Monday, 20 October 2014

Tagged Under: ,

15 வயது குழந்தைக்கு 60 வயது தாயாக இருக்க மாட்டேன் - சமந்தா அதிரடி!

By: ram On: 20:50
  • Share The Gag
  • தொடர்ச்சியா ஜீவா, சூர்யா, விக்ரம், விஜய், என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சமந்தா தற்போது ‘கத்தி’ ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    ஏற்கனவே சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன் என அதிர வைத்த சமந்தா அடுத்த அதிரடியாக தனது திருமணம் குறித்து பதில் கூறியுள்ளார்.

    சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொள்வேன் எனக் கூறி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

    “இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன்.

    அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன்.

    எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை. சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன், ” என்றும் சொல்லியிருக்கிறார்.

    0 comments:

    Post a Comment