நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர். அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம். பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு. இன்றைய "பாஸ்ட் பூட்" காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று பாருங்கள் என்று நமக்கு ஒரு பாடமாகவே விளங்குகிறது நம் முன்னோர் விட்டு சென்ற இந்த திண்ணைகள்.
0 comments:
Post a Comment