கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் மெட்ராஸ். படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது.
இயக்குனர் ரஞ்சித் இதற்கு முன்பு பிரபல இயக்குனர் ஒருவரிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது அந்த இயக்குனர் உருவாக்கிய கதைதான் ‘மெட்ராஸ்’ . படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் நின்று போயிருக்கிறது.
தற்போது இந்த படத்தின் கதையை கேட்டு தெரிந்துகொண்ட அவர், தன் உதவி இயக்குனர் ரஞ்சித் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment