‘அரவான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிவரும் படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், வேதிகா, பிருத்விராஜ், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை வசந்தபாலன் பழம்பெரும் நடிகர் கிட்டப்பா-கே.பி.சுந்தரம்பாளின் காதல் கதையை மையமாக வைத்து எடுத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், வசந்தபாலன் இதை மறுத்து வந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் வேதிகாவின் கதாபாத்திரம் கே.பி.சுந்தரம்பாளை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை வசந்தபாலன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நாசரின் கதாபாத்திரமும் தமிழ் திரையரங்குகளின் தந்தை என போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வேதிகா இப்படத்தில் கானகோகிலம் வடிவாம்பாள் என்ற பெயரில் நடிக்கிறார் என்றும் வசந்தபாலன் கூறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment