Thursday, 4 September 2014

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய்

By: ram On: 22:23
  • Share The Gag

  • நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

    இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

    முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

    சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

    சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

    சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

    வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

    சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

    முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

    சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

    சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

    இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

    பூசணி விதை செக்ஸ் உணர்வை தூண்டுமாம்...!!

    By: ram On: 21:45
  • Share The Gag
  • செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரக்காவிட்டால் சிக்கல்தான். ஆணோ, பெண்ணோ இருவராலுமே சரியாக ஈடு கொடுக்க முடியாது. உடலில் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்க வேண்டுமெனில் அதற்கேற்ப சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    ஆண்மைக்கு சிக்கன்

    டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வினை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. சிக்கனில் உள்ள துத்தநாகம், பி6 வைட்டமின் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஆண்களுக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.

    ஹார்மோனை தூண்டும் கறுப்பு உளுந்து

    கறுப்பு உளுந்து சாப்பிட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே 40 வயதிற்கும் குறைவாக உள்ள ஆண்கள் வாரம் ஒருமுறையும், 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறையும் கறுப்பு உளுந்தை வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகரிக்கும்.

    விந்தணு உற்பத்திக்கு பிரேசில் நட்ஸ்

    நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது. இதில் உள்ள செலினியம் எனும் பொருள் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் இயற்கை வயக்ராவாக செயல்படுகிறது.

    செக்ஸ் உணர்வுக்கு கடல்சிப்பி

    கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும். ஆண், பெண் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும்.

    கிளர்ச்சியூட்டும் பூசணி விதை

    பூசணிக்காய் விதையில் உயர்தர துத்தநாகம் அடங்கியுள்ளது. இது டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோன்குறைபாட்டினை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள பி, இ, சி, டி மற்றும் கே வைட்டமின்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்டும்.

    முட்டைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!

    By: ram On: 20:46
  • Share The Gag
  • நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும்.

    நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

    அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள்.
    சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.

    சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது.
    முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது.

    ஒரு முட்டையில் ஒளிந்திருக்கும் சத்து உடலுக்கு உகந்ததாக உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதில் முட்டை பெரும் பங்கை வகிக்கிறது.
    குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
    முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது.
    பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.
    ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும்.
    எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும்.

    இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

    முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

    பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

    பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?

    By: ram On: 20:24
  • Share The Gag
  • ‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் - தம்பிக்கி டையே... அக்கா - தங்கைக்கிடையே... நண்பர்களுக்கிடையே... மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே... இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன?

    ‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும்.

    நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்?

    மனைவி தன்னைவிட நல்ல வேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும்.

    அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும்.

    பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம். நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும்.

    அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ - யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை... நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே.

    பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா... நிறைய சம்பாதிக்கிறா... அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும்.

    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும்.

    ‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை...’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது.

    அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் முழு விவரமும் உள்ளே!

    By: ram On: 19:39
  • Share The Gag
  • அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மர்ம ஆசாமி சில நாட்களுக்கு முன் 108க்கு தகவல் அளித்தார். அதை தொடர்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

    இந்த விசாரணையில், அந்த நபர் மதுரையில் இருப் பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து திருவான்மியூர் போலீஸார் மதுரை சென்று வினோத்(23) என்ற இளைஞரை கைது செய்து அழைத்து வந்தனர்.

    வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தனது செல் போன் தொலைந்து விட்டதாகவும், அதை வைத்து யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் கூறினார்.

    இதை தொடர்ந்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    hlM.dpuf

    உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி...!!

    By: ram On: 19:24
  • Share The Gag
  • படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.

    இன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவதும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    கண்டதை படிக்காதீங்க
    தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா? ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நிபுணர்கள். விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.

    நாட்டுக்கோழி முட்டை
    இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.

    உப்புக்கண்டம்
    பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.

    பழங்கள்
    காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..

    செலினியம் உப்பு
    அதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.

    ஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

    தமிழ் மக்களுக்காக கத்தி வில்லன் சர்ப்ரைஸ்!

    By: ram On: 19:13
  • Share The Gag
  • கத்தி படத்தில் இளைய தளபதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் . அதில் ஒருவர் இதுவரை பார்த்திராத வில்லன் வேஷம் என்று ஏற்கனவே படக்குழு கூறியது.

    மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் நீல்நிதின் முகேஷும் வில்லனாக நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.

    தற்போது கத்தி குழுவினர் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்க, நீல்நிதின் தமிழக மக்களின் அன்பிற்காக நானே சொந்த குரலில் டப்பிங் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!

    By: ram On: 18:38
  • Share The Gag
  • பொதுவாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களும் கரையும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையானது குறையும்.

    எப்படியெனில், இத்தகைய உணவுகளில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

    இப்போது டயட்டில் இருக்கும் போது பச்சையாக சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன், அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    பசலைக்கீரை

    பசலைக்கீரையை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த பசலைக்கீரையைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதனால் இது உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும். மேலும் உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.

    அஜித் புகழ்பாடும் நந்திதா!

    By: ram On: 18:07
  • Share The Gag
  • தமிழ் சினிமா கதாநாயகிகள் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆகிவிட்டார் அஜித். நயன்தாராவில் ஆரம்பித்து நஸ்ரியா வரை இவர் தான் ஃபேவரட்.

    தற்போது இந்த லிஸ்டில் அட்டகத்தி, எதிர்நீச்சல் போன்ற வெற்றி படங்களில் கதநாயகியாக நடித்த நந்திதாவும் இணைந்துள்ளார்.

    இவர் ‘ அஜித்தின் எளிமை மிகவும் பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்கவேண்டும், நானும் அவரை போலவே எளிமையாக இருக்க முயற்சி செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    நீங்கள் தூங்கு முறையை வைத்து உறவின் வலிமையை கணிப்பிடலாம்!

    By: ram On: 17:21
  • Share The Gag
  •  திருமணம் முடித்த தம்பதிகள், உங்கள் துணையுடன் தூங்கும் நிலையைக் கொண்டே உங்களுக்கும் துணைக்கும் இடையிலான உறவின் வலிமையை அறியலாம் என்கிறது ஓர் சுவாரஷ்யமான ஆய்வு.

     1100 தம்பதிகள் எப்படி வீட்டில் உறங்குகின்றார்கள் என்பதனை அவர்களிடம் கேட்டு அறிந்துஇ கட்டிலில் அவர்கள் இருவருக்குமிடையிலான தூரத்தை வைத்து உறவின் வலிமையை கணிப்பிட்டு இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

     பிரிட்டன் இணையம் ஒன்றே இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
     எங்கே நீங்களும் விளக்கப் படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

    இஞ்சி - அந்த விஷயத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லதாம்...

    By: ram On: 09:00
  • Share The Gag
  •  ஆண்மை அதிகரிக்கும் இஞ்சி

    உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது.

    ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!! அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ...

    குமட்டலை குறைக்கும்
    ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.

    செரிமானத்தை மிகைப்படுத்தும்
    செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

    வீக்கத்தை குறைப்பது
    தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

    சுவாச பிரச்சனைகளை நீக்குதல்
    தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

    இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்
    வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

    மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது
    பெண்களே! கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
    அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

    மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது
    இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது. 

    காணாமல் போன விளையாட்டுகள்!

    By: ram On: 08:31
  • Share The Gag
  • அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

    உப்புக்கோடு

    village games
    உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

    மெல்ல வந்து கிள்ளிப்போ!

    2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
    கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
    விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

    கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

    மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

    ‘காயே கடுப்பங்கா
    கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
    உப்பே புளியங்கா
    ஊறவச்ச நெல்லிக்கா
    கல்லன் வாரான் காரைக்குடி
    கல்லை நீயும் கண்டுபிடி’

    என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

    பூப்பறிக்க வருகிறோம்!


    2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

    கழங்கு

    பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

    ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
    தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
    தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
    அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
    அம்மியிடுக்குல படுத்திட்டேன்
    படுத்த பாயில சுருட்டிட்டேன்
    ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
    இளந்தம் பழுக்கவும்
    பழுத்து தின்னவும்
    மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
    மூன்றாம் படிக்கட்டு
    நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
    நாகம் பழங்கொத்தி
    அஞ்சான்: ஐப்பால் அரங்கு
    பம்பாய் சிலுக்கு
    ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
    அள்ளிப்போட்டு நொறுக்கு
    ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
    எட்டாம் நம்பர் சேல

    இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
    ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
    கிட்டுவதேயில்லை!

    திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!

    By: ram On: 08:31
  • Share The Gag

  • சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.
    நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம்.

    சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

    இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

    அஜீத்தின் 55–வது படத்தின் தலைப்பு - சத்யா...?

    By: ram On: 08:17
  • Share The Gag

  • மங்காத்தா படத்தில் அஜீத் லேசாக நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான வீரம் படத்திலும் அதே கெட்டப்பில் வயதான வராகவே வந்தார்.

    ஆனால் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நரை முடியை மறைத்து இளமை தோற்றத்தில் நடிக்கிறார். அஜீத்தின் இளமை கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார். எனவேதான் தலை முடியை ஓட்ட வெட்டியுள்ளார். கடும் உடற்பயிற்சிகள் செய்து மீடுக்கான தோற்றத்துடனும் தோன்றுகிறார்.

    இந்த படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

    இது அஜீத்தின் 55–வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், சத்யா போன்ற பெயர்களை பரிசிலீப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அவை உறுதி படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு வாரத்தில் தலைப்பு முடிவாகிவிடும் என 

    ஆண்மை அதிகரிக்கும் கடுக்காய்..முக்கிய குறிப்பு..!

    By: ram On: 07:30
  • Share The Gag
  • கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை, இதன் வலிமை காரணமாகவே முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது. இது வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

    கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உணவு உண்டவுடன் அரை தேக்கரண்டி குடித்து வர வாதம் குணமாகும். உடல் வலுவடையும். ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டைநோய், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டேனின் உதவுகிறது.

    எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாலேயே கடுக்காய் மருத்துவரின் காதலி எனப்படுகிறது. தான்றிக்காய், நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்றுக் கோளாறு மாறும். கடுக்காய் தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க இந்திய மருத்துவத்தில் தரப்படுகிறது. கனிகளின் கசாயம் வாய் கொப்பளிப்பாக பயன்படுகிறது. மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும்.