Saturday, 11 October 2014

Tagged Under: ,

ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த உதயகுமார்?

By: ram On: 13:40
  • Share The Gag
  • சூப்பர் ஸ்டார் என்றும் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையை நீட்ட மாட்டார். ஆனால் அவரை சுற்றி அரசியல் என்ற பிரச்சனை எப்போதும் வலம் வந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் ரஜினியை கடந்த சில நாட்களாக முன்னணி தேசிய கட்சி ஒன்று தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப.உதயகுமாரன் தன் பேஸ்புக் பக்கத்தில் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதில் ‘உங்களை அழைக்கும் கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள்.’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    0 comments:

    Post a Comment