Tuesday, 12 August 2014

Tagged Under: ,

லைக்கோ, லைக் இல்லையோ? ‘பாதுகாப்பு கொடுங்க…’ கேட்காத விஜய், கொடுக்காத போலீஸ்!

By: ram On: 16:58
  • Share The Gag

  • லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி விடுபடுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இயக்குனரையும் அவர் சொல்லும் கதையையும் மட்டுமே நம்பும் ஹீரோக்கள், அந்த இயக்குனர் சொல்லும் நிறுவனத்திற்காக நடிக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பின்னணியில் இப்படியொரு பகீர் இருக்கிறதென்றால் அதற்கு பாவம்… விஜய்தான் என்ன செய்வார்? இப்படியெல்லாம் அவரது ரசிகர்கள் வருந்தினாலும், ஏதோ தேச துரோகியை போல விஜய்யை சித்தரிப்பதை நடுநிலையாளர்களால் கூட பொறுத்துக் கொள்ள முடியாதுதான். போகட்டும்…

    தற்போதைய நிலவரம் என்ன? அவரது நீலாங்கரை வீட்டை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக அறிவித்தார்கள் அல்லவா? அந்த இக்கட்டான நேரத்தில் கூட விஜய் சார்பாக காவல் துறையில் பாதுகாப்பு கோரப்படவில்லையாம். அங்கேயும் விருந்தாளிதான் தானாக மூக்கை நுழைத்திருக்கிறார். காவல் துறைக்கு போனது லைக்காவின் சென்னை கிளைதான். அங்கிருக்கும் அதிகாரிகள் காவல் துறையை அணுகி, நாங்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். எனவே அவரது வீட்டிற்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்களாம்.

    இதையடுத்துதான் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது அவர்களும் இல்லை. ஏன்? ஒரே ஒரு நாள் மட்டும் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் இப்போது முற்றிலும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. அதற்கான காரணம்தான் ஒருவருக்கும் புரியவில்லை.

    இதன் பின்னால் சொல்ல முடியாத சூட்சுமம் ஏதும் இருக்குமோ?

    0 comments:

    Post a Comment