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாது’ என்று காந்தியவாதிகள் கூறுகின்றனர்.

    ‘இந்த ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கும், ஆராச்சியாளர்களின் பயன்பாட்டுக்கும் விடவேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

    மீண்டும் ராணவுடன் வெளிநாடு சென்றார் த்ரிஷா!

    By: ram On: 20:05
  • Share The Gag
  • த்ரிஷா-ராணா இடையேயான காதல் இதுநாள் வரை கிசுகிசுவாகவே இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக இதை உண்மையாக்கும் பொருட்டு அடிக்கடி இருவரும் வெளிநாட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.

    தற்போது ஒரு விருது விழாவிற்கு வெளிநாடு சென்ற ராணா-த்ரிஷா ஜோடி, அங்கு பல இடங்களில் ஒன்றாக சென்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கல்யாணத்திற்கு முன்னர் ஜோடியாக வாழலாமம் தப்பு இல்லையாம் .

    By: ram On: 19:08
  • Share The Gag
  • பொதுவாக லிவ்-இன் வாழ்க்கையை மேற்கொள்ளும் பழக்கமானது வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு வந்தது. இந்த வாழ்க்கை முறையை பின்பற்றினால், நிச்சயம் கடுமையான மன வேதனையை சந்திக்கக்கூடும்.

    இங்கு திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கையை வாழ்வதால் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். லிவ்-இன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சூப்பராக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்குள் இருந்த ஒருவித உற்சாகமானது குறைந்துவிடும்.

    இதனால் சில சமயங்களில் திருமணத்தின் போது இருக்க வேண்டிய உற்சாகம் கூட குறைந்துவிடும். இதுவரை இருவருக்குள் இல்லாத பணப்பிரச்சனைகள் லிவ்-இன் வாழ்க்கையின் போது ஏற்படக்கூடும். இதனை பலர் மறுத்தாலும், ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை சந்திக்கும் நிலை வரும்.

    திருமணத்திற்கு முன்னரே லிவ்-இன் வாழ்க்கையை வாழும் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பதன் மூலம், இருவருக்குள் அன்பானது அளவுக்கு அதிகமாகிவிடும். இப்படி ஒரு உறவில் அன்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால், நாளடைவில் சண்டைகள் அதிகரித்து, பிரிவுகள் கூட ஏற்படக்கூடும்.

    திருமணத்திற்கு முன் லிவ்-இன் வாழ்க்கையை வாழும் போது, துணையின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியும். அப்போது ஒருவேளை நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலே சந்தேகம் எழ ஆரம்பித்து, பின் அது பெரிய சண்டையாகி, திருமணத்திற்கு முன்னரே பிரியக்கூடும்.

    கமல் எப்படி இதற்கு சம்மதித்தார்?

    By: ram On: 18:13
  • Share The Gag
  • உலக நாயகன் தற்போது விஸ்வரூபம்-2, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் விஸ்வரூபம்-2 மற்றும் உத்தம வில்லனும் முடிவடைந்து ரிலிஸ்க்கு ரெடியாக உள்ளது.

    மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த த்ரிஷியம் படத்தின் ரீமேக் தான் இந்த பாபநாசம். இப்படத்தில் இவரின் பெயர் சுயம்புலிங்கம் .

    ஆனால் மலையாளத்தில் மோகன் லால் பெயர் ஜார்ஜ்குட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் கமல் இந்த படம் முழுவதும் பக்தி பழமாக வருவது போன்று தான் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    எப்படி எளிதில் இதற்கு கமல் சம்மதித்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.

    திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன் தெரியுமா ?

    By: ram On: 17:03
  • Share The Gag
  • காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…?
    தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.

    அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள்.

    உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.

    விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

    முருகன் மந்திரம் எழுதிய “ஃபேஸ்புக்” பாடல்..நான் மொக்க POSTu போட்டாலும், TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க! –

    By: ram On: 08:18
  • Share The Gag
  • ‘உ’ படத்தில் இடம்பெற்ற திக்கித் தெணறுது தேவதை பாடலின் வரிகளுக்காக பரவலான பாராட்டை பெற்ற பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்போது “திருட்டு விசிடி” படத்தில் எழுதியுள்ள ஃபேஸ்புக் பாடலின் வரிகளுக்காகவும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டாராம். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு பாட்டு எழுதவேண்டும் என்பது, எல்லா பாடலாசிரியர்களுக்குமே எப்போதும் விருப்பமான ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான சூழலுக்கு பாட்டு எழுத கிடைத்த வாய்ப்பை பற்றி முருகன் மந்திரம் விவரிக்கிறார்,

    “காதல்” சுகுமார் சார், இயக்குநராக அறிமுகமாகிற படம் “திருட்டு விசிடி”. படத்தின் பெயரைக்கேட்ட உடனே, “அட”, அப்டின்னு ஒரு ஆச்சர்யம் வந்தது. எனக்கு இந்த டைட்டிலை முதன்முதலா சொன்னப்போ டிசைனாவே காட்டினார் சுகுமார் சார். அப்பவே இந்தப்படம் கண்டிப்பா பேசப்படும்னு தோணிச்சு. அப்புறம் பாட்டுக்கான சூழலை சொன்னார். இந்தப்படத்துல இடம் பெறுகிறது ஒரு குத்துப்பாட்டு அது. ஒரு பிரமாதமான அழகி, அவளைச் சுத்திச் சுத்தி வருகிற ஆம்பளைங்க கூட்டத்தைப் பற்றியும், ஆம்பளைங்க மத்தியில அவளுக்கு இருக்கிற மாஸ் பற்றியும் கெத்தா பாடுறா. இதுதான் சூழல். ஜித்தின் ரோஷன்னு அறிமுக இசையமைப்பாளர், ட்ரெண்டியா ட்யூன் போட்டிருந்தார். இன்றைய தேதிக்கு சோசியல் வெப்சைட்ஸ் தான் பாப்புலர், அதனால் அதை வச்சே எழுதலாம்னு சொன்னார் சுகுமார் சார். அப்டித்தான் இந்த ஃபேஸ்புக் பாட்டு உருவாச்சு. பல்லவி

    என் FACEBOOK FACEBOOK பக்கத்திலே
    தினம் நட்பின் அழைப்புகள் குவியுதுங்க
    நான் LOG IN பண்ணும் நேரத்திலே
    அட TWITTER SERVER தெணறுதுங்க

    நான் மொக்க POSTu போட்டாலும்
    TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க
    எங்க ஆயா PHOTO போட்டாலும்
    ஒரு இலட்சம் பேரு லைக்-றாங்க

    நான் குட்மார்னிங் சொன்னாலே
    ஒரு கூட்டம் SUPER என்கிறதே
    என் FOLLOWERS LIST-டினிலே
    ஓபாமா தான்

    இப்படி பாட்டோட பல்லவி வரிகள் மட்டுமில்லாம, இரண்டு சரணங்களும் ரொம்ப பல்லவியைப்போலவே அழகா வந்திருக்கு. பாட்டை சுசித்ரா மேடம் பாடுனதுக்கு அப்புறம் பாட்டு இன்னும் ட்ரெண்டியா, கலர்ஃபுல்லா மாறிடுச்சு. இப்படி ஒரு பாடல் எழுத காரணமா இருந்த திருட்டு விசிடி படத்தின் இயக்குநர் காதல் சுகுமார் சார், கதாநாயன் மற்றும் தயாரிப்பாளர் பிரபா மற்றும் இசையமைப்பாளர் ஜித்தின் ரோஷனுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பெண்ணுக்கு ஏன் அது அடைவது தாமதமாகிறது..தெரியுமா ..?

    By: ram On: 07:35
  • Share The Gag
  • ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

    மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது.

    ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

    பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக(sexual act) மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து(ego)கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

    பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும். 

    ரத்தவாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ..?

    By: ram On: 07:11
  • Share The Gag
  • வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

    நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை:

    நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.

    அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொடுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான நிலையில் வையுங்கள். அதே நேரம் குளிரில் நடுங்கவும் வைத்துவிடாதீர்கள்.

    வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம். தண்ணீர் கொண்டு வாயினைக் கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவேனும் விழுங்கிவிடக் கூடாது.

    உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.

    நோயாளி மயக்கமடைந்துவிட்டால், உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக, ஒருபக்கமாக சாய்த்து படுக்க வையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.

    ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது....?

    By: ram On: 07:00
  • Share The Gag



  • பழனி – பஞ்சாமிர்தம்

    திருநெல்வேலி – அல்வா

    காரைக்குடி – செட்டிநாடு வீடு

    கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்

    பண்ருட்டி – பலாப்பழம்

    மணப்பாறை – முறுக்கு

    சேலம் – மாம்பழம்

    திண்டுக்கல் – பூட்டு

    திருப்பூர் – பனியன்

    மதுரை – குண்டு மல்லி

    சென்னை – மெரினா

    சிவகாசி – பட்டாசு

    நாமக்கல் – முட்டை

    தஞ்சாவூர் – தட்டு

    பேரையூர் – பருப்பு சாதம்

    நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்

    பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்

    மன்னார்குடி – மதில்

    திருவாரூர் – தேர்

    கும்பகோணம் – கோவில், வெற்றிலை

    திருச்சி – மலைக்கோட்டை

    மேட்டூர் – அணைகட்டு

    வேலாகண்ணி – மாத கோவில்

    சேலம் – இரும்பு

    கோவை – பஞ்சு

    திருவிடைமருதூர்- தெரு

    காஞ்சிபுரம் – பட்டு

    குற்றாலம் – அருவி

    கொல்லிமலை – தேன்

    கோட்டக்கல் – ஆயுர்வேதம்

    சிதம்பரம் – ரகசியம்

    நீலகிரி – தேயிலை

    ராஜபாளையம் – நாய்.

    முதுமலை – யானை

    கோவில் பட்டி – முறுக்கு

    பத்தமடை – பாய்

    ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா

    அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு

    திருவண்ணாமலை – தீபம்

    வளையப்பட்டி – தவில்

    திருச்செந்தூர் – வேல்

    கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை

    ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி

    இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்

    கரூர் – கோரைப்பாய்

    ஊத்துக்குளி – வெண்ணெய்.

    சென்னிமலை – பெட்சீட்.

    குமாரபாளையம் – லுங்கி.

    சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி

    ஈரோடு – மஞ்சள்.

    காங்கேயம் – காளை மாடு

    செஞ்சி – கோட்டை

    பாளையங்கோட்டை – சிறைச்சாலை

    உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்

    வந்தவாசி -கூரைபாய்

    கல்பாக்கம் - அனல் மின் நிலையம்

    சிவகாசி - காலண்டர்

    பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க....?

    By: ram On: 06:59
  • Share The Gag
  • சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.


    வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.

    தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.


    ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை
    இழக்க வேண்டியதில்லை.


    எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில்
    ஈடுபடாதீர்கள்.


    அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். செயலுக்குத் திட்டமிடுங்கள். அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.

    மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.


    மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள்.


    மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக்  கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.

    உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்....!

    By: ram On: 06:50
  • Share The Gag
  • நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் இ‌ந்த உலகமே ‌சிற‌ப்பு‌ப் பெறு‌கிறது. ‌ந‌ம்மா‌ல் தா‌ன் ந‌ம்மை‌ச் சு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் முத‌லி‌ல் நே‌சி‌க்க வே‌ண்டு‌ம்.


    எவ‌ர் ஒருவ‌ர் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் ‌சி‌க்‌கி எ‌ன்னடா வா‌ழ்‌க்கை எ‌ன்று புல‌ம்புவாரோ, அவரா‌ல் அவரை நே‌சி‌க்க இயலாது, நோ‌யி‌னா‌ல் ‌வாடுபவ‌ர்க‌ள், அவ‌ர்களை நொ‌ந்து கொ‌ள்ளவே செ‌ய்வா‌ர்க‌ள்.

    எனவே, எவரது மனமு‌ம், உடலு‌ம் ‌‌‌சீராக இரு‌க்‌கிறதோ அ‌ப்போதுதா‌ன் அவ‌ர் த‌ன்னை‌த் தானே நே‌சி‌க்க முடியு‌ம். அ‌வ்வாறு உடலையு‌ம், மனதையு‌ம் ‌சீராக வை‌‌த்து‌க் கொ‌ள்ள ஒரே ஒரு ‌விஷய‌‌த்தை செ‌ய்தா‌ல் போது‌ம் எ‌ன்றா‌ல் அது யோகா தா‌ன்.

    உ‌ங்களா‌ல் ம‌ற்றவ‌ர்களை ஆன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்றா‌ல், ஏ‌ன் உ‌‌ங்களை ‌நீ‌ங்களே ஆ‌ன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியாது? உ‌ங்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் மனது எத‌ற்காக ஏ‌ங்கு‌கிறது, உ‌ங்க‌ள் உட‌‌லி‌ன் த‌ன்மை எ‌த்தகையது, உ‌ங்க‌ளி‌ன் தேவை எ‌ன்ன, ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் த‌ற்போது செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பது எ‌ன்ன எ‌ன்பதை சுய ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

    சுய ப‌ரிசோதனை செ‌ய்வ‌தி‌ல் யோகா மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

    த‌ன்னுடைய எ‌ண்ண‌ம், செய‌ல், பே‌ச்சு ஆ‌கியவை உ‌ண்மையாகவு‌ம், ந‌ல்லபடியாகவு‌ம் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌‌ப்படி நா‌ம் இரு‌க்‌கிறோமா எ‌ன்பதை யோகா‌வி‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம்.

    நமது எ‌ண்ண‌த்தையு‌ம், செயலையு‌ம், பே‌ச்சையு‌ம் தூ‌ய்மையானதாக மா‌ற்றவு‌ம் யோகா உதவு‌கிறது. யோகா செ‌ய்யு‌ம் போது ஒருவரது உட‌லி‌ல் உ‌ள்ள ‌தீயவைக‌ள் மறை‌ந்து ந‌‌ன்மைக‌ள் ஏ‌ற்படு‌கிறது. சுறுசுறு‌ப்பு தோ‌ன்று‌கிறது. சுறுசுறு‌ப்பாக இரு‌க்கு‌ம் ம‌னித‌ன் எ‌ந்த செயலையு‌ம் எ‌ளிதாக செ‌ய்ய முடியு‌ம். தேவைய‌ற்ற நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபட‌த் தேவை‌யி‌ல்லை.

    தனது கா‌ரிய‌ங்களை ச‌ெ‌ய்து முடி‌த்து‌வி‌ட்டா‌ல் பொ‌ய்யோ, புர‌ட்டோ சொ‌ல்ல‌த் தேவை‌யி‌ல்லை. தெ‌ளிவான, உ‌ண்மையான பே‌ச்‌சினை பேச முடியு‌ம். த‌ன் ‌மீது எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லாத ‌நிலை‌யி‌ல், தவறான எ‌ண்ண‌ங்க‌ள் மன‌தி‌ல் தோ‌ன்றாது. எனவே, யோகா‌வி‌ன் மூல‌ம் நமது மனமு‌ம், உடலு‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌சீராக இரு‌க்கு‌ம்.

    ஆரோ‌க்‌கியமாகவு‌ம், ஆன‌ந்தமாகவு‌ம் வாழு‌ம் ம‌னித‌ன் த‌ன்னை‌த் தானே ‌நே‌சி‌க்காம‌ல் இரு‌க்க முடியுமா எ‌ன்ன?

    இல்லத் தரசிகளுக்கு....

    By: ram On: 06:47
  • Share The Gag
  • இல்லத் தரசிகளுக்கு....

    பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

    * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

     * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

     * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

     * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

     * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

      * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

      * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

      * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

      * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

      * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

      * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

       * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

     * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

      * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

      * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

      * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

      * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

      * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

      * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

      * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

      * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

      * ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

      * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

      * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

      * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

      * தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

      * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

      * உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

    எத்தனை பேர் அப்பாவிடம் மனம் விட்டு பேசுகிறோம்??

    By: ram On: 06:46
  • Share The Gag
  • நம்மில் எத்தனை பேர் 
     அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்??


    சரி,இது ரொம்ப
     கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர்
     அம்மாவிடம் பேசும்
    அளவிற்க்கு அப்பாவிடம்
     பேசுகிறோம்???.


    அட்லீஸ்ட் அதில்
     பாதி??
    ஹ்ம்ம்ம் ,மனம் இந்த
     கேள்வியை ஏற்க்க
     மறுக்கிறதா????


    நம் அம்மா கர்பிணியாக இருக்கும்
     பொழுது,அவள் எடுக்கும்
     வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா.


    அம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும்
     ஒவ்வொரு பருக்கும் தன்
     குழந்தை செழிப்பாக
     பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம்
     அம்மா கேட்ட அனைத்தும்
     வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர்
     நமக்காக வாழ ஆரம்பிக்கிரார்.


    7ஆம் மாதத்தில் தாய் வீடு செல்லும் நம்
     அம்மா ,அப்பா எண்ணும்
     ஒரு ஜீவனை மட்டும்
     பிரிந்து செல்கிறார்,ஆனால்
     அப்பா??, தன் மனைவி மட்டும் தன் வாரிசு என்று இரு உயிர்களை
     பிரிகிறார். அந்த பிரிவு தரும்
     இடைவெளியில்
     ஒவ்வொரு தந்தை அனுபவிக்கும்
     கல்யாணமான ப்ரம்மச்சாரி வாழ்க்கை
     மிகக்கொடுமையானது.


    அப்படி பட்ட
     அப்பாவை நாம் இன்னும்
     முழுவதுமாக
     உணரவில்லை என்பதுவே சத்தியமான.உண்மை.


    அம்மா, பிரசவ
     ஆஸ்ப்பத்திரியில்.டாக்டர்
    “சாரி சார்,ஆபரேஷன்
     பண்ணியாகனும்” ,என்று கூறும்
     பொழுது சுற்றி இருக்கும் சொந்தகள்
     பதற ,நம் அப்பா நமக்காக தன்
     மனைவியையே பணையம்
     வைகிறார்.. அம்மா ஐ.சி.யுவில்
     மறுஜென்மம் எடுக்க ,நம்
     அப்பா நம்மை நம்
     அம்மாவை எண்ணி மனதால்
     மறுஜென்மம் எடுக்கிறார்.


    நாம் பிறந்ததும், நம் தந்தை முதலில்
     நம் அம்மாவை தான்
     பார்க்கிறார். “தன்னை நம்பி
     வந்தவளை பணயம்
     வைத்ததிற்க்கு மனதால்
     மன்னிப்பு கேட்க்கிறார்” .நம் அம்மா
    “நம்ம பையன
     பாருங்க” ,என்று கூறும்பொழுது அவள்
     சுமை பாதியாக குறைகிறது.


    அதன் பின் நம்மை இந்த
     உலகத்திற்க்கு அடையாளாம்
     காட்டுவது நம் அப்பாவின்
     கடமை.அதை அவர் சரியாக
     செய்கிறார்.ஆனால் நாம்
     அவரை சரியாக
     புரிந்து கொள்கிரோமா???.


    பருவ வயது வந்ததும் நம் அப்பா சொல்லும் அட்வைஸ் நமக்கு பழிக்கிறது.
    சில நேரங்களில் எதிர்த்து பேசும் பிள்ளைகள்,
    அப்போது அப்பாவிற்கு ஏற்படும் வலி கொடுமையானது.


    தப்பா போனா அப்பா கேட்க தான் செய்வாங்க,
    உங்கள் அவப் பெயர்களையும் அவர் தானே சுமக்கிறார்,


    அப்பாவை நேசிக்க கற்றுக் கொள்
     தப்பானதை யோசிக்க கற்றுக்கொள்.

    தமிழ் எண்களில் ரூபாய் நோட்டு..!

    By: ram On: 06:45
  • Share The Gag



  • உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

     (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் .

     எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

    மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.