Saturday, 11 October 2014

Tagged Under: , ,

வெண்நிலா வீடு மிகவும் சோகம் மூழ்கிய வீடாக உள்ளது - திரைவிமர்சனம்!

By: ram On: 19:37
  • Share The Gag
  • ஒரு நடுத்தர குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக ஆசைப்படும் போது என்ன ஆகிறது என்பதை சொல்ல வருகிறது இந்த வெண்நிலா வீடு. இப்படத்தில் சின்னத்திரை புகழ் செந்தில், விஜயலட்சுமி போன்றோன் நடிக்க வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ளார்.

    படத்தில் கதையாக பார்த்தோமேயானால் தன் கணவர் ‘மிர்ச்சி’ செந்திலின் முதலாளி வீட்டு கல்யாணத்திற்கு செல்வதற்காக பக்கத்து வீட்டு தோழியிடம் தங்க நகைகளை இரவல் வாங்கி அணிந்து செல்கிறார் விஜயலட்சுமி. திருமணம் முடிந்து திரும்புகையில் அந்த நகைகள் களவாடப்படுகின்றன. இதனால்... கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் மதிப்புடைய அந்த நகைகளை திட்டமிட்டு களவாடிவிட்டார்கள் என்ற பழி செந்தில், விஜயலட்சுமி மீது விழுகிறது. இந்த இக்கட்டான சூழலுக்குப் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள்தான் ‘வெண்நிலா வீடு

    நடிகர், நடிகைகளின் பங்களிப்பு பார்க்கும் போது செந்தில் தன் இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். ‘‘இருக்கிற நிலத்தை இப்படி கூறுபோட்டு வித்தா யார் சோறு போடுவா?’’ என்று உணர்ச்சிவசப்படும் போதும், கந்துவட்டி காரரை பழிவாங்கும் இடத்திலும் செந்திலின் நடிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்! பொறுப்புள்ள மனைவியாக, ஆசைகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழும் ஒரு கிராமத்து அப்பாவி பெண்ணாக வரும் விஜயலட்சுமி நிச்சயம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பார்.

    கந்துவட்டிக்காரராக ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன் மிரட்டியிருக்கிறார். கதைக்கேற்ற சரியான வில்லன்! ப்ளாக் பாண்டி சில இடங்களில் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் படத்தின் தேவைக்கேற்ப பங்களித்திருக்கிறார்கள்.

    படத்தின் பலம் அனைத்து நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதையும், போராடிக்காமல் படம் பார்க்க வைத்த திரைக்கதையும்.

    பலவீனம் ஹீரோ, ஹீரோயினின் கிராமத்து ஃப்ளாஷ்பேக் காட்சிகள். பாடல்களும், பின்னணி இசையும்.

    வெண்நிலா வீடு மிகவும் சோகம் மூழ்கிய வீடாக உள்ளது.

    0 comments:

    Post a Comment