இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கோச்சடையான் படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த், ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. தான் படப்பிடிப்பிற்கு செல்லும் இடங்களில் எப்படி நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்க மறப்பதில்லையோ அப்படி தான் அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்தவும் நடிகர் ரஜினி தவறுவதில்லை.
அந்தவகையில் ஷிமோகாவில் ‘லிங்கா’ படப்பிடிப்பின் போது கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இன்னும் மூன்று வாரங்கள் வரை ஷிமோகாவைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
கோயிலின் நிர்வாக அலுவலர் மூர்த்தி, கண்காணிப்பாளர் ராமகிருஷ்ண அடிகா ஆகியோரும் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரஜினி வருவதை அறிந்த கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததுமட்டுமல்லாமல் அவருக்கு பொன்னாடை அம்மனின் பிரசாதமும் வழங்கினர்
0 comments:
Post a Comment