Saturday, 11 October 2014

Tagged Under:

பானையில் தலை சிக்கிக் கொண்ட 2 வயதுக் குழந்தை....இறுதியில் ...?

By: ram On: 20:22
  • Share The Gag
  • கேரளாவில் பானையில் தலை சிக்கிக் கொண்டதால் 2 வயதுக் குழந்தை 3 மணி நேரம் தவியாய்த் தவித்தது.

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மோனிசா. இத்தம்பதியரின் ஒரே மகள் அனன்யா (2 வயது), சில வாரங்களுக்கு முன்னர் தன் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    பெற்றோர் இருவரும் வெளியே சென்றிருந்த அவ்வேளையில், சுட்டிக் குழந்தையான அனன்யா

    ஒரு பானையை எடுத்து விளையாடியபோது அது எதிர்பாராதவிதமாகக் குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டது.

    இதனால் பயந்துபோன அந்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்தபாட்டியும் அண்டை வீட்டுக்காரர்களும், பலவிதமாக முயற்சித் தும் பானையை அகற்ற முடியவில்லை.

    அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்றும் பலன் இல்லை. இறுதியில் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை நடத்தும் ஒருவர் பானையை அறுத்து எடுத்தார். இதன் பிறகே குழந்தை சிரிக்கத் தொடங்கியது.

    0 comments:

    Post a Comment