திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப்
பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல்
இருப்பதுமே, இந்த
செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த
காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு
சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது.
மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வழியை ஏற்படுத்தும். அப்படி
அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன
நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள்
கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...
டைவர்ஸிற்குப் பின் ஆண்களின் மனநிலை...
1. முதலில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு
பொறுப்பும் இருக்காது, ஒருவித சுதந்திரமாக இருப்பதாக நினைப்பார்கள்.
அவர்கள் ஒரு சுதந்திரப் பறவை போல் உணர்வார்கள். மேலும் ஆண்களுக்கு பொதுவாக
எந்த ஒரு பிடிக்காத வாழ்க்கையும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும்,
பொறுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி இருக்கும் போது மனைவி நிறைய
கண்டிசன் போட்டால் அவர்களுக்கு அது நரகமாகிவிடும். இப்போது அந்த வாழ்க்கை
இல்லையென்று நினைக்கும் போது அவர்களைப் போல் சுதந்திரப் பறவை யாராகவும்
இருக்க முடியாது என்பது போல் இருப்பார்கள்.
2. சமைக்கும்
நேரத்தில் மிகவும் வருந்துவர். ஏனெனில் சமைத்து சாப்பிடவேண்டுமென்றால்
அவர்களுக்கு பிடிக்காத விஷயம். அந்த நேரத்தில் அவர்கள் மனைவியை நினைத்து
மிகவும் வருந்துவர். மேலும் சாப்பிட வேண்டுமென்றால் அருகில் இருக்கும்
ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் போய் நண்பர்களோடு சாப்பிடுவது என்று இருக்கும்.
இப்படி சாப்பிடுவது கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் போக போக
அழுத்துவிடும். இதுவே டைவர்ஸ் ஆன ஆண்களின் பெரும் கவலை ஆக இருக்கும்.
3. டைவர்ஸ் ஆகியதும், முதலில் ஆண்களின் மனதில் தோன்றுவது என்றால் அது "என்
துணியை யார் துவைப்பர்? முதலில் ஒரு வேலைக்காரி வேண்டும்" என்பது தான்.
அப்போது அவர்கள் இதுவரை நம்மை பார்த்துக் கொண்ட, வீட்டை எல்லாம் சுத்தமாக
வைத்துக் கொண்ட அவர்களது மனைவியை நினைப்பர். ஆனால் இப்போது... என்ற
கேள்விக் குறி மனதில் வரும். மேலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு அவருடைய
மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை அடிக்கடி நினைவுக்கு வரும். பிறகு பழைய கால
காலேஜ் வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வந்து, அவர்கள் தங்களது லைப் ஸ்டைலையே
மறுபடியும் மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைப்பர்.
4. டைவர்ஸ்
ஆனப் பின் மறுபடியும் 'பேச்சுலர்'. அப்போது அவர்கள் யாருடன் வேண்டுமானாலும்
பழகலாம். யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். மேலும் இப்படியே
தனியாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கவும் போவதில்லை. ஆகவே தனக்கு ஒரு துணை
இருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்த பெண்ணைப் பார்த்து தோன்றுகிறதோ,
அவர்களிடம் அவர்கள் போய் பேசி பழகுவது என்றெல்லாம் நினைப்பர். அது
தவறில்லையே!!!
5. சுதந்திரப் பறவை ஆனப் பின், இனிமேல் மனைவி
தொல்லை இருக்காது. ஆகவே இனிமேல் "நான் என்ன செய்கிறேன்?", "எங்கு
இருக்கிறேன்?", "எதற்கு? ஏன் தாமதம்?", "எங்கு சாப்பிட்டேன்?" என்று எந்த
ஒரு கேள்வியும் வராது, யாரிடமும் சொல்லவும் தேவையில்லை என்றும் சந்தோஷமாக
இருப்பர்.
ஆகவே மேற்கூரியவாறே ஆண்கள் டைவர்ஸிற்குப் பிறகு நினைப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment