வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உருவாகி வருகிறது மாஸ். சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை இசிஆரில் நடந்து வருகிறது.
இதுவொரு ஹாரர் த்ரில்லர். இந்தப் படத்தில் மூன்று பேர் ஆவிகளாக வருவதாக செய்தி கசிந்துள்ளது. கருணாஸ், ஸ்ரீமன் மற்றும் டேனியல் ஆகியோர் இந்தப் படத்தில் ஆவியாக வருகிறார்கள்.
அவர்கள் ஒருசிலரின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். அதனை மையப்படுத்தி காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பட யூனிட் செய்தி கசியவிட்டுள்ளது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
0 comments:
Post a Comment