சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட நேரம் ஒதுக்குமாறு 'கத்தி' படக்குழு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் சென்சார் முடிந்தவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்காமல் இருப்பதால், படம் தீபாவளிக்கு வெளியாகிறதா என்று கேள்விகள் நிலவின.
இது குறித்து 'கத்தி' படக்குழு தரப்பில் விசாரித்தபோது, "படத்தின் பணிகள் முடிந்து, சென்சார் அதிகாரிகள் விண்ணபித்து விட்டோம். சென்சார் அதிகாரிகள் இன்னும் இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சென்சார் முடிந்தவிடும் என்று பார்க்கிறோம். சென்சார் முடிந்தவுடன் தான் பேட்டியளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது படக்குழு.
சென்சார் முடிந்தவுடன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும். ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் உள்ளிட்ட அனைவருமே படம் வெளியாகும் முன்பு பேட்டிகள் என படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபடுவார்கள். இம்முறையும் விஜய் படம் குறித்து பேட்டியளிக்க மாட்டார்" என்றார்கள்.
இசை வெளியீட்டு விழா எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு, 'கத்தி' புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் 'கத்திரி'க்கு பிறகு விரைவில் விடை தெரிந்துவிடும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

0 comments:
Post a Comment