Sunday, 28 September 2014

முதுகையும் கவனிங்க....அழகு பெற சில குறிப்புகள்.

By: ram On: 23:06
  • Share The Gag
  • குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம்! இதோ உங்கள் முதுகு அழகு பெற சில குறிப்புகள்.

    குளிக்கும் போது முதுகு தேய்க்க உங்கள் கைகளை விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது.

    வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு நல்ல பொலிவை தரும்.

    முதுகை `ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும்.

    கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

    உலர்ந்த சருமத்திற்கு : இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் நான்கு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையால் முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும்.

    எண்ணெய் பசை சருமத்திற்கு : இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இதைக் கொண்டு முதுகை நன்றாக தேய்த்து, பின் கழுவவும்.

    இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.

    இந்த குறிப்புகளை பின்பற்றினால், அடுத்த முறை ஷாப்பிங் போகும் போது முதுகை மறைக்கும் உடைகளை தேர்ந்தெடுக்க அவசியமில்லை!

    விஜய்-சமந்தா நடித்த கத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத்!!!

    By: ram On: 22:23
  • Share The Gag
  • விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் செல்பிபுள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, மும்பை பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இப்பாடலில் விஜய்யும், சமந்தாவும் 100 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

    கத்தி படத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள படக்குழு, விஜய்யின் ‘செல்பிபுள்ள’ பாடலுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி படமாக்கியுள்ளனர். இந்தப் பாடலில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத் இருவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

    ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய ‘குகூள்...’ பாடலில் முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியிருந்தார்.

    உங்கள் பிறந்த தேதியை குடுப்பதன் மூலம் பிறந்தது முதல் தற்போதைய தினம் வரை நடந்த இணைய விஷயங்களை அறிய

    By: ram On: 21:37
  • Share The Gag
  • உங்கள் பிறந்த தேதியை குடுப்பதன் மூலம் பிறந்தது முதல் தற்போதைய தினம் வரை நடந்த இணைய விஷயங்களை அறிய

    நண்பர்களே! உங்களின் பிறந்த தேதியை கேட்டால் உங்களால் எளிதாக சொல்லி விட முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

    ஆனால் கீழ் உள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா?

    நீங்கள் பிறந்து எத்தனை நாட்கள், நொடிகள், உங்கள் இதயம் எத்தனை தடவை துடித்திருக்கும், எத்தனை தடவை மூச்சு விட்டிருப்பீர்கள் மற்றும் நீங்கள் பிறந்த நொடியில் இருந்து தற்போது வரை நடந்த விஷயங்கள், நீங்கள் இறந்த அதே நேரத்தில் எத்தனை பேர் பிறந்திருப்பார்கள், அவர்களில் எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் பிறந்த 1000மாவது நாளில் வரும் தேதி என்ன? போன்ற பல கேள்விகளுக்கு நொடியில் பதில் அளிக்ககூடிய ஒரு இணைய தளம்தான் “You’re getting old ” . இதன் மூலம் மேல கேட்கப்பட்ட மற்றும் மேலும் பல கேள்விகளுக்கு விடைகளை காண முடியும், இது சுவாரஸ்யமான இணையதளம், இதில் உங்கள் பிறந்த தேதியை மட்டும் குடுப்பதன் மூலம் அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

    இந்த இணைய தளத்திற்கு செல்ல கீழ் உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள் நண்பர்களே!

    http://you.regettingold.com/

    உங்களை பற்றி நீங்களும் தெரிந்து கொண்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள்.

    தமிழ் நாட்டில் எனக்கு இவர் மட்டும் தான் நண்பர்! எமி ஜாக்ஸன் ஓபன் டாக்

    By: ram On: 19:58
  • Share The Gag
  • கோலிவுட்டில் மதராசபட்டிணம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

    சமீபத்தில் இவரிடம் உங்களுக்கு தமிழ் நாட்டில் யார் நெருங்கிய நண்பர்கள் என்று கேட்டதற்கு ‘எனக்கு தமிழ் நாட்டில் நண்பர்கள் இல்லை. இங்கு நடிக்க மட்டுமே வருவதால் நடித்து முடித்த உடன் லண்டன் சென்று விடுகிறேன்.

    அங்குதான் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு ஆர்யா மட்டும் தான் நண்பர். மதராசபட்டினம் படத்தில் இருந்தே நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதுபற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

    பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

    By: ram On: 19:07
  • Share The Gag
  • நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

    இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

    சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

    உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

    அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

    பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

    பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

    அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

    யுவன் குறித்த சர்ச்சை தகவலுக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு!

    By: ram On: 18:51
  • Share The Gag
  • வெங்கட் பிரபு தற்போது சூர்யாவை வைத்து மாஸ் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் வழக்கம் போல் யுவன் தான்.

    சில தினங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா தன் பெயரை, படத்தின் டைட்டில் கார்டில் மாற்ற இருப்பதாக தெரிவித்தனர்.

    தற்போது டுவிட்டரில் ‘இது உண்மையல்ல’ என்று வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

    சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

    By: ram On: 18:35
  • Share The Gag
  • சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
    “மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
    தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
    காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
    “காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
    ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.

    அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
    ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
    * வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
    * அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
    * இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
    மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
    * பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
    * பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
    * சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
    * மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
    * அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
    * வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
    * சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
    இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

    அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர்களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
    டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
    அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல…

    பழங்களால் ஏற்படும் அலர்ஜிகள்!

    By: ram On: 12:59
  • Share The Gag
  • `பழங்கள் சாப்பிடலாமா?’ என்று ஒருவர் கேட்டால் `இதென்ன அபத்தமான கேள்வி?’ என்றுதான் பதில் வரும். பழம் என்றாலே நமக்கு உடனே தோன்றுவது ஆரோக்கியம்தான். அன்றாடம் பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் காக்கும். உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும். நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்துகள், தாது உப்புகள் ஆகியவற்றை அள்ளி வைத்திருக்கின்றன பழங்கள்.

    எல்லாம் சரி. ஆனால் பழங்கள் சில `பகீர்’களை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிமா?

    `பழ அலர்ஜி’ என்ற ஒன்று உண்டு. பிற ஒவ்வாமைகளை போல இதுவும் படுத்தி எடுத்துவிடும்.

    பழ அலர்ஜியா… அப்படி ஒன்று உண்டா என்கிறீர்களா?

    ஆமாம். சிலரது உடம்பு சிலவகை உணவுகளை ஏற்றுக்கொள்வது இல்லை. அவற்றில் பழங்களும் அடக்கம். சிலருக்கு பப்பாளி ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு திராட்சை ஒத்துக்கொள்ளாது, சிலருக்கு ஆப்பிளும் கூட!

    நமது உடம்பு, பழ அலர்ஜியை எந்த அளவு தாங்குகிறது என்பதை பொறுத்து `ரியாக்ஷன்கள்’ உடனேயோ, தாமதமாகவோ வெளிப்படலாம். ஆக, ஒரு பழம் உங்களுக்கு ஒவ்வாமைத் தன்மையைக் காட்டினால் அதை புறக்கணித்து விட்டு, ருசியாக இருக்கிறது, பிடித்திருக்கிறது என்று புகுந்து விளையாடி விடாதீர்கள். மற்ற ஒவ்வாமைகளை போலவே பழ ஒவ்வாமையும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

    காரணங்கள் என்ன?

    `பழ அலர்ஜி’க்கு மரபணு ரீதியாக, பராம்பரிய அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம்.

    வைரஸ் கிருமித் தொற்று போன்ற சில நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு உடம்பானது `பிரக்டோஸை’ ஏற்காமல் அதை வெளியே தள்ள பார்க்கும். பெரும்பாலான பழங்களில் `பிரக்டோஸ்’ அதிகளவில் உள்ளது. அதை உடம்பு ஏற்காதபோது பழத்தை ஏற்காதது மாதிரி தெரிகிறது.

    அடுத்தது, காலநிலை மாற்றம். காலநிலை மாறுபடும்போது சில பழங்களைச் சாப்பிடுவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பருவமழைக் காலத்தின்போது திராட்சை அல்லது `சிட்ரஸ்’ அளவு அதிகமுள்ள பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் சில நோயாளிகளுக்கு அறிவுரை கூறுவது இதனால்தான். சுற்றுபுறச் சூழலில் ஏற்கனவே சில நோய்த்தொற்றுகள் இருக்கும்போது, சில பழங்கள் அதை வேகபடுத்தக் கூடும்.

    சிலவேளைகளில் பழங்களில் இருந்து அதிகமாக வெளிபடும் வேதிபொருட்கள் செரிமான அமைப்பை அதிகமாகச் செயல்பட வைத்து, ஒவ்வாமை நிலைமைக்குத் தள்ளலாம்.

    அறிகுறிகள்

    பழ ஒவ்வாமையின் அறிகுறிகள் என்னென்ன? அரிபு, தொடை வீக்கம், வாந்தி, வாந்தி உணர்வு, வயிற்றில் சங்கடம், உதடு வீக்கம், உடம்பில் தடிப்பு, சிவத்தல், வயிற்று போக்கு, உச்சபட்சமாக ஆஸ்துமா, அதிலும் மோசமாக மரணம் கூட!

    என்ன செய்வது?

    ஒருவருக்கு அன்றாட உணவில் அவசியமானவை தான் பழங்கள். உங்களுக்கு ஒரு பழம் ஒவ்வாமையை ஏற்படுத்துவது உறுதியானால், அந்த பழத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பை நீங்கள் தகுந்த மாற்று உணவால் சரிபடுத்த முன்வர வேண்டும்.

    பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, அதை சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஒவ்வாமைத் தன்மைகள் வெகுவாகக் குறைகின்றன. எனவே பழத்தை `பேக்கிங்’ செய்து அல்லது பதப்படுத்திச் சாப்பிடுவது மோசமான யோசனை அல்ல. அதன் முலம், குறிபிட்ட பழத்தால் கிடைக்கும் சத்துகளை நீங்கள் இழக்க மாட்டீர்கள். ஆனால் அதை விட நல்லது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் பழத்தை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவது. அதற்கு பதிலாக நீங்கள் மாற்று உணவுகளை நாடலாம்.

    பழங்களின் தோலில் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகளும், விவசாய வேதிபொருட்களும் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பழத்தின் தோலை உரித்துவிட்டால் சில வேளைகளில் பிரச்சினை தீர்ந்துவிடும்.

    பழம்தானே என்று அலட்சியமாக இல்லாமல், அதிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்சினை இல்லை!

    ரஜினியின் பெயரை கெடுத்த படத்தை அவரே பார்க்கிறாரா?

    By: ram On: 12:35
  • Share The Gag
  • ரஜினியை பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை. அந்த அளவிற்கு கடல் கடந்தும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். ஆனால் சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த படத்தின் ட்ரைலர் ஒன்று ரஜினியின் மனதை மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது.

    படத்தில் அவரது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறி ரஜினியே வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தை ரஜினிக்கு போட்டுகாட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.

    இதை தொடர்ந்து மெயின் கோன் ரஜினிகாந்த் படத்தை ரஜினியும் அவரது மகள் சவுந்தர்யாவும் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மினி தியேட்டரில் பார்க்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை படத்தின் இயக்குனர் பைசல் சைஃப் செய்துள்ளார்.

    சர்க்கரை நோயாளிகள்-’40 சதவீத’ வித்தியாசம் அதிகமானால்…

    By: ram On: 12:00
  • Share The Gag
  • பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள், அறியாமையால், ‘எனக்கு சர்க்கரை அளவு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஒரு தடவை 180 சதவீதம் ஆகியது. உணவு, உடற் பயிற்சியால் சர்க்கரை 140 ஆகக் குறைத்து விட்டேன்’ என்பர். இவரது பரிசோதனை அறிக்கையைப் பார்த் தால், மூன்று மாதத்திற்கு முன் எடுத்த பரிசோதனையாக இருக்கும்.
    அதுவும், ‘ரேண்டமாக,’ சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து, பரிசோதனை செய்து இருப்பார். ஏஞஅ1ஞி பரிசோதனை, சர்க்கரையின் மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் பரிசோதனை; இதை செய்து இருக்க மாட்டார்கள்.
    ‘உங்கள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது’ என்று கூறினால், ‘வீட்டில் விசேஷம்; நிறைய இனிப்பு பலகாரங் கள் சாப்பிட்டேன். அதனால், தான் சுகர் அதிகமாக உள்ளது’ என்பர்.

    ஒருமுறை சர்க்கரை அளவு 120 முதல் 140 வந்து விட்டால், தனக்கு சர்க்கரை வியாதி குணமாகிவிட்டது என்று நினைத்து கொண்டு, மருந்துகளை சாப்பிட மாட் டார்கள். ஒரு நாளைக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 18 முறை ஏறி இறங்குவது, இவர்களுக்கு தெரியாது. தனால் தான் வெறும் வயிற்றில் சுகர் பரிசோதனை, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, சுகர் பரிசோதனை செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை, இந்த பரிசோதனை செய்யவேண்டும். கட்டாயம் மூன்று மாதம் ஒருமுறை, ஏஞஅ1ஞி பரிசோதனை செய்யவேண்டும்.
    சாப்பிடும் முன் வெறும் வயிற்று சர்க்கரை, 90 சதவீதம்; சாப்பிட்ட பிறகு 130 சதவீதத்திற்குள், அதாவது, 40 சதவீத வித்தியாசத்தில், கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் இருந்தால் நிச்சயம் இதய நோய் வரலாம்.
    சில சமயங்களில் பொருத்த மில்லாத மருந்துகளால் கூட, இந்த சர்க்கரையின் அளவு வித்தியாசம் 40க்கு மேல் போக வாய்ப்புள்ளது.

    இந்த வித்தியாசம் அதிகமாவதால், ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் சிறிய மற்றும் பெரிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, பக்கவாதம், உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி ஆகியவை ஏற்படும்.
    படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, உடை மாற்றுவது, உண்பது, நடப்பது, வேலைக்கு செல்வது இதுபோன்ற வேலைகள் பாதிக் கப்பட்டு, பயனற்று படுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    மருத்துவம் பார்க்க முடியாத நிலை. வீடு, நிலம், நகை விற்று குடும்பம் அல்லல்படுவதைப் பார்க்க சகிக்க முடியவில்லை. அதுவும், இரண்டாம் வகை இதய பாதிப்பான, ‘கார்டியோ மையோபதி’க்கு செலவு கொஞ்சம் நஞ்சமல்ல. இதனால், குடும்ப உறுப் பினர்கள் பொருளாதார சிதைவு, மனச்சிதைவுக்கு உட்படுகின்றனர். இதை நினைக்க பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது.

    இந்த நிலையைப் பயன்படுத்தி, பொருள் ஈட்ட, ஒரு மருத்துவ கும்பல் உள்ளது. மனித நேயத்தை மறந்து, ‘பணம் கொடு, ‘ட்ரீட்’ செய்கிறேன்’ என்ற நிலைக்கு, மருத்துவ சேவை வந்துவிட்டது.
    சர்க்கரை நோயால் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என்று சொல்வது ஏன்?
    இதுவும், ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ பாதிப்பு தான். சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக்குழாய் அடைபட்டு, ‘நெப்ரான்’ என்ற சிறுநீரகத்தின் உயிர்நாடியை பாதித்து விடுகிறது. இதை ஆங்கிலத்தில், ‘டயபடிக் நெப்ரோபதி’ என் றழைப்பர். எந்த நேரத்தில், யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே சொல்ல முடியாது. இந்த, ‘நெப்ரோபதி’யால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்பட்டு, ‘டயலிசிஸ்’ செய்ய வேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார்.
    இறுதியில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். சிறுநீரகத்தை உடல் ஏற்றுக் கொள்வதற் காக, ஊசி போட வேண்டும். ஏகப்பட்ட செலவாகும். நோயாளிக்கு நஷ்டம்; மருத்துவமனை, மருந்து கம்பெனிகளுக்கு லாபம்.
    கண்கள்?

    கண் ரெட்டினாவிலுள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண்ணொளி குறையும். பார்வை இழக்க நேரிடும்.
    40 வித்தியாசத்தை அதிகமாகாமல் தடுப்பது எப்படி?

    1. உணவிலுள்ள மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும். அரிசி, கோதுமை இவைகளில் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இதனால், தொந்தி விழுகிறது. 100 கிராம் அரிசி, 100 கிராம் புரதம், 100 கிராம் கீரை, 100 கிராம் காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த காய், பழங்கள் உட்கொண்டால் சுகர் உயராது.
    2. தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்யுங்கள்.
    3. இன்சுலின் சிகிச்சை முறையில் மூன்று வகைகள் உள்ளன. உங்களுக்கு எந்த வகை என்பதை டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைச் சரிவர பின்பற்றுங்கள்.
    சைவு உணவு: கலோரி, கொழுப்பு குறைவு. கொலஸ்டிரால் குறைவு அல்லது இல்லை. புரதச்சத்து குறைவு. இரும்பு, தாதுச்சத்து அதிகம். எண்ணெய், தேங்காய் குறைவாக சேர்த்துச் செய்யப்படுகிறது.
    அசைவ உணவு: கலோரி, கொழுப்பு அதிகம். கெட்ட கொலஸ்டிரால் அதிகம். முதல் தர புரதம் அதிகம்; இரும்பு, தாதுச்சத்து குறைவு; எண் ணெய் தேங்காய், மசாலா அதிகம் சேர்க்கப்படுகிறது.
    உடல் எடை அதிகமானால், சர்க்கரை நோயை வரவழைக்கும். இதற்கு மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி, கோதுமை, இறைச்சி தான் காரணம்.
    மூன்று வேளை அரிசி சாப்பிடுவது ஆபத்து. இதனால் தொப்பை, இடுப்பு அளவு அதிகமாகிறது. மேலும் கொலஸ்டிரால் அதிகமுள்ள பாலாடை வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மாட்டுக் கறி சாப்பிடக்கூடாது.
    அசைவப் பிரியர்களே! நீங்கள் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி என்று பாருங்கள்.

    (தோராயமான அளவு)
    100கிராம் மீன் – 210 கலோரி+
    100கிராம் கோழி – 200 கலோரி
    100கி ஆட்டுக்கறி – 410-420 கலோரி
    100கி மாட்டுக்கறி – 430-450 கலோரி
    100கி பன்றிக்கறி – 600 கலோரி. அதற்கு மேல் உறுப்புகளில் அதிகமான கலோரி
    100கி மூளை – 650 கலோரி
    100கி சிறுநீரகம் – 600 கலோரி
    100கி கல்லீரல் – 650 கலோரி
    100கி இதயம் – 400 கலோரி
    100கி மண்ணீரல் – 400 கலோரி

    இவைகளை சமைக்க வறுக்க உபயோகிக்கும் எண்ணெயை சேர்ந்தால் எவ்வளவு கலோரி கிடைக்கும், ஏன் எடை கூடாது, உடல் உப்பாது?
    நாம் சாப்பிடுவதற்காக உயிர் வாழ வேண்டாம்; உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்.
    மருத்துவ கம்பெனி நடத்தும் விருந்துகளில், டாக்டர்கள், ‘பபே’யில் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடுவது, கண்கொள்ளாக் காட்சி!
    சீரான உடற்பயிற்சி, தேவையான உணவு, மருந்துகள், டாக்டர்களின் ஆலோசனை, சர்க்கரை நோய்களின் விளைவுகளை தவிர்க்கும்.

    ஷங்கரின் ஜாக்கிசான் பிளான்

    By: ram On: 11:36
  • Share The Gag
  • நடந்து முடிந்த 'ஐ' படத்தின் இசை வெளியீட்டினைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அதிரடிகள் நெட்டில் ஹிட் அடிக்கத் தொடங்கிவிட்டன. அர்னால்டு  ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

    பல்வேறு சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறினாலும் இசை வெளியீடும், படத்தின் புரமோஷனும் அதிரிபுதிரியாக ரீச் ஆனதில் மகிழ்ச்சியில் இருக்கிறது ‘ஐ’ படத்தின் தயாரிப்பு தரப்பு. இதனால் படத்தின் தெலுங்குப் பதிப்பின் பாடல்களை ஜாக்கிசானை வைத்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

    ஏற்கெனவே ‘ஐ’ படத்தின் டீஸர் திருட்டுத்தனமாக நெட்டில் வெளியானது. இசை வெளியீடு முடிந்த அடுத்தநாளே ‘ஐ’ படத்தின் கதையும் நெட்டில் பரவியது. அந்தக் கதையையும், படத்தின் டீஸரையும் ஒப்பிட்டு ‘ஐ’ படம் 1939-ல் ஹாலிவுட்டில் வெளியான ‘தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்ரி டேம்’ படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் 1986-ல் வெளியான ‘தி ஃபிளை’ படத்தின் தழுவல் என்றும் சமூக வலைதளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

    விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தின் டீஸரில் இருக்கும் பெரும்பாலான காட்சிகள் மேற்சொன்ன இரண்டு படங்களிலும் இருப்பதுதான் சந்தேகங்களுக்கான காரணம். ஆனால், ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் இது ஒரிஜினல் படைப்புதான் என்றும் உலக அளவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்யப்போகும் ஒரு படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

    இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘ஐ’ படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.  ஒரிஜினல் படைப்பாக தலை நிமிரச் செய்யுமா? காப்பி அடிக்கப்பட்ட படமாக தலைகுனிய வைக்குமா? என்பது தீபாவளிக்குத் தெரிந்துவிடும்.

    தவறுகளின் விலை… ஆயுளில் 12 ஆண்டுகள் குறையும்?

    By: ram On: 10:49
  • Share The Gag
  • வளரும் இளைய தலைமுறையினரிடம் காணப்படும் தவறுகளில் மிக முக்கியமான 4 தவறுகள் எது தெரியுமா?

    1) புகைப்பிடித்தல், 2) மது அருந்துதல், 3) உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்,
    4) தவறான உணவுப்பழக்கம்.

    இந்த 4 தவறுகளுக்கும் அவர்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?

    தங்கள் ஆயுளில் 12 ஆண்டுகள்.

    என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா? இங்கிலாந்தில் நடந்த ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. மேலே சொன்ன 4 தவறுகளின் முலமாக மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள், அவனது வாழ்வில் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

    இந்த ஆய்வின் முடிவில் வெளியான தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

    அதாவது, இந்த 4 தவறுகளின் காரணமாக ஒருவரின் உடல் அதிவேகமாக முப்பு அடைகிறது. உதாரணமாக ஒரு இளைஞர் இந்த தவறுகளை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் செய்து வரும்போது அவர் தனது வயதைவிட அதிக வயதானபோல காட்சி அளிப்பார். அந்த அளவுக்கு அவரது உடல் தளர்வடைந்து விடும். மேலும் அவரது உடல் உறுப்புகள் பலவீனம் அடைந்து அவரிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிககுறைவாகவே இருக்கும். இதனால் அவர் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவதோடு தனது முடிவையும் முன்னதாகவே தேடிக்கொள்கிறார், என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆஹா வட போச்சே! மெட்ராஸ் ஹிட்! நடிகர் ஜீவா ஷாக்!

    By: ram On: 10:29
  • Share The Gag
  • யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது. இப்படி கை நழுவிப்போன படங்களை எண்ணி கன்னத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலையை பலருக்கும் உருவாக்கி பதைபதைக்க வைத்திருக்கிறது விதி.

    அப்படிதான் மெட்ராஸ் படத்திலும் ஜீவா நடித்திருக்க வேண்டியது! இந்த படத்தின் கதையை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் கூறியிருந்தார் இயக்குனர் ரஞ்சித். நன்றாக இருப்பதாக கூறிய அவர், ஜீவாவிடம் கதை சொல்ல அனுப்பினாராம். கதையை கேட்ட ஜீவா உதட்டை பிதுக்கியதுடன், இந்த கதையில் எனக்கு என்ன ஹோப் இருக்கு என்று கூறி அனுப்பிவிட்டாராம். அதோடு போயிருந்தால் பிரச்சனையேயில்லை.

    அவங்கிட்டயே ஒரு ஹீரோ இருக்கார். (கார்த்தி) அவரை வச்சு இந்த படத்தை எடுக்க வேண்டியதுதானே? கதையில் அவருக்கு ஹோப் இல்லேங்கறதுக்காகதான் என்னை மாதிரி ஹீரோவை தேடி அலையுறாங்க போலிருக்கு என்று நக்கல் அடித்தாராம். இந்த தகவல் காதில் விழுந்த பிறகுதான் அதுவும் நல்லதுதான் என்ற முடிவுக்கே வந்தாராம் ஞானவேல்ராஜா. ஸ்கிரிப்ட் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டது. நான் நடிக்கிறேன். இந்த ஸ்கிரிப்ட் மீது எனக்கு நம்பிக்கையிருக்கு என்றாராம் கார்த்தி.

    பிளாஷ்பேக் ஓவர். இன்று மெட்ராஸ் படத்தின் நிலைமை என்ன? திரும்புகிற இடமெல்லாம் கைதட்டல்தான். இந்த வாரம் வெளியான ஜீவாவும் சரி, மெட்ராசும் சரி. ரசனைக்குரிய படம் என்ற தீர்ப்பை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    ஐயய்யோ… வட போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஜீவா! தலைக்கு மேல மழை பெய்தாலும் தார் பாயை போட்டு மூடிக்கொண்டால் இப்படிதான்!

    சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல் டிமென்ஷியா நோயை தோற்றுவிக்கும்

    By: ram On: 10:18
  • Share The Gag
  • இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

    பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும்.

    இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள். அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள்.

    இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம் ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல் மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். தற்போது இத்தகைய உணவுகள், குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

    இந்த மருத்துவ விஞ்ஞானிகளின் எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.