Sunday, 19 October 2014

மர்மமான முரையில் மரணம் அடைந்த அமெரிக்க நடிகை

By: ram On: 23:55
  • Share The Gag
  •  ‘புரோசன் ரிவர்’, ‘டிரீம் கீப்பர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மிஸ்டி அப்ஹாம், கலிபோர்னியாவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் பிணத்தை போலீசார் கண்டெடுத்தனர். இவர் யார் என தெரியவில்லை. பிணத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் எனவே இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கத்தியின் வேட்டை ஆரம்பித்துவிட்டது!

    By: ram On: 16:44
  • Share The Gag
  • கத்தி படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் கூட இன்னும் வரவில்லை, ஆனால் படத்தின் புக்கிங் ஆரம்பித்துவிட்டது.

    தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் ரிசர்வேஷன் என்று விளம்பரம் கொடுத்தவுடன், ரசிகர்கள் அனைத்து தியேட்டர்களையும் தேனீயாய் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.

    மதுரை, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள பல திரையரங்குகளில் புக்கிங் ஓபன் ஆன சில நிமிடங்களிலேயே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    உங்கள் தொப்பையை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

    By: ram On: 16:19
  • Share The Gag
  • 25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.

    இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

    உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

    இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

    மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

    கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

    எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர் குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

    வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள் மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள் இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

    குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள் சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள் அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

    குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள் இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

    கொள்ளை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

    கொள்ளு சூப்
    தேவையான பொருள்கள்:
    கொள்ளு – 4 ஸ்பூன்
    பூண்டு – 5 பல்
    தக்காளி – 2
    மிளகு – 1 ஸ்பூன்
    சீரகம் – 1 ஸ்பூன்
    துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
    பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை – சிறிது
    கறிவேப்பிலை – சிறிது

    தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
    கடுகு – சிறிது
    வரமிளகாய் – 2

    செய்முறை:

    மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

    கொள்ளு சூப் 2
    தேவையான பொருட்கள் :
    கொள்ளு 1 கப்
    தக்காளி 1 / 2
    சின்ன கத்தரிக்காய் 1
    பச்சை மிளகாய் 4
    தனியா 1 டீஸ்பூன்
    சீரகம் 1 டீஸ்பூன்
    கறிவேப்பில்லை சிறிது
    புளி சிறிது
    மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
    எண்ணெய் 1 ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

    கொள்ளு ரசம்
    கொள்ளு – 1 கப்
    வரமிளகாய் – 3
    மல்லி – 1 டீஸ்பூன்
    சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை
    பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
    பூண்டு – 3 பல் நறுக்கியது
    எண்ணெய்
    கடுகு

    செய்முறை:

    கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
    அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

    கொள்ளு மசியல்
    கொள்ளு – 200 கிராம்
    சீரகம் – 1 டீஸ்பூன்
    தனியா – 1 டீஸ்பூன்
    தக்காளி – 2
    காய்ந்த மிளகாய் – 4
    பூண்டு – 5 பல்
    சிறிய வெங்காயம் – 10
    புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
    கறிவேப்பிலை – 10 இலைகள்
    கொத்தமல்லி இலை – சிறிது
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

    கொள்ளு குழம்பு
    கொள்ளு – 1 கப்
    வரமிளகாய் – 3
    மல்லி – 1 டீஸ்பூன்
    சீரகம் – 1/2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை
    பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
    பூண்டு – 3 பல் நறுக்கியது
    எண்ணெய்
    கடுகு

    செய்முறை:

    கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

    பொடியாக்கி வைத்துக்கொள்ள:

    துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

    லிங்கா படப்பிடிப்பில் விபத்து! அதிர்ச்சியில் திரையுலகம்

    By: ram On: 16:06
  • Share The Gag
  • லிங்கா படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பிரமாண்ட செட் ஒன்றில் ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த செட் 5 மாடி உயரம் கொண்டது. இதனை சுதர்சன் என்ற ஊழியர் மேற்பார்வை செய்து வந்தார். பாடல் காட்சி எடுக்க செட் தயாராக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வந்தவர் தவறி 5 மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சில மாதங்கள் நடக்க முடியாது மற்றபடி உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர்.

    மீண்டும் அஜித்துடன் இணையும் சந்தானம்!

    By: ram On: 09:12
  • Share The Gag
  • சந்தானம் தற்போது ஹீரோ மெட்டிரியலுக்கு வந்து விட்டார். அதனால் இனிமேல் காமெடியனாக தான் நடிக்க மாட்டார் என கூறிவந்த நிலையில், லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக காமெடியனாக நடிக்கிறார்.

    தற்போது மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கும் இவர், அடுத்து ’வீரம்’ சிவா அஜித்துடன் இணையும் படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தில் இவர் ஹீரோவுடன் படம் முழுவதும் வருவது போல் வலுவான கதாபாத்திரமாம்.

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

    By: ram On: 09:03
  • Share The Gag
  • இன்று தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டு மெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உண வுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

    அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.

    குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

    முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும் ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

    மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

    உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

    காலையில் எழுந்ததும் தேன்- வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும்.

    மூலிகை டீ- டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

    முட்டை- தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

    பால்- பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது

    தர்பூசணி- காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும் எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

    ஓட்ஸ்- தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    காபி- காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும் மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

    சிட்ரஸ் பழங்கள்- சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும் மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

    கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

    வாழைப்பழம்- காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும் அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

    ஆளி விதை- பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம் ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

    தயிர்- நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள் அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும்.

    கோதுமை முளை- முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும் அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும் ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

    பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும் மேலும் இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

    பெர்ரிப் பழங்கள்- பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும் மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

    வேர்க்கடலை வெண்ணெய்- வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளுவது மட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும் எனவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    தண்ணீர்- காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும் அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும் எனவே இவறில் ஒன்றை சாப்பிட்டால், மிகவும் நல்லது.

    விஜய்யை சீண்டி பார்த்த சிம்பு!

    By: ram On: 01:25
  • Share The Gag
  • சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அப்படி பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்.

    இவர் சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழக்கு பேட்டியளிக்கையில் நிறைய உதவி செய்கிறீர்கள், ஆனால் வெளியே சொல்லி கொள்வதே இல்லை ஏன்? என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் ‘எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது.’ என்று பதில் அளித்துள்ளார்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முயற்சியில் சமீப காலமாக தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க

    By: ram On: 01:09
  • Share The Gag
  • காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

    ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

    குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

    எலுமிச்சை ஜூஸ்

    எலுமிச்சை ஜூஸ் போட்ட குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

    இஞ்சி ஜூஸ்

    இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

    கேரட் ஜூஸ்

    கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

    பூண்டு ஜூஸ்

    இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

    குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

    தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

    ஆரஞ்சு ஜூஸ்

    ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

    கற்றாழை ஜூஸ்

    கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

    தக்காளி ஜூஸ்

    தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    புதினா ஜூஸ்

    இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

    அன்னாசிப் பழ ஜூஸ்

    அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

    கிவி ஜூஸ்

    கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

    வாழைப்பழ ஜூஸ்

    வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

    தர்பூசணி ஜூஸ்

    தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    ஆப்ரிக்காட் ஜூஸ்

    தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

    மிளகு கசாயம்

    மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்

    கத்தியை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்?

    By: ram On: 00:09
  • Share The Gag
  • கத்தி படம் உலகம் முழுவது 1500 திரையரங்குகளுக்கு மேல் வரவிருக்கிறது. ஆனால், இப்படத்தை வெளியிட்டால் தங்கள் திரையரங்கிற்கு ஏதும் பிரச்சனை வருமா? என்று எண்ணி சில தியேட்டர்கள் தற்போது பின் வாங்குகின்றன.

    மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கத்தி படத்தை வரும் 22-ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல்முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

    இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர்.

    நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.