Tuesday, 29 July 2014

ஸ்ருதிஹாசனை கவர்ந்த காமசூத்ரா!

By: ram On: 23:38
  • Share The Gag
  •  இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். இந்நிலையில் ஹிந்தியில் சொல்லவா வேண்டும், தன் அளவுக்கடந்த கவர்ச்சியால் பெரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    தற்போது இவர் ஒரு ஆங்கில படம் குறித்து கருத்து சொல்லியுள்ளார், இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான 'பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே' என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது.

    இப்படத்தில் ட்ரைலரை பார்த்த இவர் ‘இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.


    இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். இந்நிலையில் ஹிந்தியில் சொல்லவா வேண்டும், தன் அளவுக்கடந்த கவர்ச்சியால் பெரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    தற்போது இவர் ஒரு ஆங்கில படம் குறித்து கருத்து சொல்லியுள்ளார், இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான 'பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே' என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது.
    இப்படத்தில் ட்ரைலரை பார்த்த இவர் ‘இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106760/#sthash.m9B4z7hZ.dpuf

    அஜித் - த்ரிஷாவின் பிரம்மாண்ட திருமணக் காட்சி!

    By: ram On: 22:54
  • Share The Gag

  • கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமான 'தல 55' படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவாக நடந்து வரும் நிலையில் தற்போது அஜித், த்ரிஷா நடிக்கும்  ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அஜித், த்ரிஷா கணவன் மனைவியாக நடித்து வரும் இந்த காட்சிகளில் அஜித் யூத் லுக்கில் படு ஸ்டைலாக இருப்பார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ஹாரிஸ்  ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரின் மகளாக பிரபல மலையாள குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்து வருகிறார்.

    அனைவரது எதிர்பார்ப்புக்கும் உரிய படத்தின் இந்த ஃபிளாஷ் பேக் காட்சியில் அஜித் -  த்ரிஷாவின் பிரம்மாண்ட கல்யாணக் காட்சி இடம்பெறுகிறது.

    இதற்கு முன்பு 'ஜி', 'கிரீடம்' ,'மங்காத்தா' என மூன்று படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் கூட இருவருக்கும் திருமணம் புரியும் காட்சிகள் இல்லை என்பதும், இதுதான் முதல் முறை என்பதும் மேலும் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

    மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World அவசியம் படிக்கவும்..!

    By: ram On: 21:44
  • Share The Gag
  •  எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


    மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


    சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


    ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


    நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


    பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


    காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


    நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


    எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


    இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.

    எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?

    By: ram On: 20:00
  • Share The Gag



  • எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?


    தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.


    மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


    வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,


     ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.


    கெட்ட கனவு வருகிறதா:


    சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.


    ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்

    வைணதேயம் விருகோதரம் சயனே,

    யஸ் ஸ்மரேன் நித்யம்

    துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.



    தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது

    ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்!

    By: ram On: 18:13
  • Share The Gag
  • • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி "நைட்டியில" அலையறது ஏன்னு புரியல?



    • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)


    • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி "10 வருடம்" ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!


    • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன "மளிகை லிஸ்டை", அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது... ஏங்க?


    • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், "அதே தோழியிடம்" 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது... ஏங்க?


    • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)


    • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது "பிரேக் போடுங்க", "அப்டி வளைக்காதீங்க", "பார்த்து ஓட்டுங்க"ன்னு சொல்றது... ஏங்க?


    • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, "தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில" போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே... ஏங்க?

    ’தனுஷ்- சௌந்தர்யா’ முற்றிப்போன குடும்பச்சண்டை!

    By: ram On: 17:47
  • Share The Gag

  • தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் இந்த வருடத்தின் மாபெரும் வசூலை தந்தாலும், இவர்கள் குடும்பத்தில் என்னமோ பிரச்சனை பத்திக்கொண்டு எறிகிறது.

    இப்படத்தில் வில்லனின் பெயர் அஸ்வின் என்று குறிப்பிட்டுயிருப்பார்கள், மேலும் இது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் கணவன் பெயர். கொஞ்ச நாட்களாகவே இவர்களுக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்து வருகிறது.

    அதை இப்படியா படத்தில் போட்டுக்காட்டுவது என்று தன் அக்காவிடம் அழுது புலம்புகிறாராம் சௌந்தர்யா, மேலும் ‘ஏண்டா எப்ப பார்த்தாலும் அப்பா பெயரையே சொல்லிகிட்டு இருக்கிங்க’ என்று கூட சில சீண்டல் வசனங்கள் படத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

    லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்!

    By: ram On: 11:47
  • Share The Gag
  •  natural-organic-lipstick

    பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்.

    * லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்

    * நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

     * லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.

     * தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

     * எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.

    இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்!

    By: ram On: 09:42
  • Share The Gag
  • 1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
     எல்லை மீறி தகாத வார்த்தைகளை
     வாய் தவறி கூட சொல்லமாட்டார்.

    2) உங்களின் மோசமானச்
     சமையலையும் சிரித்துக்
     கொண்டே சாப்பிடுவார்.

    3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார்.ஒவ்வொர சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

    4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
     மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க
     முயற்சிப்பார்.

    5) உங்கள் மனதை ஆழமாய்
     நேசிப்பதால் ,எத்தனை அழகான பெண்கள்
     முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு
     அழகாய் தெரிவீர்கள்.

    6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் ,
    அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
     முடியாது.வேறு எந்த வேலையிலும்
     கவனம் செல்லாது .

    7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
     ஒப்பிட்டுப் பேச மாட்டார்.எந்த ஒரு பெண்ணைப்
     பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

    8)உங்களை தொலைவில் இருந்துப்
     பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
     மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
     மொழி பெயர்ப்பார்.

    9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
     பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார்.
    எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
     நடந்துக் கொள்ள உதவுவார்.

    10) உங்களை வேலைக்காரியாய் ,
    சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு ,
    குழந்தையாய் , தோழியாய் , தாரமாய் ,
    தாயாய் பார்ப்பார்.

    11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு , உங்கள்
     அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.நீங்கள்
     சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்....

    மாமனாருக்கு அடுத்த இடம் மருமகனுக்குத்தான்! உண்மையான தகவல்..!

    By: ram On: 09:07
  • Share The Gag

  • விஜய்யா..? அஜீத்தா..? அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்து யுத்தம் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுவதாக நினைக்கவேண்டாம். ஆனால் மேலே சொன்னதும் உண்மைதான்.  ரஜினிக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார் தனுஷ்..

    இந்த வருடம் இதுவரை வெளியான டாப் 5 படங்களில் சென்னையில் மட்டும் வீக் என்ட் என்கிற மூன்று நாள் கலெக்சன் நிலவரப்படி ரஜினியின் கோச்சடையான் 432 காட்சிகள் திரையிடப்பட்டு 1.81 கோடி கலெக்சனை அள்ளியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் 360 காட்சிகள் திரையிடப்பட்டு   1.68  கோடி கலெக்சனை வசூலித்திருக்கிறது.

    இதில் மூன்றாவது இடம் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்திற்குத்தான்.. நான்காவது இடத்தில் விஜய்யும்(ஜில்லா) ஐந்தாவதாக அஜீத்தும்(வீரம்) இருக்கிறார்கள். இந்த ரிப்போர்ட்டின்படி மாமனாருக்கு அடுத்த இடம் மருமகனுக்குத்தான் என்று சொல்லவந்தோம்.. அவ்வளவு தான்..!

    தலைவலி அடிக்கடி வருதா? இதுதான் காரணம்..!

    By: ram On: 07:53
  • Share The Gag
  •  அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

    அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

    இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


    ஈரமான கூந்தல்


    காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

    அளவுக்கு அதிகமான வெப்பம்

    வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

    வாசனை திரவியங்கள்

    உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

    கம்ப்யூட்டர் திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    தொலைக்காட்சி திரை

    கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

    படுக்கையில் படித்தல்


    படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதிக குளிர்ச்சி

    அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

    ஆல்கஹால்


    ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

    சரியான தூக்கம்
    தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    நீண்ட தூர பயணம்
    பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.