சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை பற்றி யாரோ வதந்திகளை கிளப்பிவிட, படக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.
இப்படத்தை ரிலிஸ் செய்யவிட மாட்டோம் என சில மாணவர்கள் அமைப்புகள் கூறி வந்த நிலையில். தற்போது மேலும் அவர்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்களாம்.
அது என்னவென்றால் அனைவரும் விஜய்யின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டப்போகிறார்களாம்.
மேலும் இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம் என கூறி வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழு மட்டுமில்லாமல் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
0 comments:
Post a Comment