பிரபலங்கள் இணைந்து நடித்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் பாட்டு பாடினால் சொல்லவா வேண்டும், யுவனும், இளையராஜாவும் இணைந்தாலே பாடல்கள் பட்டாசு தெறிக்கும்.
மேலும் இதில் தனுஷும் இணைகிறார் என்றால் டபுள் சந்தோஷம் தான். நாம் முன்பே சொல்லியது போல் தனுஷ் பாடல் எழுதி, யுவன் இசையில் இளையராஜா பாடிய பாடல் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ம் தேதி வை ராஜா வை படத்தில் இடம்பெற்ற இந்த ஒரு பாடல் மட்டும் ரசிகர்களுக்காக வெளிவரவுள்ளது. இந்த பாடல் மூவ் யுவர் பாடி என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்குமாம்.
0 comments:
Post a Comment