Monday, 27 October 2014

அஜித்திற்கு ஓப்பனிங் சாங் எழுதும் விக்னேஷ் சிவன்!

By: ram On: 19:46
  • Share The Gag
  • கௌதம் இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தில் அஜித்தின் ஓப்பனிங் சாங் 'அதாரு அதாரு உதாரு உதாரு' என தொடங்குகிறது.

    இந்த பாடலை போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு அஜித்தும், அருண் விஜய்யும் டான்ஸ் ஆடுகிறார்கள். சதீஷ் இந்தப் பாடலுக்கு கொரியோகிராஃபி செய்கிறார். இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

    ஏற்கெனவே, அனிருத் இசையில் 'சான்ஸே இல்லை - சென்னை' ஆல்பத்துக்காக விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தி 5 நாள் வசூல் வேட்டை! முழு விவரம்

    By: ram On: 17:08
  • Share The Gag
  • கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிறது. தற்போது இப்படத்தின் 5 நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.

    இதில் இப்படம் தமிழ் நாட்டில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்கள், ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது இந்த வருடத்தின் மாபெரும் வசூல் சாதனை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    மாஸ் படத்தில் தலதளபதி! வெங்கட் பிரபு பதில்?

    By: ram On: 08:06
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் தீராத பிரச்சனைகளாக வளர்ந்து நிற்பது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் தான் முடியும் என்று பலர் கூறுகின்றனர்.

    இந்நிலையில் இருவரையும் வைத்து என்னால் படம் எடுக்க முடியும் என்று பேட்டி கொடுத்தவர் வெங்கட் பிரபு. தற்போது டுவிட்டர் ரசிகர்கள் பலர் மாஸ் படத்தில் அஜித், விஜய்யை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்கும் படி கேட்டு வருகின்றனர்.

    இது வரை வெங்கட் பிரபு இது குறித்து பேச வில்லை, விரைவில் ரசிகர்களுக்கு நல்ல பதிலை அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.