தன் குரலாலும், உடல் மேனரிசத்தாலும் பலரை கவர்ந்தவர் மனோகர். இவரை பலருக்கும் ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும், ஆனால் நமக்கு தெரியாமல் இவருக்கு பல முகங்கள் உள்ளது.
மனோகர் சென்னையில் உள்ள ராயபுரத்தில் தான் வசித்து வருகிறார், காமெடி நடிகர் சந்தானமும் இவரும் பள்ளி தோழர்களாம், சினிமாவின் மீது கொண்ட காதலால் தனது வங்கி வேலையை கூட தற்போது விடப்போகிறாராம்.
மேலும் இவர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் நிறைய காட்சிகள் நடித்தாராம், ஆனால் படத்தின் நீளத்தை காரணம் காட்டி இவர் வரும் காட்சிகளை கட் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment