Monday, 25 August 2014

ப்ராய்லர் சிக்கனில் உள்ள பக்க விளைவுகள் - ஆண்மை குறைவு வரும்!

By: ram On: 23:56
  • Share The Gag

  • ப்ராய்லர் கோழியானது 65 நாட்களில் செயற்கை ஸ்டீராய்ட் ரசாயன ஊசிமூலம் முழு வளர்ச்சி பெறுகின்றது. இந்த ஊசி அதன் கழுத்து மற்றும் இறக்கை பகுதியில் செலுத்தப்படுவதால் அதனை உட்கொள்ளும் போது குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ரத்தக்கட்டிகள் மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதிலும் பொரித்த கோழியில் உடல் எடையும் கூடும் என்பது ஆய்வு. இந்தக் கோழி இறக்கை பகுதியில் விஷ ரசாயனம் இருக்கும். அதனைதான் "சிக்கன் விங்ஸ்' என்றும் மற்றும் பல பெயர்களில் விளம்பரப்படுத்துகிறது விளம்பர உலகம்.

    இவ்வகை கோழிகளுக்கு உடல் எடை கூட ரசாயனம் கலந்த உணவு தரப்படுகின்றது.

    இக்கோழிகளின் கல்லீரல் சாப்பிட்டால் ஆண்மை குறைவு வரும்.

    இந்த கோழிகளின் எலும்பு பலவீனமானது. அதனால் போதிய சத்தும் கிடைக்காது, காரணம் மருந்துகளால்  ரசாயனங்களால் இவை வேகமாக வளர்க்கப்படுகின்றன, அதனால் இக்கோழிகளுக்கு எலும்பு பலவீனம் உண்டு. அதனால் ப்ராய்லர் கோழிகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    நடிகர் ரஜினிகாந்த் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலில் தரிசனம்

    By: ram On: 23:33
  • Share The Gag

  • இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கோச்சடையான் படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த், ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. தான் படப்பிடிப்பிற்கு செல்லும் இடங்களில் எப்படி நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்க மறப்பதில்லையோ அப்படி தான் அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்தவும் நடிகர் ரஜினி தவறுவதில்லை.

    அந்தவகையில் ஷிமோகாவில் ‘லிங்கா’ படப்பிடிப்பின் போது கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இன்னும் மூன்று வாரங்கள் வரை ஷிமோகாவைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    கோயிலின் நிர்வாக அலுவலர் மூர்த்தி, கண்காணிப்பாளர் ராமகிருஷ்ண அடிகா ஆகியோரும் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரஜினி வருவதை அறிந்த கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததுமட்டுமல்லாமல் அவருக்கு பொன்னாடை அம்மனின் பிரசாதமும் வழங்கினர்

    மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி ‘அம்மாவை ’ தாக்கி பேசியதால் ஒரே குய்யோ முய்யோ…

    By: ram On: 23:09
  • Share The Gag

  • சினிமாவுக்குள் அரசியல் புகுந்தால் சின்னா பின்னம்தான்! இதை தமிழ்சினிமாவில் பலர் உணர்ந்து உலர்ந்து காய்ந்து கருவாடாகிப் போயிருக்கிறார்கள். அண்மை கால உதாரணம் வடிவேலுவும் விஜய்யும்! ‘அம்மா வெற்றிக்கு அணில் மாதிரி உதவினேன் ’ என்று விஜய் சொல்லப் போக, பக்கோடா பாக்கெட்டுக்குள் பாக்கு விழுந்த மாதிரி ஒரே கடா முடாவாகிவிட்டது அவரது நிலைமை. இன்று வரை அதிலிருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. வடிவேலு பற்றி அதிகம் விவரிக்க தேவையில்லை. தவளை தன் வாயாலேயே கெட்ட மாதிரிதான் அவரும். ஊர் ஊராக போய் உளறி கெட்டார்.

    இப்போதும் அது தொடர்கிறது. முன்னால் சென்ற ஏர் கலப்பைகள் சேற்றில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுகிறதே, அதை பார்த்தாவது அடக்கி வாசிப்போம் என்கிற உணர்வே இல்லாமல் அவரவர் லெவலுக்கு அரசியலில் புரள ஆரம்பித்துவிடுகிறார்கள். கில்டு என்ற அமைப்பு தமிழ்சினிமாவில் இயங்கி வருகிறது. சின்னப்பட தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு அது. இங்குதான் பொறுப்பில் இருக்கும் ஒருவர் முதல்வரை விமர்சிக்க, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஃபைட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ‘எங்கம்மாவையா தரக்குறைவா பேசுறே?’ என்று சம்பந்தப்பட்டவரின் கன்னத்தில் ஓங்கி பளார் விட்டுவிட்டார். அதற்கப்புறம் போலீஸ் வந்து, அடிவாங்கியவர் ‘அம்மாவை தப்பா பேசிட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம்’ என்று மன்னிப்பு கேட்டதால் அவரை கைது செய்யாமல் கிளம்பியது. அத்துடன் பிரச்சனை ஓவர்.

    சில தினங்களுக்கு முன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் சக்சஸ் மீட்! எள்ளு முட்டாய் செய்யுற இடத்துல புல்லுக்கட்டுக்கு என்ன வேலை? எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனை அழைத்து வந்துவிட்டார் பார்த்திபன். மனுஷ்யபுத்திரன் திமுக ஆதரவாளர் என்றொரு பரவலான கருத்து நிலவி வருகிறது. அவரும் அதை நிரூபிப்பதை போல, போன ஆட்சியில திருட்டு விசிடி அதிகம் இல்ல. இந்த ஆட்சியிலதான்… என்று வாயை விட, பொல பொலவென பிடித்துக் கொண்டார்கள் அதிமுக ஆதரவு பத்திரிகை நிருபர்கள். ‘எப்படி நீ எங்க அம்மா ஆட்சியை குற்றம் சொல்லலாம். போன ஆட்சியில திருட்டு விசிடி இல்லேன்னு நிரூபிக்க முடியுமா உன்னால்?’ என்று சாமியாட ஆரம்பித்துவிட்டார்கள்.

    சாமி கும்புட வரச்சொன்னா… இப்படி எல்லாரும் சேர்ந்து கலசத்தை நசுக்குறாங்களே என்று கவலை கொண்ட பார்த்திபன் அவசரம் அவசரமாக அந்த சக்சஸ் சந்திப்பையே நிர்கதியாக முடித்துவிட்டு கிளம்பினார்.

    பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்

    By: ram On: 21:54
  • Share The Gag

  •  தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரக்கொண்டது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தாய்ப்பாலுக்கு மாற்றாக பல தாய்மார்கள், பல்வேறு காரணங்களால் பசுவின்பால் தருவதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.

    ஆனால் இந்தப் பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    தேசிய குடும்ப நல சர்வேயில் இது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வல்லுனர்களின் ஆய்வுத்தகவல்களை மேற்கோள்காட்டி, கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய சுகாதாரம், பொது நல இன்ஸ்டிடியூட்டின் உயிரி ரசாயனம், ஊட்டச்சத்து துறை தலைவராக பணியாற்றிவரும் தேவநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர், "உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காணவேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது. குழந்தையின் வேகமான வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் பசுவின் பாலில் இல்லை'' என்றார்.

    ரெடியானது முனி-3! ருசிகர தகவல்

    By: ram On: 20:23
  • Share The Gag

  • தமிழ் திரையுலகினருக்கு முனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லாரன்ஸ். முதன் முதலாக ஆங்கில படங்களை போல் 2 பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் இவர் தான்.

    தற்போது முனி வரிசையில் அதன் மூன்றாம் பாகத்தை கங்கா என்ற பெயரில் இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் லாரன்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி போனது.

    மீண்டும் பழைய புத்துணர்வுடன் படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன் கலந்துகொண்டு படத்தை எடுத்து முடித்துவிட்டார். இன்னும் சில பாடல்கள் மீதம் உள்ள நிலையில் விரைவில் உங்களை திகிலில் ஆழ்த்த வருகிறது முனி-3.

    தனுஷ் தயாரிப்பில் மீண்டும் மகளின் இயக்கத்தில் ரஜினி!

    By: ram On: 19:32
  • Share The Gag

  • சூப்பர் ஸ்டார் தற்போது லிங்கா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு எந்திரன் -2வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படமும் கைவிடப்பட்டது.

    இதனால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷுன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாரம்.

    மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க போவாதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, வசனங்களை மேற்பார்வையிடுவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மெட்ராஸ் கதையை பிரபல இயக்குனரிடமிருந்து திருடிவிட்டார்களா?

    By: ram On: 18:42
  • Share The Gag

  • கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் மெட்ராஸ். படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது.

    இயக்குனர் ரஞ்சித் இதற்கு முன்பு பிரபல இயக்குனர் ஒருவரிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது அந்த இயக்குனர் உருவாக்கிய கதைதான் ‘மெட்ராஸ்’ . படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் நின்று போயிருக்கிறது.

    தற்போது இந்த படத்தின் கதையை கேட்டு தெரிந்துகொண்ட அவர், தன் உதவி இயக்குனர் ரஞ்சித் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.

    தாலி கட்டுவது ஏன்?

    By: ram On: 17:25
  • Share The Gag
  • தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

    திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

    அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

    உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

    தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

    “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
    அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

    என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

    ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

    உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

    தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

    நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

    வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து டிப்ஸ்...

    By: ram On: 17:13
  • Share The Gag
  • எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும்.


    வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.


    நம் வீட்டில் உள்ள தலை வாசல் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அட்வான்ஸ்ட் ஃபெங் சூயி மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசகரான டாக்டர். ஸ்னேஹல் எஸ். தேஷ்பாண்டே இதனை பற்றி விலாவரியாக கூறுகிறார். தலைவாசல் என்பது வீட்டின் வாயை போன்றதாகும். இதன் வழியாகத் தான் வீட்டிற்குள் அனைத்து சக்திகளும் உள்ளேறும். அதனால் இது எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருக்க கூடாது என்றும் சில விதிமுறைகள் உள்ளது.


     தென் மேற்கு திசை வீடு

    தென் மேற்கு திசையில் பார்த்தமாறு இருக்கும் வாசல் கதவை கொண்ட வீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள். இது தீய சக்திகள் உள்ளேறும் திசையாகும். அதனால் பல போராட்டங்களை சந்தித்து, பல நல்வாய்ப்பை இழக்க நேரிடுவீர்கள். ஆனால் ஃபெங் சூயி சாஸ்திரப்படி, அந்த மாதிரியான வீட்டில் செல்வ செழிப்பு புரளும் யோகம் இருந்தால், முதல் 3-4 வருடங்களுக்கு அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு பெரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். மேலும் வீட்டின் தலைவாசல் கதவு ஏற்கனவே தென் மேற்கு திசையை நோக்கி இருந்தால், இடது கையில் கதம் வைத்திருக்கும் இரண்டு அனுமான் படங்கள் அல்லது டைல்ஸ் கற்களை கதவின் வெளியே பதித்து, அதன் பின் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். மஞ்சள் நிற மாணிக்க கல், எர்த் கிரிஸ்டல், ஈயம் போன்ற கற்களும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும். குறிப்பாக இவைகளை பயன்படுத்தும் முன் வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. இருப்பினும் இவ்வகை வீட்டை தவிர்ப்பதே நல்லது.


     தென் கிழக்கு திசை வீடு

    தென் கிழக்கு திசையை நோக்கியுள்ள தலைவாசல் கதவு இருந்தால், உடல்நல குறைவு, கோபம், வழக்குகள் போன்றவைகள் உள்ளேறும். இவ்வகை வீடுகளில், தலைவாசல் கதவுகளின் வெளிப்பக்கமாக காயத்ரி மந்திரம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டுங்கள். உரிய ஆலோசனையோடு கோரல், மஞ்சள் மாணிக்க கல் மற்றும் செம்பு போன்ற கற்களை பயன்படுத்தி, இந்த கதவின் குறையை சற்று குறைக்கலாம்.


     தெற்கு பார்த்த வீடு

    தெற்கை நோக்கி அமைந்துள்ள தலைவாசல் கதவுகள், கூரிய சக்தியை உள்ளே கொண்டு வரும். இது வீட்டிலுள்ள நேர்மறையான சக்தியை சீர் குலைக்கும். இவ்வகை கதவுகள் இருந்தால், பொது வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும். சில நேரம் சண்டை மற்றும் வாக்குவாதத்திலும் இழுத்து விடும். இந்த பிரச்சனைக்கும், மேற்கூறிய படி அனுமான் படம் பதித்த படத்தையோ, டைல்ஸ் கற்களையோ கதவுகளின் வெளிப்பக்கமாக பதித்து விடுங்கள். ஈயம் மற்றும் பூனைக் கண் கிரிஸ்டல்களை பயன்படுத்தி, இதிலிருந்து சற்று பாதுகாக்கலாம். ஆனால் இந்த கதவு நான்காம் படவில் இருந்தால், குடியிருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.


     மேற்கு பார்த்த வீடு

    மேற்கு திசையை நோக்கி தலைவாசல் கதவு அமைந்திருந்தால், அது சுறுசுறுப்பான திறனையும், கொண்டாட்ட திறனையும் அளிக்கும். அதனால் இளைஞர்களுக்கு இது மிகவும் நல்லதாக அமையும். அதனால் தான் ஜப்பானில் உள்ள கெய்ஷா வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது.

     வடமேற்கு திசை வீடு

    வடமேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் தலைவாசல் கதவுகளினால், பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதனுடன் சேர்ந்து மற்ற வாஸ்து விதிமுறைகள் படி வீடு இருந்தால், ஆரோக்கியம், பொருள் வளம், செல்வம் என அனைத்தும் பெருகும். இதில் இருக்கும் ஒரே குறை, வாசல் கதவு மேற்கை நோக்கி இருந்தால், வீட்டின் முதன்மையான ஆண் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். அதே போல் வடக்கை நோக்கி இருந்தால், இது பெண்ணுக்கு பொருந்தும்.


    குறிப்பு


    பொதுவாக கிழக்கு , வடக்கு, வட கிழக்கு போன்ற திசைகளை நோக்கி இருக்கும் தலைவாசல்கள் தான் நல்லது. இருப்பினும் இழுவை, அளவு குறைப்பு, நிலத்தடி நீர் தொட்டி, ஃபெங் சூயி போன்றவைகளால் தான் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும், பொருள் வளமும் அடங்கியுள்ளது.


    நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள்..!

    By: ram On: 17:00
  • Share The Gag
  • இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

    நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள் !!

    இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

    ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

    சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

    இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

    இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

    இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

    ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

    By: ram On: 16:51
  • Share The Gag
  • ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

    முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

    ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

    Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

    * ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

    * கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

    *தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

    * சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

    * பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

    * இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
    ஊஞ்சல்கள் பலவகை:

    சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

    நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

    தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

    மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

    கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

    கூடாத ஆமைகள்!

    By: ram On: 16:38
  • Share The Gag
  • ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பார்கள் முன்னோர். சீனர்களோ ஆமையை அதிர்ஷடத்திற்குரியது என்று வளர்க்கிறார்கள்.

    எந்த ஆமை கூடாதது? ஆமைகளில் இருவகை.

    அதில் எந்த ஆமை இருக்க வேண்டியது? 'கல்லாமை, இல்லாமை' கூடாது!

    அழுக்காறாமை, பொய்யாமை பிறனில் விழையாமை போன்ற ஆமைகள் இருக்க வேண்டியது!

    வள்ளுவர் மிக எரிச்சல் படும்போது 'பாவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். 'வறுமை என்ற ஒரு பாவி'. 'அழுக்காறு என ஒரு பாவி' என்றார். அந்த பாவி நம் செல்வத்தை அழிக்கும்; நரகத்தில் நம்மைச் சேர்க்கும்!

    இந்த (ஆமை) பொறாமை எப்படியோ நம் மனதில் வந்து புகுந்து விடுகிறது. நம் வீட்டு மின்சாரம் தடைப்பட்டு எதிர்வீட்டில் விளக்கு எரிந்தால் பொறாமை. நம் பிள்ளை தேர்வில் தோற்று எதிர் வீட்டுப்பிள்ளை தேர்ச்சி பெற்றால் பொறாமை!

    அண்ணனுக்கு ஆண் குழந்தைகளாகப் பிறந்து தம்பிக்கு பெண் குழந்தைகளாகப் பிறந்தால் பொறாமை!

    நாம் வயதான காலத்தில்கூடச் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்த்தால், இளமையிலேயே தளர்ச்சியாயிருப்பவர்களுக்குப் பொறாமை! இப்படி பொறாமையின் வரிசை நீளும்!

    காரணமில்லாத சில பொறாமைகளும் உள்ளன! அவற்றைச் சகிக்க முடியாது.
    ஏன் இந்த பொறாமை இதனால் யாருக்கு லாபம்? நெஞ்சம் இருண்டு போவதால் முகமும் இருளும்! எரிச்சலைத் தவிர நாம் காணும் பலன் என்ன கபீர்தாசர் சொல்வார்,

    'தான் தான் மே லிகாஹை
    கான் கான் கா நாம்!'


    ஒவ்வொரு தானியத்திலும் அதைச் சாப்பிடப் பிறந்தவன் பெயர் எழுதப்பட்டுள்ளதாம். இறைவன் வகுத்தது எதுவோ அதுவே நாம் அனுபவிக்கப் போகிற பொருள்.

    'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

    என்ற குறளை ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எழுதச் சொல்வோம்! உடலெல்லாம் விளக்கெண்ணை பூசிக் கொண்டு ஆற்று மணலில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்! 'வருத்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போமின் என்றால் போகா!'

    ஆகவே பொறாமை என்ற 'ஆமை' புகாமல் பார்த்துக் கொள்வது அறிவுடைமை!
    அதுவே நித்தம் நிம்மதி தரும்!

    தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது - கமல்!

    By: ram On: 08:06
  • Share The Gag

  • சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என்று தொடர்ந்து என்னுடைய படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கடந்தாண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் தான் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் உருவாகும் என்று கமல் அப்போது வேதனை தெரிவித்தார். பிறகு ஒருவழியாக படம் ரிலீஸாகி ஹிட்டானது. தொடர்ந்து விஸ்வரூபம்-2 படம் தயாராகியுள்ளது.

    இந்நிலையில், இந்தப்படத்திற்கும் எதிர்ப்பு வருமா என்று கமல் தரப்பிடம் கேட்டபோது, நிச்சயம் வராது, படத்தில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம் என்றார். அதேசமயம் தொடர்ந்து சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு கிளம்புகிறது என்று வேதனைப்பட்டார். தற்போது உத்தமவில்லன் படத்தில் நடித்து முடித்துள்ள கமல், உத்தமவில்லன் படம் வெளியானதும், விஸ்வரூபம்-2 வெளிவரும் என்று கூறினார்.

    சிம்புவுக்காக காடு காடாக சுற்றப் போகும் விஜய்

    By: ram On: 07:37
  • Share The Gag

  • சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு சில காட்டுப் பகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. இதையடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோருடன் நடிக்கிறார்.

    சிம்புவுக்காக காடு காடாக சுற்றப் போகும் விஜய்

    இந்த படத்திற்காக சில லொகேஷன்களை தேர்வு செய்துள்ளார்களாம். கேரளாவில் இருக்கும் சாலக்குடி, நெல்லியம்பதி காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவிலும், வட இந்தியாவிலும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். முன்னதாக அவர் விஜய்யுடன் சேர்ந்து கத்தி படத்தில் ஒரு டூயட் பாடலை பாடுகிறார்.

    சிம்பு படத்தில் ஸ்ருதியின் கதாபாத்திரம் தன்னை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் ஹன்சிகா.

    தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

    By: ram On: 07:24
  • Share The Gag
  • உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


    வெள்ளைப் பூண்டு:


    பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


    இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


    வெங்காயம்:


    வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


    காரட்:


    நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


    ஆரஞ்சு :


    வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


    பருப்பு வகைகள் :


    பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


    கோதுமை ரொட்டி :


    நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    இறால், மீன் மற்றும் நண்டு :


    அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


    தேநீர் :


    தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


    பாலாடைக்கட்டி :


    சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


    முட்டைக்கோஸ் :

    குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

    மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

    ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

    By: ram On: 07:20
  • Share The Gag
  •  நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்..

    .
    இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!


    சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


    புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!


    சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!


    ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


    எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.



    சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்.

    நரம்புத்தளர்ச்சி நீங்க எள் - நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டால் கருத்தரிக்காது. 

    By: ram On: 06:43
  • Share The Gag


  • தொண்டை வறட்சி நீங்கிட எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும்

    1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.

    2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.

    3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.

    4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல்
    உஷ்ணத்தை தனித்து விடும்.

    5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது.

    மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள்..?

    By: ram On: 01:10
  • Share The Gag
  • சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற  மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

    நடிகர், நடிகைகள் என்ன வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா என்ன? அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது.
    அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்...

    தலைக்கு...

    * பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

    * வெஸ்டர்ன் லுக்கோ... ட்ரெடிஷனல் லுக்கோ... எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

    * நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யே  அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

    * சரி... திடீரென ஒரு ஃபங்ஷன்... அல்லது போட்டோ ஷூட்... கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை... நரையையும் மறைத்தாக வேண்டும்... என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்... அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

    கண்களுக்கு...

    கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

    நகங்களுக்கு...

    நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

    வாக்கிங்...

    நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக்    கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

    உடைகள் மற்றும் நகைகள்...

    ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

    பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

    அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

    கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

    மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

    மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

    எல்லாவற்றையும் விட முக்கியம்... அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை
    விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

    கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

    முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..! உட்காரும் தோரணை..?

    By: ram On: 01:06
  • Share The Gag
  • முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


    நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

    ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

    எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

    1. உட்காரும் தோரணை

    அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

    வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

    2. உடற்பயிற்சி
    கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

    அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    3.உணவு முறை:

    பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

    4. வைட்டமின்கள்:

     கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

    5. தாதுக்கள்:

     எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

    6. சூடான குளியல்:

     வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

    7. சப்ளிமென்ட்ஸ்:


     நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

    8. மசாஜ்: 

    வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

    9. கடுகு எண்ணெய்:

     எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

    10.ஆரோகியமான சூழ்நிலை:

     சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

    தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்...!

    By: ram On: 01:02
  • Share The Gag

  •  மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


    மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


    மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்த தலம்..?

    By: ram On: 00:57
  • Share The Gag
  • வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.

    மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.

    திருக்கயிலையில் பரமேஸ்வரன்–

    பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.

    சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.

    இடி வழிபாடு:

     வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும். மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.

    கழுகுகளுக்கு விமோசனம்:

    கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடையலாம் என அறிந்து, அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.

    வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

    தாழக்கோவில்:


    மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயத்தில் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.

    சனி பகவான் வழிபாடு:


    கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.

    அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.

    சுயம்பு அம்பாள்:

     இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.

    சங்கு தீர்த்தம்:


    மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன – கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது மிகவும் விஷேசமாகும்.

    சங்கு தீர்த்தம் – பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

    செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.

    7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?

    By: ram On: 00:51
  • Share The Gag
  • நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.


    மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள்.


    அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.


    கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர்.


    பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.


    அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது.


    ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.


    ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.


    ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.