Sunday, 10 August 2014

Tagged Under: ,

பேச்சிலர்களுக்கான சமையல் குறிப்பு...உங்களுக்குதாங்க..!

By: ram On: 09:21
  • Share The Gag

  • வேலை (வெட்டி)க்கு போய் ரூமுக்கு வந்தால் கொலை பசி எடுக்கிறதா...
    அவசரத்துக்கு சோறு மட்டும் வடித்துக்கொண்டு, கை பச்சைப்புளி கரைத்து குழைத்து அடித்தால் அமிர்தமாக இருக்கும். ஆனால், இதையே இதனமும் உட்கொண்டால் புளி ரத்தத்தை சுண்டச் செய்துவிடும்.

    ஆடிக்கு ஒருக்கா... அம்மாவாசைக்கு ஒருக்கா உட்கொள்ளலாம்...

    கை பச்சைப்புளியா பேரே வித்தியாசமா இருக்கு என்றுதானே யோசிக்கிறீர்கள்...
    வேலூர் மாவட்டத்தில் கைப்பச்சைப்புளி ரொம்ப பேமஸ்...

    கை பச்சைப்புளி செய்வது எப்படி?


    தேவையான பொருட்கள்
    (ஒரு வேளைக்கான அளவு)

    புளி - நெல்லிக்காய் அளவு
    பச்சை மிளகாய் - 3
    பெரிய தக்காளி - 1
    பெரிய வெங்கயம் - 1
    உப்பு, கரிவேப்பிலை, கொத்துமல்லி, தண்ணீர் தேவையான அளவு. நல்லெண்ணெய் ஒரு மேஜை கரண்டி.

    செய்முறை

    புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவிடவும், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஊறவைத்துள்ள புளியை நன்றாக கரைத்துக்கொண்டு, புளி தண்ணீரை வடிகட்டி, சக்கையை நீக்கிவிடவும்.
    பின்னர், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரில், நறுக்கி வைத்துள்ளவற்றை கொட்டி ஒரு கலக்கு கலக்கவும். அதில் உப்பு, கொத்தமல்லி, கரிவேப்பிலையை கிள்ளி போட்டால் கை பச்சைப்புளி தயார்.

    நல்லண்ணெயை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? சோற்றில் கை பச்சைப்புளியை ஊற்றி கலக்கும்போது நல்லெண்ணையையும் ஊற்றி கலந்து உட்கொண்டால், பச்சை மிளகாவின் காரமும் தெரியாது. நல்லெண்ணையும் உடலுக்கும் நல்லது.
    அவசரத்தில் செய்து பார்த்து சாப்பிட்டு அசத்துங்கள்....

    0 comments:

    Post a Comment