Saturday, 11 October 2014

Tagged Under:

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பு ? எச்சரிக்கை...எச்சரிக்கை..!

By: ram On: 08:46
  • Share The Gag
  • நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான்.

    காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.

    இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

    0 comments:

    Post a Comment