Monday, 11 August 2014

Tagged Under: ,

இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு சொல்ல விரும்புவது... என்ன?

By: ram On: 18:17
  • Share The Gag

  • முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது.

    முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்).

    முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ‘ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்’ செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும்.

    இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.

    அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும்.

    அது உன்னை அண்ணா/ அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே’ என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு’ என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.

    9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம்.

    பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத் துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!

    0 comments:

    Post a Comment