Wednesday, 6 August 2014

ரஜினிக்காக உருவாகிறது மிகப்பெரிய சிலை!!!

By: ram On: 23:37
  • Share The Gag

  • ரஜினி இதையெல்லாம் விரும்பமாட்டாரே.. யார் இப்படி சிலை வைக்கும் அளவுக்கு இறங்கியுள்ளார்கள் என ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்யும்.. ஆனால் விஷயம் இருக்கிறது. ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடத்த இருக்கிறார்கள்.

    படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் இங்குதான் படமாக்கப்பட இருக்கிறது. இந்த காட்சியில் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றும் இடம்பெறுவதால் அதை உருவாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தமுறை மைசூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியபோது ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சற்று இடைஞ்சல் ஏற்பட்டது.

    இந்தமுறை அதை தவிர்ப்பதற்காகத்தான் ஷிமோகாவிற்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பை மாற்றியிருக்கிறார்கள். ஆகஸ்ட்-18ல் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சமையலறை நீர்த்தொட்டிக் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா?

    By: ram On: 22:59
  • Share The Gag

  • வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்பட்டால், வீட்டின் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அவற்றில் சுத்தம் செய்வதில் அதிக நேரம் ஆகும் இடம் என்றால் சமையலறை தான். பொதுவாக வீட்டிலேயே சமையலறையில் தான் சீக்கிரம் கறைகளானது படிந்துவிடும். ஆகவே அங்கு சுத்தம் செய்ய ஆரம்பித்தால், சமையலறை ஷெல்ப், அடுப்பு மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றில் தான் அதிக கறையானது படிந்துவிடும். எனவே சமையலறையை மட்டும் தினமும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், மறுநாள் சமையலறைக்குள்ளே போக முடியாது.

    அதிலும் சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியில் தண்ணீர் செல்லும் வழியில் அடிக்கடி அடைப்புகளானது ஏற்படும். இதனால் தண்ணீரானது தேங்கி, கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் மற்றும் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம், சிறு உணவுப் பொருட்கள், இலைகள், நூல் போன்றவை குழாய்களில் தங்கி அடைப்புக்களை ஏற்படுத்துவதே காரணம். ஆகவே அத்தகைய அடைப்புக்களை ஏற்படுத்தும் குழாய்களை சுத்தம் செய்வதற்கு எளிமையான சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

    வினிகர்

    சமையலறை தொட்டியில் தண்ணீர் போகாமல் தேங்கியிருந்தால், அப்போது குச்சி அல்லது கம்பியை விட்டு அடைப்பை நீக்குவதை விட, சிறிது வினிகரை ஊற்றி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் சூடான நீரை ஊற்றி, பின் கம்பியை விட்டு ஆட்டினால், அடைப்புகளை ஏற்படுத்திய பொருட்கள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக கம்பியை விட்டு சுத்தம் செய்ததும், இறுதியில் ஒரு முறை சூடான நீரை ஊற்ற வேண்டும். இந்த முறையை அடைப்புகள் நீங்கும் வரை செய்ய வேண்டும். இதனால் குழாய்களில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

    வடிகால் கம்பி

     தினமும் சமையலறைத் தொட்டியை வடிகால் கம்பியால் சுத்தம் செய்யலாம். இதனால் தொட்டியில் உள்ள அடைப்புக்களை எளிதில் நீக்கலாம்.

    பேக்கிங் சோடா

    சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களில் ஒன்றான பேக்கிங் சோடாவைக் கொண்டு, சமையலறைத் தொட்டியை சுத்தம் செய்தால் மிகவும் எளிது. அதற்கு சூடான நீரை குழாயில் ஊற்றி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் பேக்கிங் சோடாவை தூவி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் மீண்டும் சூடான நீரை ஊற்றினால், குழாயில் இருந்த அனைத்து அழுக்குகளும் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

    எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாற்றில் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, குழாய்களில் ஊற்றி, 30 நிமிடம் ஊற வைத்தால், அழுக்குகள் நீங்கி, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இந்த முறையை தினமும் செய்து வந்தால், பாத்திரம் கழுவும் தொட்டியானது சுத்தமாக இருக்கும்.

    தமிழில் ஒரு லைப் ஆப் பை! பிரபு சாலமன் அதிரடி!

    By: ram On: 22:10
  • Share The Gag

  • தமிழ் சினிமாவின் பயணத்தை தன் மைனா, கும்கி மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றவர் பிரபு சாலமன். இவர் தற்போது சுனாமியை மையப்படுத்தி கயல் படத்தை எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான தகவலும் கசிந்துள்ளது. இதில் காட்டிற்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் சிங்கத்திடம் மாட்டிக்கொள்கிறது.

    பசி வரும் வரை அந்த குழந்தை ஏதும் செய்யாமல், பசி வந்தவுடன் என்ன ஆகிறது என்பதை மிக சுவாரசியமாக 3D ல் எடுக்கயிருக்கிறாராம்

    உங்கள் ஜீன்ஸ்கள் பழுதடையாமல் நீண்ட காலம் பயன்பட வேண்டுமா?

    By: ram On: 21:53
  • Share The Gag

  • தற்போது சுடிதார், புடவை போன்றவற்றை அணிவோரை விட, ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கை தான் அதிகம். ஏனெனில் சுடிதார், புடவை போன்றவற்றை ஒருமுறை அணிந்தால் மீண்டும் அவற்றை அணிய வேண்டுமானால் துவைத்த பின்னர் தான் அணிய முடியும். ஆனால் ஜீன்ஸ் என்றால் ஒருமுறை அணிந்தால், பின் துவைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம். அதுமட்டுமின்றி, ஒருவரிடம் 2 ஜீன்ஸ் இருந்தால் போது, அதற்கு நிறைய டி-சர்ட்டுகளை வாங்கி பலமுறை அழகாக காணலாம்.

    அத்தகைய ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதற்கு போதிய பராமரிப்பு கொடுப்பதுடன், அவ்வப்போது துவைத்தும் வர வேண்டும். இங்கு நாம் பயன்படுத்தும் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதன்படி பின்பற்றினால், நிச்சயம் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.

    சரியாக மடித்து வைக்கவும்

    ஜீன்ஸ் மிகவும் கடினமாக இருப்பதால், அதனை சரியாக மடித்து வைக்க வேண்டும். மேலும் அவ்வப்போது அதை மடிக்கும் ஸ்டைலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஒரே மாதிரி மடிக்கும் போது அவ்விடத்தில் கோடுகள் போன்று விழுந்து, பின் நிறம் மங்கி வெளுத்துவிடும். Show Thumbnail

    பிரஷ்னர்கள் பயன்படுத்த வேண்டாம்

    ஜீன்ஸ் நறுமணத்துடன் இருக்க வேண்டுமென்று சிலர் பிரஷ்னர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தினால், ஜீன்ஸில் உள்ள இயற்கை நறுமணத்துடன், பிரஷ்னரின் நறுமணம் சேர்த்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.

    வாரத்திற்கு ஒரு முறை துவைக்கவும்

     ஜீன்ஸை வாரத்திற்கு ஒருமுறையாவது துவைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.

    ப்ளீச்சிங் பவுடர் சேர்க்க வேண்டாம்

    நீண்ட நாட்கள் ஜீன்ஸ் போட்டு பின் துவைப்பதால், சில அதில் உள்ள அழுக்குகள் போக வேண்டுமென்று ப்ளீச்சிங் பவுடர் சேர்ப்பார்கள். ஆனால் அப்படி ப்ளீச்சிங் பவுடர் சேர்த்தால், அது ஜீன்ஸின் நிறத்தை போக்கி, வெளுத்துவிடும்.

    வினிகரில் ஊற வைக்கவும்

    ஜீன்ஸை துவைக்கும் போது, அதன் நிறம் மங்காமல் இருப்பதற்கு, வினிகர் கலந்து நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் துவைக்க வேண்டும்.

    தனியாக துவைக்கவும்

    எப்போதும் ஜீன்ஸை தனியாக துவைத்து வந்தால், அதன் நிறம் தக்க வைக்கப்படும்.

    தேய்த்து துவைக்க வேண்டாம்

    நிறைய மக்கள் ஜீன்ஸை துவைக்கும் போது பிரஷ் பயன்படுத்தி நன்கு தேய்த்து துவைப்பார்கள். ஆனால் அப்படி நன்கு தேய்த்து துவைத்தால், ஜீன்ஸின் தரம் குறைய ஆரம்பித்துவிடும். எனவே அளவுக்கு அதிகமாக தேய்த்து துவைக்க வேண்டாம்.

    குட்டையான ஆண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் ?

    By: ram On: 18:00
  • Share The Gag

  • குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள்.

    மேலும் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவார்கள். அதற்கு நீங்கள் தேர்ந்தேடுக்கும் ஆடைகள் உங்கள் தோற்றத்தை மந்தமாக காட்டாமல் உங்களை முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும். ஆகவே குட்டையாக இருக்கும் ஆண்கள் உடுத்தும் உடைகளுடன், இதர அலங்கார பொருட்களின் மீது கவனம் செலுத்தினால், அவர்களின் தோற்றம் மேம்படும். மேலும் பார்ப்பவர்களின் கவனத்தையும் உங்கள் மீது ஈர்த்து, உச்சி முதல் பாதம் வரை கவனிக்க செய்யலாம்.

    நீட்டு வடிவில் இருக்கும் வடிவமைப்புகள்

    நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள செங்குத்து கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல டிசைனோடு உள்ள ஆடையில் மேலேயும் கீழேயும் விழுகின்ற நேர் கோடுகளை கொண்ட ஆடைகளை அணிந்தால், பார்ப்பதற்கு உயரமாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருப்பீர்கள்.

    முடிந்த வரைக்கும், உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு பிராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுத்து, அது உங்கள் உடல் அமைப்புக்கு பொருந்துகிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஒருவேளை, ரெடிமேட் பிராண்ட் எதுவுமே உங்களுக்கு பொருத்துமாக இல்லையென்றால் நல்லொதொரு டெய்லர் மூலமாக உங்கள் உடல் கட்டமைப்பிற்கு பொருந்துகின்ற வகையில் ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

    ஒற்றை நிற ஆடைகள்

     பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறுபார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.

    சரியான ஆடைகள்

    ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள்கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்

     அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். இதனால் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

    மனைவி கணவரிடம் சொல்ல கூடாத அந்த விஷயங்கள்..?

    By: ram On: 17:13
  • Share The Gag

  • பொதுவாக திருமணத்திற்கு பின் கணவனை விட மனைவிகள் தான் அதிகம் பேசுவார்கள். இப்படி இவர்கள் அதிகம் பேசுவதாலேயே வீட்டில் பெரிய பெரிய சண்டைகள், வெடிக்க ஆரம்பிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின் பெண்கள் தான் அதிகம் வாக்குவாதம் செய்வதுடன், குறைகளும் சொல்வார்கள்.

    அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் பேசும் போது, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நகைச்சுவையாக பேசுகிறேன் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சரளமாக பேசிவிடுவார்கள். இப்படி எதையும் நினைக்காமல் பேசுவதால் தான் சண்டைகள் வீட்டில் வருகின்றன.

    ஆனால் மனைவிகள் கணவனிடம் எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து பேசி வந்தால், வாழ்க்கையானது இனிமையாக செல்லும். பெரும்பாலான மனைவிகள் கணவனிடம் எதை சொன்னாலும் அதை திரும்ப திரும்ப சொல்லி, நீங்கள் சொன்னதையே மறக்க வைப்பது.

    உதாரணமாக, மாலையில் வேலை முடிந்து வரும் போது மறக்காமல் ஒரு பொருளை வாங்கி வரச் சொன்னால், அதை அவர் வீட்டிற்கு வருவதற்குள் குறைந்தது 50 முறையாவது போன் செய்து சொல்வது. ஆண்களுக்கு வீட்டு வேலையை செய்ய சொன்னால் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கே தோன்றினால், அவர்கள் எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்வார்கள்.

    ஆனால் விடுமுறை நாட்களில் அவர்களிடம் வீட்டு வேலையை செய்யுமாறு சொல்லக்கூடாது. இதனால் வீட்டில் சண்டைகள் தான் அதிகமாகும். சண்டை வந்தால், அப்போது உடனே உங்களை திருமணம் செய்து நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது.

    இதனால் அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும். உங்க அம்மா (மாமியார்) என்னை எதிரி போல எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கிறார்" என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு ஆணுக்கும் தன் மனைவி தன் அம்மாவை எதிர்த்து பேசினால் பிடிக்காது.

    அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?

    By: ram On: 16:52
  • Share The Gag

  • ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீரின் ஆதிபகவன் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சமுத்திரகனி இயக்கத்தில் நடித்த நிமிர்ந்து நில் படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் ஜெயம் ரவியின் மார்க்கெட்டில் பெரிய பாதிப்பில்லை. லட்சுமணன் இயக்கும் ரோமியோ ஜூலியட், ஜெயம்ராஜா இயக்கும் தனி ஒருவன், மற்றும் சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருமளவுக்கு பிஸியாகவே இருக்கிறார் ஜெயம் ரவி. இதில் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

    இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்! அரவிந்த்சாமி கூறியதை ஆமோதிக்கும் வகையில், தனி ஒருவன் படக்குழுவைச் சேர்ந்தவர்களும், அப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கவில்லை, வேறொரு முக்கியமான கேரக்டரில் தான் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

     வில்லனாக நடிக்க வில்லை என்றால் வேறு என்ன வேடத்தில் நடிக்கிறராம் அரவிந்த்சாமி! ஜெயம்ரவியின் அப்பா வேடத்தில் நடிப்பதாக சிலர் காதைக்கடிக்கிறார்கள். அப்படியென்றால் வில்லனாக நடிப்பது யார்? இவன் வேற மாதிரி, மான் கராத்தே படங்களில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணாதான் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்கிறார்!

    வைரமுத்துவிடம் நலம் விசாரித்த ரஜினி..!

    By: ram On: 08:22
  • Share The Gag

  • உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய வைரமுத்துவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

     ஏற்கனவே லேசான முதுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் விழா அலைச்சல் காரணமாக வலி அதிகரித்தது, இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தவுடன் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், ரஜினிகாந்த், வைரமுத்துவை நேரில் சந்தித்து உடல் நிலை பற்றி நலம் விசாரித்தார். அவருக்கு மலர் செண்டு தந்த ரஜினி, விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தினார். ரஜினியும், வைரமுத்துவும் நெருங்கிய நண்பர்கள், ரஜினியின் படங்கள் பெரும்பாலனவற்றுக்கு வைரமுத்து தான் படால்கள் எழுதியுள்ளார். மேலும் ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது வைரமுத்து அவரை சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கதது.

    பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...!

    By: ram On: 07:25
  • Share The Gag

  • குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க  வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட  தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

    இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய்  உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த  உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

    இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி  குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி  தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

    இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால்  குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல்  போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.

    ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர்,  ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க  வேண்டும்.

    குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும்  வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும்  பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

    உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல்  போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.