சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என்று தொடர்ந்து என்னுடைய படங்களுக்கே எதிர்ப்பு வருகிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கடந்தாண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் தான் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் உருவாகும் என்று கமல் அப்போது வேதனை தெரிவித்தார். பிறகு ஒருவழியாக படம் ரிலீஸாகி ஹிட்டானது. தொடர்ந்து விஸ்வரூபம்-2 படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில், இந்தப்படத்திற்கும் எதிர்ப்பு வருமா என்று கமல் தரப்பிடம் கேட்டபோது, நிச்சயம் வராது, படத்தில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம் என்றார். அதேசமயம் தொடர்ந்து சண்டியர், ஹேராம், விஸ்வரூபம் என தொடர்ந்து என் படங்களுக்கே எதிர்ப்பு கிளம்புகிறது என்று வேதனைப்பட்டார். தற்போது உத்தமவில்லன் படத்தில் நடித்து முடித்துள்ள கமல், உத்தமவில்லன் படம் வெளியானதும், விஸ்வரூபம்-2 வெளிவரும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment