தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில்
வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து அவரை இன்னும் பெரிய ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நினைத்தனர். ஆனால், அந்த நேரம்பார்த்து நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறேன் என்று புதிய படங்களை தவிர்த்ததால் சில முக்கியமான படங்களை அப்போது இழந்தார் நயன்தாரா.
அதையடுத்து, பிரபுதேவாவுடனான திருமண விவகாரம் கைகூடாதால் மீண்டும் நடிக்க வந்த நயன்தாராவை, வித்யாபாலன் நடித்த கஹானி இந்தி படத்தின் ரீமேக்கான அனாமிகாவில் நடிக்க வைத்தார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. அதே படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்தியில் ஹிட்டடித்த அப்படம் தமிழ், தெலுங்கில் சுத்தமாக ஓடவில்லை.
அதனால் அதன்பிறகு நயன்தாராவை தென்னிந்தியாவின் வித்யாபாலனாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்த இயக்குனர்கள் பின்வாங்கி விட்டனர். இருப்பினும், இப்போது தன்னை டைட்டீல் வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்த அந்த இயக்குனர்களுக்கு மீண்டும் அழைப்பு விட்டு வருகிறாராம் நயன்தாரா. தென்னிந்தியாவின் வித்யாபாலனாகி விட வேண்டும் என்ற துடிப்பு முன்பை விட அவரிடத்தில் இப்போது இன்னும் அதிகமாகி உள்ளதாம்.
0 comments:
Post a Comment