Monday, 20 October 2014

Tagged Under:

சர்க்கரை நோய் - ஒரு ஆய்வு தெரியாதவர்களுக்கு...!

By: ram On: 22:34
  • Share The Gag

  •     நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரை நம் செயல்பாட்டுக்குத் தேவைப்படும் சக்தியாக முறையாக நம் உடல் மாற்றாத நிலையில் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

        சர்க்கரை மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளும் போது அதை நம் உடல் குளுக்கோசாக மாற்றுகிறது. உடனடித் தேவைக்காக குளுக்கோசானது நம் இரத்த நாளத்தில் சேருகிறது அல்லது கல்லீரலில் கிளைகோஜினாக எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறைப்படுத்தும் முறை அதாவது குளுக்கோசாக மாற்றும் தன்மை ரத்தத்தின் போதுமான அளவு இல்லாதபோது சர்க்கரை நோய் என்று கூறப்படுகிறது. எனவே குளுக்கோஸ் கொஞ்சமாகச் சேர்ந்து அபாய அளவை எட்டுகிறது. மன அழுத்த கோளாறு அறிகுறிகள் அதைத் தொடர்ந்து உடலில் முக்கிய பாகங்கள் அழிக்கப்படுகின்றன.

        நம் உடலில் போதுமான இன்சுலின் (உடலில் உள்ள கணையத்தில் ரகசியமான ஹார்மோனான இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை முறைப்படுத்துகிறது.) சுரக்காதபோது இது ஏற்படுகிறது அல்லது உடலில் உள்ள திசுக்களால் இன்சுலின் முழு சக்தியோடு திகழாமை.

        சர்க்கரை நோய் குடும்பத்தில் வருகிறது. ஆனால் பாரம்பரிய காரணிகளை விட நம் சொந்த பொறுப்புகளே காரணம். உதாரணமாக முதியோருக்கு அதிக எடை காரணமாக எளிதில் சர்க்கரை நோய் உருவாகும்.

        இரண்டு வகையான சர்க்கரை நோய் பொதுவாகக் காணப்படுகிறது. டைப் 1 சர்க்கரை நோயானது இன்சுலினைச் சார்ந்திருக்கும் சர்க்கரை நோயாளிகள். இது குறிப்பாகக் குழந்தைப் பருவத்திலேயே அல்லது இளமை பருவத்திலேயே உருவாகும். இது மிகவும் அதிக கருக்கொண்ட நோயாகும். உடற்பயிற்சியுடன் வாழ்க்கை முழுவதும் இன்சுலின் தேவைப்படும். மேலும் கட்டுப்பாடான உணவு முறைகளும் அவசியம்.

        எனினும் பொதுவான சர்கரை நோய் என்பது முதியவர்களைத் தாக்கும் டைப் 2 சர்க்ரை நோயாகும் அல்லது இன்சுலினை சார்ந்திராத சர்க்கரை நோயாகும்.

        ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் முதிய வயதில் முறையாக அதிகரிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

        பெரும்பாலான டைப் 2 சர்க்கரை நோயாளிளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படாது. உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, சர்க்கரை நோயை எதிர்க்கும் மருந்துகள் ஆகியவற்றுடன் அவர்கள் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.

        சர்க்கரை நோய் உள்ள சிலர் மயக்கமாக உணர்தல், தாகம் அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, விவரிக்க முடியாத எடைக்குறைவு, களைப்பு, தெளிவற்ற பார்வை, தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, குணப்படுத்தும் தன்மை மெதுவாக குறைதல் மற்றும் காயங்கள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்தப் பிரச்னைகள் டாக்டரிடம் தெரிவிக்கப்பட வேண்டும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களிடம் இருந்து ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனையின் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக சர்க்கரை நோய்க்கு சம்பந்தம் இல்லாத அறுவை சிகிச்சையின்போது நடத்தப்படும் பரிசோதனைகளின்போது சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படலாம்.

        நீண்டகால சர்க்கரை நோய் காரணமாக ஸ்டிரோக், கண்கள் குருடாதல், இதய நோய், கிட்னி கோளாறு, நரம்பு கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தத்தில் குளோக்கோஸ் அளவை கட்டுப்பாடுடன் வைத்துக்கொண்டால் இந்தப் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர்.

        ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிக அதிகமாக இருப்பது அல்லது மிகக் குறைவாக இருப்பதும் அவசர மருத்துவத்தை நாட வேண்டிய பிரச்னையாகும். ரத்தத்தின் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தாலோ அல்லது மிகக் குறைவாக இருந்தாலோ சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும். சர்க்ரை நோயுடன் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ செய்ய வேண்டும்.

        சர்க்கரை நோய் என்பது குணப்படுத்த முடியாதது. ஆனால், இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தேவைப்படின் இன்சுலின் அல்லது மாத்திரைகள் உதவியுடன் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

        ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும் பட்சத்தில் உணவுக்கட்டுப்பாடு திட்டம் மிக முக்கியமானதாகும். ஒரு சர்க்கரை நோயாளியின் அன்றாட நடவடிக்கை அவரின் உடல் எடை ஆகியவற்றைக் கொண்டு உணவுக் கட்டுப்பாடு குறித்து டாக்டர் தீர்மானிப்பார். எடை அதிகம் உள்ள நோயாளிகளுக்கு எடைக் குறைவு உணவு கட்டுப்பாட்டு திட்டம் அவசியமாகும். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
       
    ரத்தத்தில் அதிக அளவு இருக்கும் குளுக்கோஸ் சக்தியாக மாறுவதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். நோயாளியின் பொதுவான உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி திட்டத்தை வகுத்து டாக்டர் உதவுவார். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது முக்கியமானதாகும்.
       
    உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியாவிட்டால் மருந்துகள் (இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகள்) மூலம் சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சில நேரங்களில் மருந்துகள் இல்லாமலேயே சில நோயாளிகள் நல்ல நிலையில் இருப்பர். ஆனால் சில குறுகிய கால உடல் நலக் குறைவு அல்லது தொற்று ஏற்படும்போது மருந்துகள் தேவைப்படுகிறது.
       
    சர்க்கரை நோயாளிகள் பாதத்தை பராமரிப்பது மிக முக்கியமாகும். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டால் பாதத்துக்கு செல்லும் ரத்தம் நிறுத்தப்படலாம் அல்லது குறையும் உணர்வு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகள் வலி அல்லது கொப்புளம், வெடிப்பு ஏற்படுகிறதா என்றும், தொற்றுக்கள் அல்லது தோலில் காய்ப்பு ஏற்படுகிறதா என்றும் பாதத்தின் தோல் பகுதியை தினமும் கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் தோன்றினால் உனடியாக உங்களின் குடும்ப மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
       
    இதர நபர்களிடம் இருந்து தொற்றுப் பரவுவதை தடுக்கும் குறைவான சக்தி பெற்றவர்களாக சர்க்கரை நோயாளிகள் இருப்பர். சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடலின் தோல் பகுதியில் சிறு காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். தோல் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். தோலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்படுவதிலிருந்து தோலைப் பாதுகாக்க வேண்டும்.
       
    சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டங்களில் கண்பார்வை குறைவாடு ஏற்படுவது பொதுவான பிரச்னையாகும். ஒவ்வொரு ஆண்டும் கண்பார்வை குறித்து கண் மருத்துவரிடம் பரிசோனை செய்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.

    0 comments:

    Post a Comment