தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரக்கொண்டது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தாய்ப்பாலுக்கு மாற்றாக பல தாய்மார்கள், பல்வேறு காரணங்களால் பசுவின்பால் தருவதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.
ஆனால் இந்தப் பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தேசிய குடும்ப நல சர்வேயில் இது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வல்லுனர்களின் ஆய்வுத்தகவல்களை மேற்கோள்காட்டி, கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய சுகாதாரம், பொது நல இன்ஸ்டிடியூட்டின் உயிரி ரசாயனம், ஊட்டச்சத்து துறை தலைவராக பணியாற்றிவரும் தேவநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், "உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காணவேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது. குழந்தையின் வேகமான வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் பசுவின் பாலில் இல்லை'' என்றார்.
0 comments:
Post a Comment