தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி, இரு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றோருடனும் நடித்துள்ளார். பிறகு அரசியலில் இணைந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கு பட மொன்றில் மீண்டும் நடிக்கிறார்.
விஜயசாந்தி ஏற்கனவே நடித்து வெற்றிகரமாக ஓடிய ஓசே ராமு லம்மா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர். இதில் விஜயசாந்தி நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாகம் 1997–ல் வெளியாகி 200 நாட்கள் ஓடிய விஜய சாந்தியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருந்தது. தாசரி நாராயணராவ் இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.
0 comments:
Post a Comment