Monday, 20 October 2014

Tagged Under:

வீட்டை அழகுபடுத்த இணையதளம்

By: ram On: 12:06
  • Share The Gag
  • புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்திப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இந்த விருப்பத்தால் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அறையும் எப்படி அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்பதைக் காண்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகச் சிலர் வீட்டு உள் அலங்கார நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவதுடன், வீடு அழகுபடுத்தும் பணிகளை அவர்களிடம் ஒப்படைப்பதுண்டு. சிலர் தங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் வீடுகளில் செய்யப்பட்டிருக்கும் அழகுபடுத்தல் பணி களைப் போய்ப் பார்த்து அதில் சில மாற்றங்களைச் செய்து தங்கள் வீடுகளில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வதுமுண்டு. இருப்பினும், சிலருக்குப் பிற வீடுகளைக்காட்டிலும் தங்கள் வீடு முழுவதையும் புதியதாக, வேறு எவரும் செய்திடாததாக அழகுபடுத்தி விட வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கும். இந்த எண்ணங்களையெல்லாம் மனதில் கொண்டு, பல வண்ணங்களில் வீடு அழகு படுத்தல் குறித்த படங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விதமாக ஆங்கில மொழியில் ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வோர் அறையையும் எவ்வாறு அழகூட்டுவது என்பதைத் தொடர்புடைய பல அழகிய ஒளிப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைத் தலைப்புகளுடன் தொடர்புடைய பல்வேறு ஆலோசனைகளும், அதற்குரிய அழகிய ஒளிப்படங்களுடன் கிடைக்கின்றன. இந்த ஒளிப் படங்களில் காணப்படும் அழகூட்டலை நாம் தேர்வு செய்து, நம்முடைய வீட்டின் ஒவ்வொரு அறையையும் அழகுபடுத்திப் பார்க்கலாம்.

    வீடு அழகூட்டலுக்கான பல்வேறு அழகிய ஒளிப்படங்களைக் காண http://www.moderndecoration.org/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பார்க்கலாம்.

    0 comments:

    Post a Comment