சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு சில காட்டுப் பகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளன. இதையடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோருடன் நடிக்கிறார்.
சிம்புவுக்காக காடு காடாக சுற்றப் போகும் விஜய்
இந்த படத்திற்காக சில லொகேஷன்களை தேர்வு செய்துள்ளார்களாம். கேரளாவில் இருக்கும் சாலக்குடி, நெல்லியம்பதி காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவிலும், வட இந்தியாவிலும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தின் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதன்முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். முன்னதாக அவர் விஜய்யுடன் சேர்ந்து கத்தி படத்தில் ஒரு டூயட் பாடலை பாடுகிறார்.
சிம்பு படத்தில் ஸ்ருதியின் கதாபாத்திரம் தன்னை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் ஹன்சிகா.
0 comments:
Post a Comment